Day: February 13, 2025
சவூதியில் சந்திக்கும் டிரம்ப், புட்டின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் தமக்கும் இடையிலான சந்திப்பு சவூதி அரேபியாவில் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை நேற்று புதன்கிழமை அவர் வெளியிட்டார். இருவரும் உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தைக்காகச் சந்திக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படிக்க...
அமெரிக்க உளவுத்துறை தலைவரை சந்தித்த மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டை சந்தித்தார். வோஷிங்டனில் இன்று வியாழக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்திய – அமெரிக்க நட்புறவு குறித்து ஆலோசித்ததாக பிரதமர் மோடிமேலும் படிக்க...
ஜேர்மனியில் மக்கள் மீது மோதிய கார் – 20 பேர் காயம்

ஜேர்மனியின் மியூனிக் நகரில் மக்கள் மீது காரொன்று மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். தொழிற்சங்க போராட்டம் இடம்பெற்றிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கார் சாரதி ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல் – பலர் பலி
ஆப்கானிஸ்தான் – காபூல் அருகே இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலர் பலியாகினர். சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச அலுவலகங்களை இலக்கு வைத்து இந்த தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் தற்கொலைக் குண்டு தாக்குதல்தாரியும்மேலும் படிக்க...
சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான எந்தவொரு முயற்சியையும் எதிர்த்து தோற்கடிக்க தயங்க மாட்டோம் – சட்ட மா அதிபர் திணைக்கள சட்ட அதிகாரிகள் சங்கம்

சட்ட மா அதிபரை பதவியிலிருந்து விலக்குவதற்கு எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராக செயற்படுவதற்கு தாம் தயாராக உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் சட்டமேலும் படிக்க...
தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னரே உள்ளூராட்சித் தேர்தல்

தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னரே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசாங்கம் உத்தேசத்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன், உள்ளூராட்சி சபைகளுக்கான ஆயுட்காலம் முடிவடைந்தது. நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியால் இத்தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுமேலும் படிக்க...
மகிந்த ராஜபக்சவின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திவ் பாதுகாப்பு படையினர் தங்கியிருக்கும் பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மூன்று இலட்சம் ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தினால் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மகிந்தமேலும் படிக்க...
அமெரிக்காவால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவந்த இரண்டு திட்டங்கள் ரத்து – எலொன் மஸ்க் அறிவிப்பு

காலநிலை மாற்ற சவால்களை சீராகக் கையாள்வது தொடர்பான ஆசிய பசுபிக் மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான தொடர்பாடலை ஊக்குவிக்கும் திட்டங்களை இரத்து செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளது. SpaceX நிறுவனத்தின் உரிமையாளரும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரியுமான எலொன் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.மேலும் படிக்க...
இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக வழக்கு திகதி ஒத்தி வைப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் எழுந்த பிரச்சினையை அடுத்த தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றுமேலும் படிக்க...
விசேட நாடாளுமன்ற அமர்வு நாளை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான முடிவைச் சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பதற்காக, நாளை (14) காலை 9.30க்கு நாடாளுமன்றத்தின் விசேட கூட்டத்தைக் கூட்டுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகமேலும் படிக்க...
தாய்வானில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் ஐவர் பலி

தாய்வானில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் ஐந்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தாய்வானின் மத்திய நகரமான தைச்சுங்கில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பு சம்பவத்தில் ஏழு பேர்மேலும் படிக்க...
இங்கிலாந்தின் சிறுவர் பூங்கா ஒன்றில் 170 வெடி குண்டுகள் மீட்பு

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சிறுவர் பூங்கா ஒன்றில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள ஒரு சிறுவர் பூங்காவை விரிவாக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்தது . அதன் ஒருபகுதியாக அண்மையில் பூங்காவில் குழிமேலும் படிக்க...
இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பிகள் போராட்டம்

இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கேரள கடலோர மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.மேலும் படிக்க...
அறுவைச் சிகிச்சைக்குப் பின் நோயாளியின் உடலில் ஊசி – அகற்ற முடியாது என்கிறது சீன வைத்தியசாலை

சீனாவில் அன்ஹுய் மாநிலத்தைச் சேர்ந்த 59 வயது ஆண் ஒருவருக்குக் கல்லீரல் புற்றுநோய் காரணமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடலில் ஊசி ஒன்று சிக்கியிருப்பதாக மருத்துவமனை அவரின் குடும்பத்திடம் தெரிவித்தது. இதையடுத்து அந்த நபரை அவரதுமேலும் படிக்க...
சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தால் 5 வருட சிறை தண்டனை

வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் பட்சத்தில் அவர்களுக்கு ஐந்து வருடங்கள் சிறை தண்டனையும் ரூபாய் 5 இலட்சம் அபராதமும் விதிக்கும் சட்ட மசோதாவை மத்திய அரச கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான், மியன்மார், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாட்டினர் ரேஷன்மேலும் படிக்க...
மருத்துவப் பொருட்களுக்கு தொடர்ந்தும் பற்றாக்குறை

அறுவை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவப் பொருட்கள் பலவற்றிற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் பற்றாக்குறை நிலவி வருவதாக அறியக் கிடைத்துள்ளது. சில வார்டுகளில் பிளாஸ்டர்கள் உள்ளிட்ட அடிப்படை மருந்துப் பொருட்களை வெளியில்மேலும் படிக்க...
நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் பெரஹரா கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் -சஜித்

”பொடி ஹமுதுருவோ என அழைக்கப்பட்ட சங்கைக்குரிய கலபொட ஞானிஸ்ஸர தேரரின் ஆலோசனையின் பேரில் அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாசவின் தலையீட்டில் ஆரம்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நவம் மஹா பெரஹெர 45 ஆவது தடவையாகவும் மிகவும் பிரமாண்டமான முறையில் அரச, அரச சார்பற்றமேலும் படிக்க...
மன்னார் காற்றாலை திட்டத்திலிருந்து விலகுகிறது அதானி

மன்னார் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த 1 பில்லியன் டொலர் பெறுமதியான புதுப்பிக்கத்தக்கக் காற்றாலை மின்னுற்பத்தி மையத்தின் வேலைத்திட்டத்தை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதானி நிறுவனத்தின் செயலாளர், இலங்கை முதலீட்டுச் சபைக்குக் கடிதம் ஒன்று அனுப்பிவைத்துள்ளார். 484 மெகாவோட்மேலும் படிக்க...
UNP-SJB இடையிலான பேச்சுவார்த்தை தற்காலிகமாக இடைநிறுத்தம்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்ட தேர்தலை இலக்காகக் கொண்டு ஒன்றிணைந்து செயற்படுவதற்காகக் குறித்த இரு கட்சிகளுக்கும் இடையே பல சுற்றுக் கலந்துரையாடல்கள் நடைபெற்று வந்தன. இந்தமேலும் படிக்க...
