Day: February 8, 2025
யாழில் போதைப்பொருளை வாங்குவதற்காக சித்தியின் நகையை திருடியவர் உள்ளிட்ட நால்வர் கைது

போதைப்பொருளை வாங்குவதற்காக சித்தியின் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 21 வயது இளைஞன் உட்பட திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட 3 இளைஞர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, திருநெல்வேலி பகுதியிலுள்ளமேலும் படிக்க...
திருகோணமலையில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் வேலையற்றப் பட்டதாரிகள் சங்கம் இன்று சனிக்கிழமை (08) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். அரசே அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சம் இன்றி தொழிலை வழங்கு என வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது,மேலும் படிக்க...
துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட “ரொட்டும்ப உபாலியை” தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

சர்வதேச பொலிஸாரால் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட நாடகந்தகே உபாலி எனப்படும் “ரொட்டும்ப உபாலியை” 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த மாத்தறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். 39 வயதுடைய இவர் 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர்மேலும் படிக்க...
ரஷ்யாவில் வடகொரிய இராணுவம் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக யுக்ரேன் குற்றச்சாட்டு

ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் வட கொரிய இராணுவத்தினர் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஷெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் ஏற்பட்ட பெரும் உயிரிழப்புகள் காரணமாக ரஷ்யாவில் நிலை கொண்டிருந்த வடகொரியப் படைகள் மீளப் பெறப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில்,மேலும் படிக்க...
முகம்மது சாலி நழீம் எம்.பி மீது தாக்குதல்

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் மீது இன்று (08) காலையில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் ஸ்ரீலங்கா மக்கள் கட்சி ஆதரவாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்நிலையில் அவர் காயமடைந்து ஏறாவூர்மேலும் படிக்க...
அரசியல் பிரச்சினையைத் தீர்க்காமல் ஒருபோதும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது – சத்தியலிங்கம் எம்.பி

நாட்டில் உள்ள அரசியல் பிரச்சினையைத் தீர்க்காமல் ஒருபோதும் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்தமைக்கு வெறுமனே ஊழல் மாத்திரமே காரணம் இல்லை எனவும் குறிப்பிட்டார். எனவே இலங்கையில் நீண்டகாலமாகமேலும் படிக்க...
பஸ் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதல்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதி மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பஸ் சாரதி மீது நேற்றிரவு வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகமேலும் படிக்க...
அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி

இந்தியாவில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுடில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவியுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளைமேலும் படிக்க...
மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சகல வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி

எதிர்வரும் 25ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சகல வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் என அந்தமேலும் படிக்க...
18வது பிறந்த நாள் வாழ்த்து – சத்தியராஜ் அபிவரதன் (08/02/2025)

தாயகத்தில் சங்குவேலியை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Corbeil-Essonnesஐ வதிவிடமாகவும் கொண்டிருக்கும் சத்தியராஜ் -சிவதர்ஷினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிவரதன் 04ம் திகதி மாசி மாதம் செவ்வாய்க்கிழமை அன்று வந்த தனது பிறந்த நாளை 08ம் திகதி மாசி மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில்மேலும் படிக்க...
இந்திய உயர் ஸ்தானிகருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்-களுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான பொதுவான பொருளாதார, சமூக, கலாச்சார ஒத்துழைப்பு செயற்பாடுகளுக்கு மத்தியில், இலங்கை வாழ் தமிழ்மேலும் படிக்க...