Day: February 21, 2025
சிங்கப்பூரில் மலேசிய தமிழருக்கு தூக்கு: கடைசி நேரத்தில் நிறுத்தம்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கடைசி நேரத்தில் நிறுத்திவைத்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பன்னீர் செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியா மற்றும் சிங்கப்பூரில் சமூகமேலும் படிக்க...
உலகின் ‘முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கை இமாம்’ சுட்டுக் கொல்லப்பட்டார்

உலகின் முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கை இமாம் என்று அழைக்கப்படும் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ், தென்னாப்பிரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார். 57 வயதான அவர், கேப் டவுனில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பிற ஓரங்கட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக கருதப்படும் ஒரு மசூதியை நடத்தி வந்தார். தெற்குமேலும் படிக்க...
சூடான் உள்நாட்டுப் போரில் 200 பேர் படுகொலை
சூடானில் 3 நாட்களாக நீடித்து வரும் உள்நாட்டு போரில் 200 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு முதல் சூடானில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அவர்களுக்கு எதிராக துணை இராணுவம்மேலும் படிக்க...
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக் குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (78) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியாகாந்தி அனுமதிக்கப்பட்டு, தற்போது வைத்தியா் குழுவின்மேலும் படிக்க...
நாளை மீண்டும் ஆரம்பமாகும் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை

ஒத்திவைக்கப்பட்டிருந்த நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவையானது நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாளை காலை 7.30 அளவில் நாகப்பட்டினத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 அளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தைச் சென்றடையும். இந்த கப்பல்மேலும் படிக்க...
வலி- வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் – கடற்றொழில் அமைச்சர்

யாழ்ப்பாணம் வலி- வடக்கில் காவல்துறையினர் மற்றும் முப்படையினரிடமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதோடு அப்படி விடுவிக்கப்படுகின்ற காணிகளில் மக்கள் குடியிருப்புக்களை அமைத்துக்கொள்ள இசைவளிக்கப்பட வேண்டுமெனப் பாதுகாப்பு அமைச்சுசார் குழுக் கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்மேலும் படிக்க...
பாதாள குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை பகிரங்கப் படுத்துங்கள் – ஹர்ஷண ராஜகருண அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

பாதாள குழுக்களுடன் கடந்த கால அரசாங்கத்தின் அரசியல் தரப்பினர் தொடர்புப்பட்டுள்ளார்கள் என்று பொதுவாக குறிப்பிடாமல், உண்மையாகவே தொடர்புக் கொண்டிருந்தவர்களை மக்களுக்கு அறிவித்து சட்டத்தின் முன் அவர்களை நிறுத்துங்கள். இறந்த காலத்தை விமர்சித்து எதிர்காலத்தை வீணடிக்காதீர்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றமேலும் படிக்க...
கொட்டாஞ்சேனையில் சற்று முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது

கொழும்பு (Colombo) – கொட்டாஞ்சேனை (Kotahena) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான துப்பாக்கிதாரி சறறுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிதாரி துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நிகழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார். இதையடுத்து, கொழும்பு ஒருகொடவத்தமேலும் படிக்க...
யாழ் . ஊடகவியலாளர்களிடம் 06 மணி நேர விசாரணை

“தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ” என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி காவல்துறையினா் சுமார் 06 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். ” தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ..” என நாடாளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழில். 27ஆம் திகதி போராட்டம்

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதேமேலும் படிக்க...
லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு – போர்க் குற்றவாளிகளை பாராட்டியவர் என குற்றச்சாட்டு

இலங்கை பாடகி யோகானியின் இசைநிகழ்ச்சியொன்று இன்று லண்டனில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான அரங்கில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு புலம் பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யொகானி போர்க்குற்றவாளிகளை போற்றும் பாடல்களை பாடியதை சுட்டிக்காட்டி இந்த எதிர்ப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் இனப்படுகொலையில்மேலும் படிக்க...
மலையக மக்களுக்கு வீட்டு முகவரிகள் – வழங்கும் பணியை ஆரம்பித்தது அரசாங்கம்

பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களுக்கு வீட்டு முகவரியை பெற்றுக்கொடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிப்பட்ட முகவரியை வழங்கும் வேலைத்திட்டம்மேலும் படிக்க...
சசாரம் வன்முறை: பீகாரில் தரம் 10 மாணவர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் சசாரம் பகுதியில் இரு குழுக்களிடையே வெள்ளிக்கிழமை (21) ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்த வன்முறையில் மேலும் இரு மாணவர்கள் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பரீட்சை நிலையத்தில் மோசடிமேலும் படிக்க...
மூன்று மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை வாங்க தடை

ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான கோழிகள் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறது. இதனை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்துமேலும் படிக்க...
இஸ்ரேலில் வெடித்து சிதறிய மூன்று பேருந்துகள் – மேற்குகரையில் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு

இஸ்ரேலில் மூன்று பேருந்துகள் வெடித்துசிதறிய சம்பவத்தின் பின்னர் மேற்குகரையில் இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உத்தரவிட்டுள்ளார். இந்த பேருந்து வெடிப்புகள் காரணமாக எவரும் காயமடையாத அதேவேளை இது பயங்கரவாத தாக்குதலாகயிருக்கலாம் என இஸ்ரேலிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.மேலும் படிக்க...
உயிரிழந்த பணயக் கைதிகளின் உடல்களை கையளித்தது ஹமாஸ்

ஹமாஸ் அமைப்பு தன்னிடம் பணயக்கைதிகளாகயிருந்தவேளை உயிரிழந்த நான்கு இஸ்ரேலியர்களின் உடல்களை செஞ்சிலுவை சங்கத்திடம் கையளித்துள்ளது. உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் கையளித்துள்ளமை இதுவே முதல்தடவை. செஞ்சிலுவை சங்கம் தற்போது அந்த உடல்களை இஸ்ரேலை நோக்கி கொண்டு செல்கின்றது. பிபாஸ் குடும்பத்தை சேர்ந்தமேலும் படிக்க...
ஜா-எல பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி
ஜா-எல பமுணுகம, மோகன்வத்த கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிதாரி கடவத்தை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுமேலும் படிக்க...