Day: February 7, 2025
மட்டக்களப்பில் தொழில் கோரும் பட்டதாரிகளால் போராட்டம்

மட்டக்களப்பில் தொழில் கோரும் பட்டதாரிகளால் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அரச நியமனங்களைக் கோரி அவர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்கோரும் பட்டதாரிகள் உள்ள போதிலும் அவர்களின்மேலும் படிக்க...
காசாவின் இனப் படுகொலையை விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றத்திற்கு டொனால்ட் டிரம்ப் தடை விதிப்பு

இஸ்ரேல் போன்ற அமெரிக்க நட்பு நாடுகளின் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகப் பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். காசாவிலிருந்து மில்லியன் கணக்கான பலஸ்தீனர்களை வெளியேற்றும் டிரம்பின் திட்டம்மேலும் படிக்க...
காசாவில் இனச் சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரிக்கை

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் எச்சரித்துள்ளார். காசாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் அமெரிக்க ஜனாதிபதியின் யோசனை குறித்து கருத்துதெரிவிக்கையில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் இனச்சுத்திகரிப்பு குறித்து எச்சரித்துள்ளார். பாலஸ்தீன மக்களின்மேலும் படிக்க...
விண்வெளி ஆராய்ச்சியில் ஒட்சிசன், ரொக்கெட் எரிபொருளை உருவாக்கும் சீனா

சீனாவின் விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளில் முதன்முறையாக ஒட்சிசன் மற்றும் ரொக்கெட்டுக்கு தேவையான எரிபொருளுக்கான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வு மனிதர்கள் உயிர்வாழ்வதற்கும் விண்வெளியின் எதிர்கால ஆய்வுக்கும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. முதல் முறையாக பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் செயற்கைமேலும் படிக்க...
கொல்கத்தா கொலை வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக் கோரிய மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம்

கொல்கத்தாவில் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக் கொலை சம்பவத்துக்கு நீதி கோரி பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் இக் கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுமேலும் படிக்க...
மாவை சேனாதிராஜாவின் வீட்டில் பொலிஸார் விசாரணை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த அரசியல்குழுத் தலைவரும் மூத்த தலைவருமான மாவை.சோ.சேனாதிராஜாவின் குடும்பத்தவர்களிடத்தில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
பாராளுமன்ற உறுப்பினர்-களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவை இரத்துச் செய்ய வேண்டும் ; ரவி கருணாநாயக்க
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு மக்கள் சேவைக்காக அன்றி அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகவே வழங்கப்படுகின்றது. ஆகவே இந்த நிதியை கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் . அரசியல்வாதிகள் ஓய்வூதியம் பெறுவதை மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆகவே உடன்மேலும் படிக்க...
ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள 59 இலங்கையர்கள் உயிரிழப்பு

கடந்த ஜனவரி 20 ஆம் திகதி வரையில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். ரஷ்ய இராணுவத்தில் இதுவரை 554மேலும் படிக்க...
கடினமான தடையைத் தாண்டுவதில் கை கோர்க்குமாறு ஜனாதிபதி அழைப்பு

வலுவான பொருளாதார அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். 26ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழாவில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார் மிகவும்மேலும் படிக்க...
லசந்த படுகொலை விவகாரம் குறித்து புதிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய பரிசீலனை – பிரதமர்

படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம் குறித்து புதிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய பரிசீலனை செய்யவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம் குறித்து ஒரு நாள் சபைமேலும் படிக்க...
அனைத்துக்கும் கடந்த அரசாங்கமே காரணம் – பிரதி அமைச்சர் நளின் ஹேவகே

தற்போதைய தேங்காய் நெருக்கடிக்கு காரணம், கடந்த அரசாங்கம் தேங்காய் சாகுபடியை முறையாகப் பராமரிக்காததே என்று பிரதி அமைச்சர் நளின் ஹேவகே கூறுகிறார். இன்னும் ஐந்து முதல் ஆறு ஆண்டுகளுக்குள் தேங்காய் நெருக்கடி ஏற்பட்டால், அதற்கு தனது அரசாங்கமே பொறுப்பேற்க முடியும் என்றும்மேலும் படிக்க...
வட நைஜீரியாவில் பாடசாலை விடுதியொன்றில் தீ விபத்து – 17 மாணவர்கள் உயிரிழப்பு

வட நைஜீரியாவில் உள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்து காரணமாக பல மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். விடுதியில் சுமார் 100 மாணவர்கள் தங்கியிருந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க...
1000 இற்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் உயிரிழப்பு – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

தமிழக கடலோர பகுதிகளில் சுமார் 1000 இற்கும் அதிகமான கடல் ஆமைகள் உயிரிழந்துள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் வனத்துறை சார்பில் கால்நடை மருத்துவர்களுக்கு கடல் ஆமைகளை பரிசோதனை செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் இருக்கும் இக் கடல் ஆமைகள், டிசம்பர் மாதம்மேலும் படிக்க...
சீன – பாகிஸ்தான் ஜனாதிபதிகள் சந்திப்பு – இருநாட்டு உறவை பலப்படுத்த ஆலோசனை

சீனாவின் ஹார்பின் நகரில் நடந்து வரும் 9ஆவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி சீனா சென்றுள்ளார். சீனா விடுத்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக நேற்று முன்தினம் (04)மேலும் படிக்க...
சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல

”சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிதல்ல” என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்ட விவகாரம் குறித்து மாநிலங்களவையில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 104 இந்தியர்கள் திரும்பி வந்தமேலும் படிக்க...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயன்படுத்திய சட்டவிரோத ஜீப் வண்டி மீட்பு

புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட ஜீப் வண்டி ஒன்றின் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டவிரோத சொத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பிரிவு இதனை கைப்பற்றியுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவிற்கு சொந்தமானமேலும் படிக்க...
‘GovPay’ வசதி இன்று முதல் ஆரம்பம்

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (7) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றிமேலும் படிக்க...
நாய்களிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றவர் மின்சார கம்பியில் சிக்கி உயிரிழப்பு

மொனராகலை, செவனகல பொலிஸ் பிரிவின் நெலும்வெவ பகுதியில் உள்ள வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செவனகல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (06) பிற்பகல் இடம்பெற்றது. உயிரிழந்தவர் நெலும்வெவ சமகிபுர பகுதியைச்மேலும் படிக்க...
IMF தூதுக் குழுவினரை சந்தித்தார் ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத் தூதுக் குழுவினருக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.. சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் 3 பில்லியன்மேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்து செய்யும் பிரேரணை இன்று நாடாளுமன்றுக்கு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு முறைமையை இரத்து செய்வது தொடர்பான பிரேரணை ஒன்று இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. தனிநபர் பிரேரணையாக இந்த யோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உத்தியோகபூர்வ பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் ஓய்வூதியமேலும் படிக்க...