Day: March 9, 2025
தேசிய மக்கள் சக்தி தேர்தல்களில் வழங்கிய வாக்குறுதிகள் முற்றிலும் பொய்யானது என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் – உதய கம்மன்பில

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் முற்றிலும் பொய்யானது என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்துக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும். முன்னாள்மேலும் படிக்க...
தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்துவைப்பு

இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகமும் வன்னிபாராளுமன்ற உறுப்பினர்களின் மக்கள் தொடர்பாடல் காரியாலமும் வவுனியா குருமன்காடு காளிகோவில் வீதியில் ஞாயிற்றுக்கிழமை (09) திறந்துவைக்கப்பட்டது. நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்ட கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், எம்.எ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம் ஆகியோர் புதிய அலுவலகத்தை நாடாவெட்டி திறந்துவைத்தனர். இதன்போதுமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – உயர்திரு. இலங்கையர் கனகசபை அரியரட்ணம் (தங்கராசா) அரியம் மாஸ்டர் (09/03/2025)

தாயகம் இலங்கை புங்குடுதீவு 4ம் வட்டாரம் இறுபிட்டியை பிறப்பிடமாகவும், கரம்பன் ஊர்காவற்றுறையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் பாரிஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த உயர்திரு.இலங்கையர் கனகசபை அரியரட்ணம் (தங்கராசா) அரியம் மாஸ்டர் அவர்கள் 04/03/2025 அன்று பிரான்சில் காலமானார். அன்னார் புங்குடுதீவு 4ம் வட்டாரத்தை சேர்ந்தமேலும் படிக்க...
இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பாம்பனில் போராட்டம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் 14 பேரைக் கைது செய்தனர்.மேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இதன்படி, 336 உள்ளூராட்சி சபைகளுக்கு மொத்தம் 17,296,330 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்கமேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டி

”இலங்கை தமிழரசுக் கட்சி இம்முறை தனித்து உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும்” இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற இலங்கைமேலும் படிக்க...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இரவு நேரத் தாக்குதலில் 25 பேர் பலி

உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனேட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள டோப்ரோபில்லாவில்இ ரஷ்யப் படைகள் இரவு முழுவதும் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனை உக்ரைனின் அவசர சேவைகள் துறை உறுதி செய்து தெரிவித்துள்ளது. மேலும் இந்தத்மேலும் படிக்க...
கனடாவில் துப்பாக்கிச்சூடு – 12 பேர் காயம்

கனடாவின் டொராண்டோவின் கிழக்கே உள்ள ஸ்கார்பரோ நகரிலுள்ள கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் 20 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன்மேலும் படிக்க...
அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி – டொனால்ட் டஸ்க் அதிரடி அறிவிப்பு

போலந்தில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக அந் நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) தெரிவித்துள்ளார். போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அனைத்து வயது வந்த போலந்துமேலும் படிக்க...
மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரிப்பு

இந்தியாவில் ‘மின்சாரத்தினால் இயங்கும் வாகனங்களின்‘ விற்பனை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கடந்த பெப்ரவரி மாதத்தில் 8,968 மின்சார பயணிகள் வாகனங்கள் இந்தியச்மேலும் படிக்க...
முத்தையா முரளீதரனின் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக நிலம் ; வெடித்தது புதிய சர்ச்சை

இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளீதரனின் சிலோன் பெவெரேஜர்ஸ் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக 25 ஏக்கர் நிலத்தை மாநில அரசாங்கம் ஒதுக்கியுள்ளமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யுனிஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் யூசுவ் தரிகாமி இந்த விடயம்மேலும் படிக்க...
இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டாரா கைது

பிலியந்தலை கொல்லமுன்ன பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இதன்படி, பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக இந்தக் கைது நடவடிக்கைமேலும் படிக்க...
பறிமுதல் செய்யப்படுமா தேசபந்துவின் சொத்துக்கள்?

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்து வந்தால், சட்ட ரீதியாக அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். இன்று (09)மேலும் படிக்க...
பிறந்தநாள் வாழ்த்து -சுப்பிரமணியம் விகிர்தன் (09/03/2025)

பிரான்ஸ் Noisy Champs நகரில் வசிக்கும் சுப்பிரமணியம்-மனோகரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் விகிர்தன் தனது பிறந்த நாளை 09ம் திகதி பங்குனி மாதம் ஞாயிற்றுக் கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் விகிர்தனை அன்பு அப்பா, அன்புமேலும் படிக்க...
இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஆரம்பம்

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில், வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு,மேலும் படிக்க...
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 13 காவல்துறையினர் பலி
சிரியாவில் கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 காவல்துறையினர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிரியாவின் கடற்கரை நகரமான லடாகியா மாகாணம் அல்வாடி பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசுமேலும் படிக்க...