Day: February 19, 2025
வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்திற்கான முதல் அடியெடுத்து வைக்கப்பட்டுள்ளது

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்திற்கான முதல் அடியெடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். முறையான பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம், 2028 ஆம் ஆண்டளவில் கடன் திருப்பிச் செலுத்தும் சாத்தியம் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்புமேலும் படிக்க...
கணேமுல்ல சஞ்சீவ கொலையைத் தொடர்ந்து தனக்கும் பாதுகாப்புக் கோரும் அர்ச்சுனா

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19/2/2025) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பொது அமர்வுகளின் போதும் தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தமக்கு பலரால் கடந்த சிலமேலும் படிக்க...
மூன்று சட்டங்களை அமல் படுத்த மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த பிரஞ்சு ஜனாதிபதி ஆலோசனை?

அரச தலைவரின் விருப்பத்திற்கும், அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் இழுபறி நிலையில் இருக்கும் மூன்று சட்டங்களை கொண்டு வர பிரஞ்சு மக்களிடம் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசுத்தலைவர் Emmanuel Macron கடுமையாக ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒன்று வதிவிட ஆவணமற்றமேலும் படிக்க...
ஆர்ஜென்டினாவில் அதிபர் ஜேவியர் மிலேவிற்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்

ஆர்ஜென்டினாவில் அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. ஆர்ஜென்டினாவில் அதிபர் ஜேவியர் மிலே (வயது 54) தலைமையிலான வலதுசாரி லிபர்டி அட்வான்சஸ் கூட்டணி கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இவர் லிப்ரா என்ற கிரிப்டோகரன்சி குறித்து எக்ஸ் வலைதளத்தில்மேலும் படிக்க...
பிரான்சில் உள்ள உணவகங்களுக்கு புதிய சட்டம்

இன்று பெப்ரவரி 19 ஆம் திகதி புதன்கிழமை முதல் பிரான்சில் உள்ள உணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகளுக்கு புதிய சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவில் பயன்படுத்தப்படும் இறைச்சிகள் குறித்த சலக விபரங்களையும் காட்சிப்படுத்துவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறைச்சி எந்த நாட்டில் இருந்து வருகிறது.மேலும் படிக்க...
பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் சுமந்திரன் சந்திப்பு

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரான அன்ட்ரூ பெட்ரிக் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனை இன்று புதன்கிழமை (19/2/2025) சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சுமந்திரனிடம் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாகக் கேட்டறிந்ததோடு, வடக்கின் பொருளாதார நிலை மற்றும் சமூகப்மேலும் படிக்க...
நிமோனியா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் பாப்பரசர் பிரான்ஸிஸ் – வத்திக்கான்
பாப்பரசர் பிரான்ஸிஸுக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. 88 வயதான பாப்பரசர் சுவாச நோயால் பாதிக்கப்பட்டு ரோமில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை (14) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பாப்பரசருக்கு நேற்றையதினம் மேற்கொண்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில்மேலும் படிக்க...
தொடருந்திலிருந்து தவறி விழுந்து வெளிநாட்டு பெண்ணொருவர் பலி

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த பொடிமெனிக்கே தொடருந்திலிருந்து தவறி விழுந்து வெளிநாட்டு பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பதுளை தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் படம்மேலும் படிக்க...
“ஹரக் கட்டா” சி.ஐ.டியிலிருந்து தப்பிச் செல்வதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “ஹரக் கட்டா” என்றழைக்கப்படும் நந்துன் சிந்தக என்பவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் செல்வதற்கு உதவி செய்த சம்பவம் தொடர்பில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று புதன்கிழமை (19)மேலும் படிக்க...
மக்களின் விருப்பின்றி மன்னாரில் மேற்கொள்ளப்பட இருக்கும் கனிய மணல் அகழ்விற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கலாம்: நாடாளுமன்றில் ரவிகரன் எச்சரிக்கை

மன்னார்த்தீவில் மக்களின் விருப்பமின்றிக் கனிய மணல் அகழ்வதற்காக இன்று (19/2/2025) மேற்கொள்ளப்படவுள்ள கள ஆய்வினை உடனடியாக நிறுத்த வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்றுக் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களின் விருப்பமின்றி இந்தக் கள ஆய்வு இடம்பெற்றால்மேலும் படிக்க...
இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக ஞானேஷ் குமார் பதவியேற்பு

இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக ஞானேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த காலத்தில் இப் பதவியில் இருந்த ராஜீவ் குமார் நேற்று செவ்வாய்க்கிழமையோடு ஓய்வு பெற்றதையடுத்து ஞானேஷ் குமார் பதவியேற்றுக் கொண்டார். நாட்டின் 26 ஆவது தேர்தல் ஆணையாளராக இன்று புதன்கிழமைமேலும் படிக்க...
இன்று முதல் குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் 24/7 சேவை

கடவுச்சீட்டு விநியோகத்திற்காக குடிவரவு-குடியகல்வு திணைக்களம் இன்று முதல் வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரமும் இயங்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதன்படி, கொழும்பு, பத்தரமுல்லைக்கு விசேட பஸ் சேவை இன்று முதல் இரவு வேளைகளில் இடம்பெறும்மேலும் படிக்க...
நீதிமன்ற துப்பாக்கிச் சூடு: துப்பாக்கியை மறைக்க சட்டப் புத்தகத்தை பயன்படுத்திய சந்தேக நபர்

கொழும்பு, நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், குற்றவியல் நடைமுறைச் சட்டப் புத்தகத்தில் மறைத்து ஆயுதத்தை கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதாள உலக உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு ஆயுதம்மேலும் படிக்க...
மித்தெனிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குப் பின்னால் இருப்பது பாதாள உலக கும்பலின் தலைவரா?

மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடேவத்த சந்திக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பாதாள உலக கும்பலின் தலைவர் ஒருவரால் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, மித்தெனிய, கடேவத்த சந்திக்கு அருகில்மேலும் படிக்க...
யாழ் நூலகத்தின் டிஜிட்டல் மயமாக்கத்திற்கு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துமாறு பரிந்துரை

யாழ்ப்பாண நூலகத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக இந்த வருடம் வரவுசெலவுத்திட்டத்தில் 100 மில்லியன் ரூபா ஒதுக்கியதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் நன்றி தெரிவித்தார் நூலக சேகரிப்பை டிஜிட்டல் மயமாக்க இந்த நிதியின்மேலும் படிக்க...
நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு! கனேமுல்ல சஞ்சீவ பலி

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கனேமுல்ல சஞ்சீவ உயிரிழந்துள்ளார். கனேமுல்ல சஞ்சீவவை விசாரணை நடவடிக்கைகளுக்காக பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்திலேயே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் சட்டத்தரணியின்மேலும் படிக்க...
வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய நிதி ஒதுக்கப்படவில்லை – சாமர சம்பத்

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 5000 மில்லியன் ரூபாவும், முல்லைத்தீவு பகுதியில் பாலம் நிர்மாணிப்புக்கு 1000 மில்லியன் ரூபாவும் என்ற அடிப்படையில் 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய மாகாணங்களுக்கு இவ்வாறு பாரிய நிதி ஒதுக்கப்படவில்லை. அனைத்து மாகாணங்களுக்கும் அபிவிருத்திக்கு சமமானமேலும் படிக்க...

