Day: April 8, 2025
காப்புறுதிப் பணத்துக்காக மகன்களைக் கொன்ற தாய்?
வியட்நாமில் தாய் ஒருவர் காப்புறுதிப் பணத்துக்காகத் தமது இரண்டு மகன்களைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறை அவர் மீது விசாரணை தொடங்கியுள்ளது. இரண்டு மகன்களும் குளியலறையில் மூழ்கி மாண்டதாக முதலில் நம்பப்பட்டது. ஆனால் இருவரும் ஒரே விதமாக மாண்டதால் காவல்துறைக்குச் சந்தேகம் வந்தது.மேலும் படிக்க...
ஜூன் 3ஆம் தேதிக்குள் அதிபர் தேர்தல்: தென்கொரியா

தென்கொரியா அதிபர் தேர்தலை ஜூன் மாதம் 3ஆம் தேதி நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. திரு யூன் சுக் இயோலை (Yoon Suk Yeol) அதிபர் பதவியிலிருந்து நீக்குமாறு கடந்த வெள்ளிக்கிழமை அரசமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.அதனால் புதிய அதிபரை 60 நாளுக்குள் தேர்ந்தெடுக்கவேண்டிய நிலைமேலும் படிக்க...
அமெரிக்காவின் புதிய வரிகள் இலங்கையில் ஏராளமானோரின் வேலையின்மைக்கு வழிவகுக்கும் – ரணில்

அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் இலங்கையின் ஏற்றுமதியைத் தடுக்கும் எனவும் தொழிற்சாலைகள் மூடப்படுவதுடன் ஏராளமானோரின் வேலையின்மைக்கு வழிவகுக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், இதனை நிவர்த்திப்பதற்கென சில தீர்வு நடவடிக்கைகளையும்மேலும் படிக்க...
ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (08) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை அதிக இலாபத்தை ஈட்டக்கூடிய அரச நிறுவனமாக மாற்றுவதற்கான பரிந்துரைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், மேலும் படிக்க...
கடந்தகால கொள்கைத் தவறுகளை சீரமைக்க அதிக விலை செலுத்தவேண்டிய நிலையில் மக்கள் – ஐ.எம்.எப்பின் முன்னாள் செயற்றிட்டப் பிரதானி

இலங்கையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறான கொள்கைத் தீர்மானங்கள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தம் இன்மை என்பவற்றின் விளைவாக ஏற்பட்ட நெருக்கடியைச் சீரமைப்பதற்கு துரதிர்ஷ்டவசமாக தற்போது மக்கள் அதிக விலையைச் செலுத்திவருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான முன்னாள் செயற்றிட்டப் பிரதானிமேலும் படிக்க...
தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்கான விசாரணைக் குழு – பிரேரணை நிறைவேற்றம்

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று (08) பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரேரணையை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர சமர்ப்பித்திருந்தார்.மேலும் படிக்க...
உலகம் மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறதா? அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததிலிருந்து உலகில் அதிகார சமநிலை மோசமடைந்துள்ளது. ஐரோப்பாவும் ரஷ்யாவும் நேருக்கு நேர் சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தை ஐரோப்பிய தலைவர்களும் நிபுணர்களும் வெளிப்படுத்துகின்றனர். இதற்கிடையில், போர்,மேலும் படிக்க...
சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்கள், வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்படும் – ஆனந்த விஜேபால

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும். ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற முறையற்றமேலும் படிக்க...
கனேடிய உயர்நீதிமன்றத் தீர்ப்பு ; இனப்படுகொலை மறுப்பை முறியடிக்கும் முக்கிய மைல்கல் அடைவு – தேசிய கனேடியத் தமிழர் பேரவை வரவேற்பு

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டம் தொடர்பான கனேடிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பானது, தமிழினப்படுகொலை இடம்பெறவில்லை என முன்வைக்கப்படும் மறுப்புக்களை முறியடிப்பதை இலக்காகக்கொண்டு உலகளாவிய ரீதியில் வாழும் தமிழர்களால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஊடாக எட்டப்பட்டுள்ள மிகமுக்கிய மைல்கல் அடைவாகும் என தேசிய கனேடியத் தமிழர்மேலும் படிக்க...
வடக்கு, கிழக்கு மக்களை அழித்த ராஜபக்ஷர்களுக்கும் பிள்ளையானுக்கும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் முன்வைக்கும் குற்றச் சாட்டுக்கள் அடிப்படை அற்றவை – பிமல் ரத்நாயக்க
2005ஆம் ஆண்டு ரணில் – சந்திரிக்காவை தோற்கடிப்பதற்காகவே ராஜபக்ஷர்களுக்கு ஆதரவளித்தோம். வடக்கு மற்றும் கிழக்கு மக்களை அழித்த ராஜபக்ஷர்களுக்கும் பிள்ளையானுக்கும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8)மேலும் படிக்க...
பிள்ளையான் கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்க்கிழமை (08) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரான அவர் மட்டக்களப்பில் உள்ள கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு புதிய காவல்துறை அதிகாரிகளிடம் – ஜனாதிபதி அநுரகுமார

சட்ட ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை காவல்துறையில் சாதகமான மாற்றம் அவசியம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது தொடர்பில் இலங்கை காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனைப் பேணுவது காவல்மேலும் படிக்க...
கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் படுகாயம்
கட்டுநாயக்க 18 ஆவது மைல்கல் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 43 வயதுடைய நபரொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர

அமெரிக்காவின் புதிய தீர்வை வரியினால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் ஏனைய விளக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுப்பி வைத்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த நாடாளுமன்றில் இதனைத் தெரிவித்தார்.மேலும் படிக்க...
மேலும் ஒரு மோசடியில் யோஷித்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பேரின் பெயர்களில் நான்கு சொகுசு BMW கார்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக COPA குழுவில் தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் தற்காலிகமாக வரி இல்லாமல் மின்சார வாகனங்களை இறக்குமதிமேலும் படிக்க...
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் – இதுவரை சுனாமி எச்சரிக்கை இல்லை
இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் (BMKG) தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்தது, ஆனால் பின்னர் அதுமேலும் படிக்க...
காசாவில் ஊடகவியலாளர்-களின் கூடாரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்-இருவர் பலி

காசாவில் இரண்டு மருத்துவமனைகளிற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் செய்தியாளர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள மருத்துவர்கள் ஆறு செய்தியாளர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த கூடாரங்களை இலக்குவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களைமேலும் படிக்க...
அதீத பாசம் காட்டிய தந்தை – ஆத்திரத்தில் குழந்தையை கொலைசெய்த தாய்

கணவன் அதீத பாசம் காட்டியதாக கூறி ஐந்து மாத ஆண் குழந்தையை தண்ணீர் பெரலுக்குள் அமிழ்த்தி கொலைசெய்த குற்றச்சாட்டில் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தமிழகம் – புதுக்கோட்டை மாவட்டம் புலியூரில் இடம்பெற்றுள்ளது. மணிகண்டன், லாவண்யா தம்பதியினரின் குழந்தையேமேலும் படிக்க...
அரசு முழு இனவாதமாக செயல்படுகின்றது ; இராசமாணிக்கம் சாணக்கியன்

அரசு முழு இனவாதமாக செயல்படுகின்றது. தமிழ் மக்கள் எமக்கு வாக்களிக்காமல் விட்டிருந்தால் அவர்கள் அநுராதபுரத்தில் கூட்டத்தை வைத்து அவர்களின் இன பிரச்சனையை மாத்திரம் கதைத்து விட்டு அனுப்பி இருப்பார்கள். மக்கள் எமக்கு வாக்களித்ததினால் எம்மால் இந்திய பிரதமரை சந்தித்து எமது கோரிக்கைகளை முன்வைத்துமேலும் படிக்க...
ஒரு நாடு வளர்ச்சியடைய ஏற்றுமதியை மையமாகக் கொண்ட அபிவிருத்தி அவசியம் என்பது பொருளாதார உண்மையாகும் ; எதிர்க்கட்சித் தலைவர்

ஒரு நாடு வளர்ச்சியடைவதற்கும் வளம் பெறுவதற்கும் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட அபிவிருத்தி அவசியம் என்பது முழு உலகமும் ஏற்றுக்கொண்ட பொருளாதார உண்மையாகும். இதன் பிரகாரம், ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தொலைநோக்குப் பார்வையுடன் 1990 களில் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்பமேலும் படிக்க...
