Day: March 25, 2025
எம்.ஏ.சுமந்திரன் : இந்தோ – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் இடையே சந்திப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இந்தோ – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லருக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் நேற்று இடம்பெற்றுள்ளதுடன் இதன்போதுமேலும் படிக்க...
வேட்பு மனுக்கள் நிராகரிப்பு – நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி

தங்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் – சுண்ணாகம் பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தாங்கள்மேலும் படிக்க...
மனோஜ் பாரதிராஜா காலமானார்

பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா தனது 46.வது வயதில் காலமானார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு தாஜ்மகால் படத்தின் மூலம் அறிமுகமான அவர்மேலும் படிக்க...
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வியாழேந்திரன் கைது

கடந்த ஆண்டு 15 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் செயலாளர் மற்றும் அமைப்பாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக இன்று (25.03.25) எஸ். வியாழேந்திரன்,மேலும் படிக்க...
சட்டவிரோத தையிட்டி விகாரையும் புதிய மடாலயமும் இன அழிப்பு தொடர்வதற்கான அடையாளங்களே! – அருட்தந்தை மா.சத்திவேல்

இன அழிப்பை தொடர்வார்கள் என்பதற்கான அடையாளங்களாகவே சட்ட விரோத தையிட்டி விகாரையும் புதிய மடாலயமும் அமைந்துள்ளன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று செவ்வாய்க்கிழமை (25)மேலும் படிக்க...
தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகரிடம் இன்று செவ்வாய்க்கிழமை (25) கையளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையில் 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுமேலும் படிக்க...
ஆஸ்கார் விருது பெற்றவர் இஸ்ரேலியப் படைகளால் சிறைபிடிப்பு

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மீண்டும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஆஸ்கர் விருது வென்ற இயக்குனரை இஸ்ரேல் சிறைபிடித்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. ஆஸ்கார் விருது பெற்ற பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹம்தான் பல்லால் என்பவரே இவ்வாறு சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் – பாலஸ்தீனமேலும் படிக்க...
பேராசிரியர் கணநாத் ஒபேசேகர காலமானார்

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் சிறப்புப் பேராசிரியரான கணநாத் ஒபேசேகர தனது 95 ஆவது வயதில் காலமானார். அவர் 1955 ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார், பின்னர் 1958 இல் வோஷிங்டன்மேலும் படிக்க...
உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கத்துக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் – சாகர காரியவசம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இரத்துச் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். கிராமத்தின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்மேலும் படிக்க...
இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் வெளிநாட்டு இணையத்தள விளையாட்டுகளுக்கு தடை

இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் 357 வெளிநாட்டு இணையத்தள விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சட்டவிரோதமாக இணையத்தள விளையாட்டுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளையும் இந்திய மத்திய அரசு இரத்து செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் வெளிநாட்டு இணையத்தளமேலும் படிக்க...
samsung இலத்திரனியல் நிறுவனத்தின் இணை தலைமை நிறைவேற்று அதிகாரி காலமானார்

samsung இலத்திரனியல் நிறுவனத்தின் இணை தலைமை நிறைவேற்று அதிகாரி ஹான் ஜாங்-ஹீ காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் மாரடைப்பு காரணமாக காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. ஹான் ஜாங்-ஹீ தனது 63 வயதில் காலமானார். 1962 ஆம் ஆண்டு பிறந்த ஹான், 2022மேலும் படிக்க...
நடிகரும் , வில் வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி காலமானார்

1986-ம் ஆண்டு வெளியான ‘புன்னகை மன்னன்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைனி. மதுரையை சேர்ந்த இவர் கராத்தே மாஸ்டர் ஆவார். சினிமாவுக்கு அப்பாற் வில் வித்தை பயிற்சியாளராகவும் ஹுசைனி திகழ்ந்துள்ளார். ஷிஹான் ஹுசைனி தனக்கு ரத்த புற்றுநோய் பாதிப்புமேலும் படிக்க...
நியூஸிலாந்தில் நிலநடுக்கம் : ரிக்டரில் 6.7 ஆக பதிவு

நியூஸிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் இன்று (மார்ச் 25) காலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இது ரிக்டரில் 6.7 ஆக பதிவானது. இதையடுத்து நிலநடுக்கம் உணரப்பட்ட சவுத்லாந்து மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை தரப்பட்டது. அந்த பகுதியில்மேலும் படிக்க...
கனடாவில் பொது தேர்தலை அறிவித்தார் பிரதமர்

கனடாவில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 28ஆம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் என அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். கனடாவின் பிரதமர் பதவியையும் ஆளும் லிபரல் கட்சியின் தலைமையையும் மார்க் கார்னி ஏற்றுக்கொண்ட பிறகு, நாட்டில் பொதுத்மேலும் படிக்க...
மீனவர் விவகாரம் – ஆராய இலங்கை வரும் ஐவர் அடங்கிய தமிழக குழு

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களைச் சந்தித்து அவர்களின் விடுதலைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவொன்று இலங்கைவரவுள்ளது. இராமேஸ்வரத்தில் உள்ள பாரம்பரிய இந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் வி.பி. சேசுராஜா மற்றும் நான்கு உறுப்பினர்கள்மேலும் படிக்க...
தேசபந்து தென்னகோனுக்கு மூன்று வேளையும் வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி?

சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு மூன்று வேளையும் வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, நேற்று (24) முதல் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைமேலும் படிக்க...
தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை முழுமையாக ஆதரிப்போம் – ஐக்கிய மக்கள் சக்தி

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்குவதற்கு போதுமான காரணங்கள் இருப்பதாகவும், அதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முழுமையாக ஆதரிப்பதாகவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றமேலும் படிக்க...
யாழில் 38 ஆண்டுகளுக்கு பின்னர் மனைவி மற்றும் பிள்ளையின் உடல்களை மதச்சடங்குகளுடன் தகனம் செய்த கணவர்

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகனின் உடல்கள் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் அண்மையில் மத சடங்குகளுடன் தகனம் செய்யப்பட்டன. மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்த பின்னர், வீட்டின் நடுவில் ஒரு குழி தோண்டிமேலும் படிக்க...
10 ஆப்பிரிக்க நாடுகளுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடும் இந்தியா

10 ஆப்பிரிக்க நாடுகளுடன் சேர்ந்து இந்தியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகளுடன் சேர்ந்து இந்தியா அவ்வப்போது கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், முதல் முறையாக 10 ஆப்பிரிக்க நாடுகளுடன் சேர்ந்துமேலும் படிக்க...
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பெரும் அமளி துமளி – சிறிதரன் எம்.பி வெளிநடப்பு

தனிப்பட்ட அரசியல் விவகாரங்கள் மற்றும் தனிநபர் அவதூறுகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு இல்லைமையை சுட்டிக்காட்டி கூட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியேறினார். யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தனிப்பட்ட விடையத்தை முன்னிறுத்தி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே கடும் வாய்த்தர்க்கம்மேலும் படிக்க...