Day: February 9, 2025
இஸ்ரேலிய படையினரால் கொடுமைக்கு உள்ளான பாலஸ்தீனியர்

இஸ்ரேலிய படைகள் நேற்று விடுவித்த பாலஸ்தீனிய பணயக் கைதி ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விடுவிக்கப்பட்டதன் பின்னர் அவர் பேசும் ஒரு காணொளிப் பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நபரின்மேலும் படிக்க...
மக்களை வாழ வைக்க முடியாத அரசாங்கமே நாட்டில் உள்ளது-சஜித் பிரேமதாச

நாட்டில் இன்று மக்களை வாழ வைக்க முடியாத அரசாங்கமே காணப்படுவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவிசாவளையில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களைமேலும் படிக்க...
உக்ரெய்ன் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ட்ரம்ப்

உக்ரெய்ன் ஜனாதிபதி வோலோடிமார் செலென்ஸ்கியை அடுத்தவாரம் சந்திக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை வரவேற்று ட்ரம்பிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார். உக்ரெய்ன் –மேலும் படிக்க...
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு – சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்

கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவானதைத் தொடர்ந்து பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலஅதிர்வு நேற்று மாலை 7.6 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான மாதம் ‘ஜனவரி’

உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2024 பதிவானது. இந்நிலையில் 2025 அந்த சாதனையை முறியடிக்க உள்ளது. ஆண்டில் தொடக்கத்திலேயே அதற்கான முன்னறிவிப்பாக ஜனவரி மாதத்தின் சாதனை அமைந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் நிதியுதவி பெற்ற கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற ஆய்வு நிறுவனம்(C3S) நேற்றுமேலும் படிக்க...
காங்கிரஸ் கட்சி துடைத்து எறியப்பட்டுள்ளது! -எச்.ராஜா

டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியை பிடித்துள்ள நிலையில், பா.ஜ.கவின் வெற்றிக்கு பிரதான காரணம் பிரதமர் மோடியின் நலத்திட்டங்களே என பா.ஜ.க தேசியக்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். கோவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தமேலும் படிக்க...
மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு – நோயாளர்கள் அவதி

மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலையின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும், மின்பிறப்பாக்கியும் இயங்காத நிலையில் பல்வேறுமேலும் படிக்க...
அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது
இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் வடக்கு கடற்பிராந்தியத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் இன்று குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு

நாடளாவிய ரீதியில் 80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பத்தரமுல்ல, பிலியந்தலை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார உப மின்நிலையங்களில் புணரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் தடைபட்ட மின்மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கு குரங்கே காரணம் – அமைச்சர் ஜெயக்கொடி

பாணந்துறை உப மின் நிலையத்தின் மின்கட்டமைப்பில் குரங்கொன்று மோதியதன் காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார். இந்த சம்பவம் மின் விநியோகத்தை பாதித்ததால் மின்சார விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் திடீர் மின் தடை

நாடளாவிய ரீதியில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்சார விநியோகத்தை விரைவில் வழமைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார். இன்று (09) காலை மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகமேலும் படிக்க...
சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி காலமானார்

சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி தனது 62 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார். சுமார் 40க்கும் மேற்பட்ட வருட ஊடகத்துறை அனுபவத்தை கொண்ட இராஜநாயகம் பாரதி தினக்குரல் பத்திரிகையின் வாரமலர் மற்றும் இணையத்தளத்தின் முன்னாள் ஆசிரியரும் ஆவார். உயிரிழக்கும் போதுமேலும் படிக்க...
அவயவங்களை இழந்த வன்னி மக்களுக்கு மறுவாழ்வு ; கனேடிய அரசு கனேடிய வர்த்தக சம்மேளனம் அனுசரணை

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் கீழ் முப்பரிமாண தொழில் நுட்பத்தினூடாக வடக்கு கிழக்கில் உள்ள அவயவங்களை இழந்த மக்களின் மறுவாழ்வை முன்னிறுத்தி விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக திட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியா பல்கலையின் ஓய்வு நிலை பேராசிரியர் காசி விஸ்வனாதன் செல்வகுமார்மேலும் படிக்க...
கெகலிய ரம்புக்கல பெற்ற நஷ்ட ஈட்டை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தி செய்திருக்கலாம் – அமைச்சர் விமல் ரட்நாயக்க

கெகலிய ரம்புக்கல பெற்ற நஷ்ட ஈட்டை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தி செய்திருக்கலாம் என அமைச்சர் விமல் ரட்நாயக்க தெரிவித்தார். கிளிநொச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை (9) விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் விமல் ரட்நாயக்க பிற்பகல் கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர்மேலும் படிக்க...