Day: March 2, 2025
புதிய கூட்டணியால் தமிழரசுக் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை-எம்.ஏ.சுமந்திரன்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி அனைத்து மாவட்ட கிளை உறுப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடி வருகிறது. அந்த வகையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்றைய தினம்மேலும் படிக்க...
அரசியல் பழி வாங்கல்களுக்கு முகம் கொடுப்பது தொடர்பில் மொட்டுக் கட்சிக்குள் கலந்துரையாடல் – நாமல் ராஜபக்ஷ
அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகம் அரசியல் ரீதியாக வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் வியாபித்துள்ளதாகவும் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே இந்த விடயங்கள் தொடர்பில்மேலும் படிக்க...
நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய கிரிக்கெட் அணி

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் 12 ஆவது போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்டமேலும் படிக்க...
மீனவர் பிரச்சினை தொடர்பான இந்தியா – இலங்கை கூட்டு பணிக்குழு கூட்டம் விரைவில் – அண்ணாமலை

மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்தியா – இலங்கை கூட்டு பணிக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இராமநாதபுரத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
இந்தியாவைக் கடந்து இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடு வராது!- மனோ கணேசன்

இந்தியாவைக் கடந்து இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடு வராது எனவும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் வெளியேற்றம் சர்வதேச முதலீட்டாளருக்கு இலங்கை குறித்த எதிர்மறை செய்தியைக் கொண்டு சென்று விட்டது எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன்மேலும் படிக்க...
துர்நாற்றம் வீசும் சடலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட இலங்கையில் இந்திய இராணுவத்தின் குற்றங்கள் குறித்த அறிக்கை

எண்பதுகளின் பிற்பகுதியில் இலங்கைக்கு வந்த இந்தியப் படைகளால் 35 வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட படுகொலையில் உயிர் பிழைத்தவர்களிடம் இருந்து தகவல்களை சேகரித்து சர்வதேச மனித உரிமை சட்டத்தரணி தலைமையிலான அமைப்பினால் தயாரிக்கப்பட்ட புதிய அறிக்கை வடக்கில் வெளியிடப்பட்டுள்ளது. படுகொலையில் ஈடுபட்ட இந்தியமேலும் படிக்க...
மத மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை உருவாக்குவதற்கு புதிய வாய்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில்மேலும் படிக்க...
தேசிய மகளிர் வாரம் : சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சு பிரகடனம்

எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறுவர் மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சினால் தேசிய மகளிர் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஆண்டு மகளிர் தினத்திற்கான தேசிய கருப்பொருள் “நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள்மேலும் படிக்க...
எரிபொருள் நிலைய உரிமையாளர்களே திட்டமிட்டு மீள வாகன வரிசையை ஏற்படுத்தியுள்ளனர் ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் மீண்டும் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனினும் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது. எரிபொருள் நிலையத்தில் உரிமையாளர்களே திட்டமிட்டு இவ்வாறானதொரு நிலையை உருவாக்கியுள்ளனர்மேலும் படிக்க...
பருத்தித்துறையில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கிச் சூடு

பருத்தித்துறை பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி மணல் மற்றும் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளுடன் பயணித்த லொறியொன்ற பின்தொடர்ந்துச் சென்ற பொலிஸார் வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து லொறியில் இருந்த சாரதியும் உதவியாளரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
யாழில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம், சுதுமலை பகுதியில் 1600 போதை மாத்திரைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இருவரையும் மானிப்பாய் பொலிஸ் நிலையில்மேலும் படிக்க...
விக்டர் ஐவனுக்கு யாழ். ஊடக அமையத்தில் அஞ்சலி

இலங்கையின் ஊடக வரலாற்றில் புலனாய்வு செய்தியிடல் ஊடக பரப்பில் கோலோச்சி மறைந்த, ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவனுக்கு யாழ் ஊடக அமையத்தில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் பங்களிப்புடன் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின்மேலும் படிக்க...
உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

டேராடூன்: உத்தராகண்டில் எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) தொழிலாளர்கள் 55 பேர் கடும் பனிச்சரிவில் சிக்கிய சம்பவத்தில் 50 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சிய 5 பேரை மீட்கும் பணி நீடிக்கிறது. இதற்கிடையில் மீட்கப்பட்டவர்களில் 4 பேர் நேற்று உயிரிழந்தனர். உத்தராகண்ட் மாநிலம்மேலும் படிக்க...
துருக்கியுடன் நாற்பது வருடகால யுத்தம் – யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்டனர் குர்திஸ் போராளிகள்

துருக்கியுடன் நாற்பது வருடகாலமாக போரிட்ட குர்திஸ் போராளிகள் அமைப்பான பிகேகே யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது. சிறையில் உள்ள அதன் தலைவர் அப்துல்லா ஒகலான் ஆயுதங்களை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்து இரண்டு நாட்களின் பின்னர் அந்த அமைப்பு யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க...
டிரம்ப் மோதலுக்குப் பின் ஸெலன்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு

அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப், துணை ஜனாதிபதி வான்ஸ் ஆகியோர் உக்ரேனிய ஜனாதிபதி ஸெலன்ஸ்கியை சாடிய பின் ஸெலன்ஸிக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இரு தலைவர்களுக்கும் ஏற்பட்ட மோதலையடுத்து கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்குப் பகுதிகளைச் சேர்ந்தமேலும் படிக்க...
பிரிட்டிஷ் மக்களின் நூறு வீத ஆதரவு உங்களுக்குள்ளது – உக்ரைன் ஜனாதிபதிக்கு பிரிட்டிஸ் பிரதமர் தெரிவிப்பு

பிரிட்டனிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கியை தனது அலுவலகத்தில் சந்தித்துள்ள பிரிட்டிஸ் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மெர் ஜெலென்கியை பிரிட்டிஸ் மக்கள் 100 வீதம் ஆதரிக்கின்றனர் என தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையிலான சந்திப்பின்போது 10 டவுனிங் ஸ்ரீட்டிற்கு வெளியேமேலும் படிக்க...
பாலியல் வன்கொடுமை செய்பவர்களை அதே இடத்தில் தண்டிக்க வேண்டும்! – அன்புமணி ராமதாஸ்

தனது ஆட்சியில் , பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் அதே இடத்தில் வைத்தே தண்டிக்கப்படுவார்கள் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுமேலும் படிக்க...
பதுளையில் மண்சரிவு ; இரண்டு வீடுகள் முற்றாக சேதம்

பதுளை, தெமடவெல்லின்ன கிராமத்தில் தொடர்ச்சியாக பெய்த அடைமழையினால் நேற்று சனிக்கிழமை (01) இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளது. மண்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதேவேளை, மண்சரிவு காரணமாக பதுளை தெமடவெல்லின்னமேலும் படிக்க...
ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 வாகனங்கள் ஏலம்

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட 6 வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்கான ஏலம் நடைபெற்றதுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தல் மற்றும் நிதி பொறுப்புக்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு இவ்வாறு ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமானமேலும் படிக்க...