Day: February 11, 2025
இந்தியா 3-வது பெரிய சூரிய சக்தி உற்பத்தி செய்யும் நாடாகும் – பிரதமர் மோடி
இந்திய எரிசக்தி வார தொடக்க விழாவில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார். அதில் கருத்துரைத்த பிரதமர் மோடி , 21-ம் நூற்றாண்டு இந்தியாவிற்கு சொந்தமானது என்று உலகில் உள்ள ஒவ்வொரு நிபுணரும் கூறுகிறார்கள். இந்தியா அதன் சொந்த வளர்ச்சியைமேலும் படிக்க...
குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள் – த.வெ.க தலைவர் வாழ்த்து

உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம். அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்.” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தை மாதத்தில் வருகிற பூசத் திருநாள் தைப்பூச விழாவாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநாளில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டுமேலும் படிக்க...
புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி தீக்கிரையாக்கப் பட்ட போது கூட நாடளாவிய ரீதியில் மின் துண்டிக்கப் படவில்லை, குரங்கு சேட்டைகள் வேண்டாம் ; எதிர்க்கட்சி எச்சரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்நாட்டு யுத்தத்தின் போது 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கியை தீயிட்டு கொழுத்திய போது கூட, நாடளாவிய ரீதியில் மின்துண்டிக்கப்படவில்லை. அவ்வாறிக்கையில் குரங்கின் மீது பழி சுமத்தி குரங்கு சேட்டைகள் காண்பிக்க வேண்டாம். அளவுக்கதிகமாக மக்களை ஏமாற்றவும் முற்படமேலும் படிக்க...
தையிட்டி விகாரையை அகற்றக் கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி குறித்த விகாரைக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். போராட்டக்காரர்கள் கறுப்புக் கொடியைமேலும் படிக்க...
ஹமாஸ் பணயக் கைதிகளை தொடர்ந்தும் விடுவிப்பதற்கு இஸ்ரேல் நடவடிக்கை
காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை திருப்பி அனுப்புவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். முன்னதாக இஸ்ரேலிய பணயக்கைதிகளின் விடுதலையை ஒத்திவைப்பதாக ஹமாஸ் அறிவித்திருந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாக குற்றஞ்சாட்டியே ஹமாஸ் இந்த அறிவிப்பைமேலும் படிக்க...
டொனால்ட் ட்ரம்பை சந்திக்கவுள்ள இந்தியப் பிரதமர்

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸிற்கு சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, எலிசி அரண்மனையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வழங்கிய வரவேற்பு விருந்தில் கலந்து கொண்டார்.மேலும் படிக்க...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு

இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை நேற்றைய தினம்(10) சந்தித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர் . கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்,மேலும் படிக்க...
யோஷிதவின் பாட்டிக்கு பயணத் தடை

யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி பாரஸ்டிற்கு (Daisy Forrest) கடுவலை நீதிவான் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது. பணமோசடி வழக்கு மற்றும் 59 மில்லியன் ரூபாய் கூட்டுக் கணக்கு தொடர்பான விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டுமேலும் படிக்க...
ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்த அமரபுர மகா சங்க சபையினர்

அமரபுர பீடத்தின் அதிஉயர் மகாநாயக்க பதவிக்கான அக்தபத்திரம் வழங்கும் மகோற்சவத்தை அரச அனுசரணையுடன் நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இலங்கை அமரபுர மகா பீடத்தின் அதிஉயர் மகாநாயக்கமேலும் படிக்க...
வாகன இறக்குமதிக்குத் தயக்கம் காட்டும் இறக்குமதியாளர்

இலங்கையில் வாகன இறக்குமதி செய்யக்கூடிய இறக்குமதியாளர்கள், தற்போது வாகன இறக்குமதிக்கு தயக்கம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், பெருமளவில் வாகனங்களை இறக்குமதி செய்வதில் இறக்குமதியாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வாகன இறக்குமதிகளின்போதான கடுமையானமேலும் படிக்க...
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா (Akio Isomata) இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது ஜப்பானிய நிதிப் பங்களிப்புடன் முகமாலைப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கலோரெஸ் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்ட அவர் கண்ணிவெடி அகற்றும்மேலும் படிக்க...
துபாயில் இன்று நடைபெறும் 2025 உலக அரச மாநாட்டில் கலந்துகொள்கிறார் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான மூன்று நாள் விஜயத்தின் இரண்டாவது நாள் இன்று செவ்வாய்க்கிழமை (11) ஆகும். இன்றைய தினம் ஜனாதிபதி “எதிர்கால அரசாங்கங்களின் வடிவம்” என்ற தொனிப்பொருளில் துபாயில் நடைபெறும் 2025 உலக அரச மாநாட்டின்மேலும் படிக்க...
வடக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி-க்கும் இடையில் விசேட சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்கும் இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஜு யான்வேய் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, வடக்கிலுள்ள மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது. அந்தவகையில், வடமாகாணமேலும் படிக்க...
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி நடத்திய முக்கிய சந்திப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று (10) பிற்பகல் டுபாயில் உள்ள ஜுமேரா பீச் ஹோட்டலில் மாஸ்டர் இன்வெஸ்ட்மென்ட் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், ராஸ் அல் கைமா ஆட்சியாளரின் மருமகனுமானமேலும் படிக்க...
IMF இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் வைத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் வரிக் கொள்கை, வரி வருவாயை திறம்பட நிர்வகித்தல் மற்றும் பொதுத்துறை செயல்திறனைமேலும் படிக்க...