Day: February 15, 2025
அரசின் வாக்குறுதிகள் நிறைவேற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பு! – கனேடியத் தூதுவர் தெரிவிப்பு

“தற்போதைய அரசின் வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது. அரசு கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மக்கள் ஆவலாக இருக்கின்றமையை நான் சந்தித்த சிவில் சமூகக் குழுக்களிடமிருந்து அறியக் கூடியதாக இருந்தது.” – இவ்வாறு இலங்கைக்கான கனேடியத்மேலும் படிக்க...
இஸ்ரேலிய பிணைக் கைதிகள் மூவரை விடுவித்தது ஹமாஸ் – பதிலுக்கு 369 பாலஸ்தீன கைதிகள் விடுவிப்பு

பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் மூவரை ஹமாஸ் தீவிரவாத இயக்கம் விடுவித்தது. பதிலுக்கு, நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. கடந்த 2023, அக்டோபர் முதல் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 48,219 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில்,மேலும் படிக்க...
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கருக்கான சொத்து ஆவணங்கள் ஒப்படைப்பு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கருக்கான சொத்துக்களின் ஆவணங்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 1991-96 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வழக்குதொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையின்போது தமிழகமேலும் படிக்க...
“இந்தியர்களை நாடு கடத்திய விதம் வெட்கக்கேடானது!” – பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கருத்து

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை சமீபத்தில் அமெரிக்க அரசு திருப்பி அனுப்பிய விதம் ‘கொடூரமானது, மிகவும் கேவலமானது’ என்று பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உமா பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள உமாமேலும் படிக்க...
தலைமறைவான குற்றவாளிகளை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர விசேட வேலைத்திட்டம்

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றங்களுடன் தொடர்புடையவர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கான வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விசேட செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க, இந்தியாவில் தலைமறைவாகியுள்ள, குற்றவாளிகளைமேலும் படிக்க...
இளங்குமரன் எம்.பியை நேரில் சென்று பார்வையிட்டார் பிரதமர்

விபத்தில் சிக்கிக் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை பிரதமர் ஹரிணி அமரசூரிய சற்று முன்னர் நேரில் சென்று பார்வையிட்டார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனின் உடல்மேலும் படிக்க...
நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட ஆரம்பித்தன

நாடளாவிய ரீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) ஏற்பட்ட மின்தடையால் செயலிழந்த நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்று மின்பிறப்பாக்கி இயந்திரங்களும் திருத்தப்பட்டு மீண்டும் செயற்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கமைய 3 இயந்திரங்களும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 9ஆம் திகதிமேலும் படிக்க...
விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வைத்திய சாலையில் அனுமதி

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இன்று சனிக்கிழமை (15) விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ள நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்மேலும் படிக்க...
போலியான குற்றச் சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது ; பிரதமர் ஹரிணி

எமது அரசாங்கம் மக்களால் ஸ்தாபிக்கப்பட்டது. அதனை அவர்களே பாதுகாக்கின்றனர். எனவே போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. அவ்வாறு எவராவது நினைப்பார்களாயின் அது வெறும் கனவு மாத்திரமேயாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அரலகங்வில பகுதியில் இடம்பெற்ற கட்சிமேலும் படிக்க...
பாணந்துறையில் பஸ் விபத்து ; நால்வர் காயம் ; சாரதி கைது

பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் இன்று சனிக்கிழமை (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். லுனுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது, பஸ்ஸில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர்மேலும் படிக்க...
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை சனிக்கிழமை (15) முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டமானது அம்பாறை மாவட்டம் காரைதீவு சந்திக்கு அருகாமையில் ஆரம்பமானதுடன் பல்வேறு சுலோகங்களை ஏந்தி பட்டதாரிகள் கொளுத்தும் வெயிலில் கவனயீர்ப்பு போராட்டத்தை அமைதியாக முன்னெடுத்தனர்.மேலும் படிக்க...
படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் – வீடியோ படம் எடுத்த தந்தை

பெரும் திமிங்கிலமொன்றின்வாயிலிருந்து தப்பிவந்த அனுபவத்தை சிலியை சேர்ந்த 24 வயது நபர் விபரித்துள்ளார். இந்த சம்பவம் உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 24 வயது ஏட்ரியன் சிமன்கஸ் தனது தந்தையுடன் பட்டகோனியன் நகரமான புண்டா அரினாசில் படகை செலுத்திக்கொண்டிருந்தவேளை கடலில் இருந்துமேலும் படிக்க...
போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரார்த்தனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தார். ஆனாலும் தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகமேலும் படிக்க...
கைதிகளை விடுப்பதாக ஹமாஸ் அறிவிப்பு

திட்டமிட்டவாறு காசாவிலிருந்து கைதிகள் மூவரை விடுவிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாக ஹமாஸ் குற்றம் சுமத்தியதுடன், பணயக்கைதிகள் விடுதலையை மறு அறிவிப்பு வரை ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தது. பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் மீண்டும் தீவிரமான போர் தொடரும் என இஸ்ரேல்மேலும் படிக்க...
சுற்றுப் பயணம் நிறைவு…நாடு திரும்பினார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாட்கள் பயணமாக பிரான்ஸ், அமெரிக்க உள்ளட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ளார். கடந்த 10 ஆம் திகதி பிரான்ஸ் சென்ற அவர், அங்கு நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்றதுடன் பல நாடுகளின் தலைவர்களையும்மேலும் படிக்க...
வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை பணம் மோசடி

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் முகவர்கள் இளையோரை இலக்கு வைத்து , அவர்களை சமூக ஊடகங்கள் ஊடாக அணுகி,மேலும் படிக்க...
அரசாங்கத்துக்கு கரும்புள்ளி ஏற்பட்டிருந்தால் அதனை சரிசெய்ய தயாராகவே உள்ளேன் – முன்னாள் சபாநாயகர்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு தன்னால் கரும்புள்ளி ஏற்பட்டுள்ளதாக நினைத்தால் அதற்காக வருத்தப்படுவதாக முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல தெரிவித்தார். இந்த கரும்புள்ளியை சரிசெய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் அவர் கூறினார். “அரசியல்வாதிகளாக, நாங்கள்மேலும் படிக்க...
அதானி நிறுவனத்தின் காற்றாலை திட்டத்தை வேறு நாடுகளுக்கு வழங்கும் எண்ணம் இல்லை – இராமலிங்கம் சந்திரசேகர்

அதானி நிறுவனத்தின் காற்றாலை திட்டத்தை மாற்றி சீனாவுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ வழங்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இவ்வாறான திட்டங்களில்மேலும் படிக்க...
இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்பு

ஓமானின் மஸ்கற் நகரில் ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பமாகவுள்ள 8 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் இலங்கை சார்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சானது இந்திய பவுன்டேஷனுடன் இணைந்து இந்து சமுத்திரப்பிராந்தியத்தில்மேலும் படிக்க...