Day: March 22, 2025
பிரான்ஸ்: chômage கொடுப்பனவில் மீண்டும் மாற்றம்

வேலையிழந்து chômage இல் இருந்து France Travail இனால் வழங்கப்படும் தொகை முடிவடைந்த பின்னர், தொடர்ச்சியாக 5 வருடங்களாவது வேலை செய்தோரிற்காக வழங்கப்படும் வாழ்வதார ஒற்றுமை உதவியான ASS (allocation de solidarité spécifique) மீழாய்வு செய்யப்பட்டு உதவித்தொகை மாற்றமடைய உள்ளது.மேலும் படிக்க...
ஆப்பிள் நிறுவனம் அறிமுகப் படுத்தவுள்ள Foldable iPhone

ஆப்பிள் நிறுவனம் Foldable iPhone-ஐ அறிமுகப்படுத்த உள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது மடிக்கக்கூடிய iPhone-ஐ தயாரித்து வருகின்றது. இந்த ஐபோன் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2027 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் சந்தைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும் படிக்க...
இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை கையாள வேண்டும் – ஜெனிவாவில் அனந்தி சசிதரன் வலியுறுத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கான உயர் வழிமுறைகளை கையாள வேண்டும் என்று வடமாகாண முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச்செயலாளருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நேற்று இடம்பெற்ற பிரிவு நான்கு நிகழ்ச்சி நிரலானமேலும் படிக்க...
வவுனியா சிறைச் சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று சனிக்கிழமை (22) சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரே இவ்வாறுமேலும் படிக்க...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை உறுதிப் படுத்தினார் ஜனாதிபதி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வரவு- செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சம்பூர் மின்மேலும் படிக்க...
2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு – செலவுத்திட்டமான 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில்மேலும் படிக்க...
கொழும்பு – கண்டி வீதியில் வாகன விபத்து – 35 பேர் காயம்

கொழும்பு – கண்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர். வரகாபொல தும்மலதெனிய பகுதியில் இன்று சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. காயமடைந்தவர்கள்மேலும் படிக்க...
விகாரைக்காக காணி அபகரிக்கப் பட்டதை கொழும்பில் தமிழர்கள் சிங்களத்திலேயே விளக்கினர்

யுத்தத்தில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணியில் இராணுவத்தின் ஆதரவுடன் வடக்கில் பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ளமைக்கான நம்பகமான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. காணி அபகரிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அது குறித்த ஆதாரங்களுடன், சிங்கள பௌத்த கருத்தை மாத்திரம் தொடர்ந்தும் வெளியிடும் ஊடகவியலாளர்களை சந்திக்கும்மேலும் படிக்க...
குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொன்ற கணவன்

குடும்ப தகராறு காரணமாக ரத்தோட்டை இன்று (22) அதிகாலை கணவன் ஒருவர் தனது மனைவியை வெட்டி கொலை செய்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் மாத்தளை வைத்தியசாலையில் துப்புரவுத் தொழிலாளியாகவும், கணவர் அதே வைத்தியசாலையில்மேலும் படிக்க...
ஐ.பி.எல் திருவிழா இன்று ஆரம்பம் – சேப்பாக்கத்தில் களமிறங்கும் அனிருத்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவுக்கு முன் பிரமாண்டமான தொடக்க விழா நடைபெறவுள்ளது. இதில் தென்னிந்திய நடிகர், நடிகைகள் எனப் பலர் கலந்து கொள்கின்றனர். நடிகை ஸ்ரத்தா கபூர், நடிகர் வருண் தவான், பாடகர் அரிஜித் சிங்,மேலும் படிக்க...
AI தொழில் நுட்பத்தில் உருவான முதல் செய்தித்தாளை வெளியிட்டு இத்தாலி சாதனை

கணினித் துறை மட்டுமின்றி கல்வி, மருத்துவம், இராணுவம் என எல்லா துறைகளிலும் AI பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இத்தாலியிலிருந்து வெளியாகும் இல்ஃபோக்லியோ, நாளிதழ் நிறுவனம், முழுவதும் AI தொழில்நுட்பத்தில் தயாரான நாளிதழை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவால் முழுமையாகத்மேலும் படிக்க...
போதைப் பொருள் கடத்தல் வழக்கு: இந்தோனேசியாவில் 3 தமிழருக்கு மரண தண்டனை?

இந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளனர். இதுகுறித்து சிங்கப்பூரில் வெளிக்கிழமைதோறும் வெளியாகும் ‘தப்லா’ ஆங்கில வார இதழில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டை சேர்ந்த ராஜு முத்துக்குமரன் (38), செல்வதுரை தினகரன்மேலும் படிக்க...
”மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடுகிறது” – அமித் ஷா குற்றச்சாட்டு

மொழியின் பெயரால் சிலர் நாட்டை பிளவுப்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திமுக மீது குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு துவங்கி நடைபெற்றுவருகிறது. இதில், பல்வேறு விடயங்கள் குறித்து விவாதங்கள் எழுந்துவருகின்றன. இரண்டாம் கூட்டத்மேலும் படிக்க...
பாலஸ்தீன மக்களின் விடுதலையானது, மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற நமது அனைத்து மக்களினது விடுதலையுடனும், ஒன்றிப் பிணைந்துள்ளது- சுவஸ்திகா அருளிங்கம்

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற நமது அனைத்து மக்களினது விடுதலையுடனும்,ஒன்றிப்பிணைந்துள்ளது எனவே அதனை நாங்கள் வேறாக பார்க்க முடியாது என சட்டத்தரணியும் சமூக அரசியல் செயற்பாட்டாளருமா சுவஸ்திகா அருளிங்கம் தெரிவித்தார். கொழும்பில் அமெரிக்க தூதரகத்தின் முன்பாக சுதந்திர பலஸ்தீனமேலும் படிக்க...
பொருளாதாரம் பற்றி போலி தகவல்களை பரப்பாதீர் – அநுரகுமார திஸாநாயக்க

பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்துவதற்குரிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் பற்றி போலி தகவல்களை பரப்ப வேண்டாம், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் எதிரணி உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இந்நாட்டு மக்களை ஒன்றிணைத்து நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு கடந்தகாலங்களில்மேலும் படிக்க...
யாழில் பெருந்தொகையான போதைப் பொருள் மீட்பு

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் 154 பொதிகளில் 300 கிலோ கிராமிற்கும் அதிகமான கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனைமேலும் படிக்க...
கருணா, பிள்ளையான் மீண்டும் இணைவு

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (22) மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில்மேலும் படிக்க...
கிரிப்டோகரன்சியை சட்டப்பூர்வமாக்க பாகிஸ்தான் திட்டம்

பாகிஸ்தான், வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கும் அதன் பொருளாதாரத்தை நவீனமயமாக்குவதற்கும் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை சட்டப்பூர்வமாக்க திட்டமிட்டுள்ளது. நாட்டின் நிதியமைச்சரின் தலைமை ஆலோசகரும், புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் கிரிப்டோ கவுன்சிலின் (PCC) தலைமை நிர்வாக அதிகாரியுமான பிலால் பின் சாகிப், ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த செவ்வியில்மேலும் படிக்க...