Day: April 4, 2025
பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் தாய்லாந்து பயணம்

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் நடைபெறும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (BIMSTEC) அமைப்பின் 6 ஆவது உச்சி மாநாட்டில் பங்குபற்றும் தலைவர்களுக்கான இராப்போசன விருந்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று கலந்து கொண்டிருந்தார். மேலும் படிக்க...
பரந்தனில் இராணுவத்தினர் வசமிருந்த 15 ஏக்கர் காணி விடுவிப்பு

கிளிநொச்சி – பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் இராணுவத்தினர் வசமிருந்த 15ஏக்கர் காணி இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் 15 ஏக்கர் காணி தொடர்ந்தும் இராணுவத்தினர் வசமிருந்த நிலையில் நேற்றையதினம் குறித்த காணி கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரனிடம்மேலும் படிக்க...
அமெரிக்காவுக்கு எதிராக வரி விதிப்பு அறிவிப்பை வெளியிட்டார் கனடா பிரதமர்

“அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும்” என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை அமுலுக்குக் கொண்டுவந்தார். கனடாமேலும் படிக்க...
அமெரிக்காவில் முதலீடுகளை நிறுத்த பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு

அமெரிக்காவில் திட்டமிடப்பட்ட முதலீட்டை ஐரோப்பிய நிறுவனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வியாழக்கிழமை (04) அழைப்பு விடுத்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க இறக்குமதிகள் மீதான உலகளாவிய வரிகளை உயர்த்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து பிரெஞ்சுமேலும் படிக்க...
பங்களாதேஷின் தலைமை ஆலோசகருடன் பிரதமர் மோடி சந்திப்பு

இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தாய்லாந்தில் பங்களாதேஷின் தலைமை ஆலோசகர் மொஹமட் யூனுஸுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் இரு நாட்டு தலைவர்களுக்கு இடையில்மேலும் படிக்க...
தாய்லாந்து, இலங்கைக்கான பயணத்திற்கு முன் மோடியின் அறிக்கை!
இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ பயணத்துக்கு முன்னதாக பாங்கொக்கில் நடைபெறும் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (03) தாய்லாந்து புறப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதிகளுக்கு 26% தள்ளுபடி பரஸ்பர வரிகளைமேலும் படிக்க...
ஹிக்கடுவயில் தம்பதியர் மீது துப்பாக்கி பிரயோகம்
ஹிக்கடுவ, கருவலகந்த பகுதியில் நேற்று (03) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 51 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். குமரகந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் திருமணமான தம்பதியினரை குறிவைத்துமேலும் படிக்க...
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Ofமேலும் படிக்க...
பொலிஸ் நிலையத்தில் இளைஞரின் மர்ம மரணம்; மனித உரிமைகள் குழு விசாரணைக்கு அழைப்பு!

கடந்த முதலாம் திகதி வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் 26 வயது இளைஞன் ஒருவர் மர்மமாக உயிரிழந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு கோரிக்கை விடுத்துள்ளது. நாவலையில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் நபர் ஒருவர் நுழைந்ததாக அளிக்கப்பட்டமேலும் படிக்க...
பூஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவர் மற்றொரு கைதியால் கொலை

பூஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த கைதியோடு அதே அறையிலிருந்த வேறு சில கைதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கைதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த கைதியின் சடலம் காலி தேசியமேலும் படிக்க...
நிராகரிக்கப்பட்ட 37 வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது. பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி இணைத்தல், சத்தியக் கடிதம் தொடர்பான பிரச்சினை மற்றும் பிறப்புச் சான்றிதழின் நகல் தொடர்பானமேலும் படிக்க...
கச்சத்தீவு மீட்பு; சட்டமன்றத்தில் ஸ்டாலின் முக்கிய தீர்மானம்

கச்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன் வைத்துள்ளார். தீர்மானத்தின்படி, “கச்சத்தீவை மீட்பது மட்டுமே தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித்தலைப் பாதுகாப்பதற்கான ஒரே நிரந்தர தீர்வு” என்று கூறப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் எதிர்கொள்ளும்மேலும் படிக்க...
