Day: February 24, 2025
ராஜஸ்தான் சட்டசபைக்கு வெளியே வெடித்தது வன்முறை

ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சட்டசபைக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் திங்கள்கிழமை (24) மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக ராஜஸ்தான் அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்கார்கள் பேரணியாக சட்டமேலும் படிக்க...
நிரந்தர போர் நிறுத்தத்திற்கான நேரம் இது – அன்டோனியோ குட்டரெஸ்

நிரந்தர போர் நிறுத்தத்திற்கான நேரம் இதுவென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார். மனித குலத்தின் ஒக்சிஜன் மனித உரிமைகள்மேலும் படிக்க...
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை – செவ்வந்தியின் புதிய புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார்

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய தற்போது தேடப்பட்டு வரும் பெண்ணின் புதிய படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பெண் நீர்கொழும்பு கட்டுவெல்லகம பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி எனமேலும் படிக்க...
தையிட்டி விகாரை பிரச்சினையை ஆறு மாத காலத்துக்குள் தீர்த்து வைப்போம் – சிவசேனை அமைப்பினர்

தையிட்டி விகாரை பிரச்சினையை ஆறு மாத காலத்துக்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாமும்மேலும் படிக்க...
பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையேயான மோதல்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் அச்சப்பட வேண்டும்?

பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் பயப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயப்படுகிறார்களானால், அது பாதாள உலகத்திற்கும்மேலும் படிக்க...
ஜெர்மனி தேர்தல்: பழமைவாத கட்சி வெற்றி – மக்ரோன் வாழ்த்து

நேற்று பெப்ரவரி 23, ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பழமைவாத கட்சியான (des conservateurs) வெற்றி பெற்றதை அடுத்து, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அக்கட்சியின் தலைவர் Friedrich Merz, நாட்டின் புதிய அதிபராக (chancelier) விரைவில்மேலும் படிக்க...
ஈழத்தமிழர்களின் அரசியல் நியாயங்களை உலகிற்கு வெளிப்படுத்தியவர் மூத்த செய்தியாளர் ஆனந்தி – தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம்

ஈழத்தமிழ் ஊடக உலகின் மூத்த செய்தியாளர் – செய்தி விமர்சகர் ஆனந்தி சூரியபிரகாசம் அவர்களின் மறைவு சர்வதேச ஊடகத்துறைக்குப் பேரிழப்பு என தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்தின் செயலாளர் கே. ஜெயந்திரன் கையொப்பமிட்டு அனுதாபச் செய்திக்மேலும் படிக்க...
அதிபர் பதவியை விட்டு விலகத் தயாா்

உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் நான் அதிபர் பதவியை விட்டு விலக தயாராகவே இருக்கிறேன் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகின்ற உக்ரைன்-ரஷியாவிற்கிடையேயான போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதிமேலும் படிக்க...
உக்ரேன் போர் 3 ஆண்டு நிறைவு; தலைநகரில் ஒன்று கூடிய ஐரோப்பிய, கனேடிய தலைவர்கள்

ஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஐரோப்பா மற்றும் கனடாவைச் சேர்ந்த பல தலைவர்கள் திங்கட்கிழமை (24) உக்ரேனின் தலைநகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோமேலும் படிக்க...
போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்தும் கவலைக்கிடம்; வத்திக்கான் தகவல்
நிமோனியா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள புனித போப் பிரான்சிஸ், இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், அவரது சிறுநீரக செயல்பாட்டில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வத்திக்கான் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்துள்ளது. நீண்டகால ஆஸ்துமா போன்ற சுவாச நெருக்கடியை எதிர்கொண்ட 88 வயதானமேலும் படிக்க...
மீனவர்கள் கைது; ராமேஸ்வரத்தில் வேலைநிறுத்தப் போராட்டம்

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் திங்கட்கிழமை (24) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக ராமேஸ்வரம் மீனவர்கள் 32மேலும் படிக்க...
சீமான் மீதான பாலியல் வன்கொடுமை புகார் : விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமான் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பொலிஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராகமேலும் படிக்க...
400 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

கிளிநொச்சி மாவட்டத்தின் உமையாள்புறம் பகுதியில் 400கிலோவுக்கும் அதிகமான சுமார் 6கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து லொறியொன்றில் சூட்சுமமாக கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்மேலும் படிக்க...
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளது

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.அரசியல் நோக்கங்களுடன் தேசிய பாதுகாப்பு தொடர்பாக சில தரப்பினரால் வெளியிடப்படும் அறிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லைமேலும் படிக்க...
திருகோணமலை மாவட்டத்தில் புத்தர் சிலையை வைத்து விவசாயக் காணிகள் அபகரிப்பு

புல்மோட்டை கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட புல்மோட்டை சாத்தனமடுக் குளப்பகுதியின்கீழ் விவசாயத்தில் ஈடுபட்டுவந்த விவசாயிகளின் காணியில் பௌத்த மதகுரு ஒருவர் புத்தர் சிலையை வைத்து அதனைச் சுற்றியுள்ள விவசாய காணிகளில் பல வருட காலமாக விவசாயம் மேற்கொண்டுவந்த விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்குத் தடைவிதித்துமேலும் படிக்க...
காவல்துறையினர் மரண தண்டனை தொடர்பில் முடிவெடுத்தால் நாளை அரசியல் கொலைகளும் படிப்படியாக இடம்பெறலாம் – ரஜீவ்காந்

யாருக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்ற முடிவைக் காவல்துறையினர் எடுப்பதாகயிருந்தால் நாளை நாட்டில் எவரின் உயிருக்கும் உத்தரவாதமற்ற நிலைதான் உருவாகும் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; ‘கொழும்பில் இடம்பெற்ற இரட்டைக்மேலும் படிக்க...
