Day: February 6, 2025
EuroMillions அதிஷ்டலாபச் சீட்டிழுப்பில் €77 மில்லியன் யூரோக்கள் வென்ற பெண்

EuroMillions அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் பிரெஞ்சுப் பெண் ஒருவர் €77 மில்லியன் யூரோக்கள் வென்றுள்ளார். டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற சீட்டிழுப்பிலேயே குறித்த பெண் வென்றுள்ளார். மொத்தமாக €77 557 137 யூரோக்களை அவர் வெற்றித்தொகையாக பெற்றுள்ளதாக EuroMillions இன்மேலும் படிக்க...
பிரதமர் பிரான்சுவா பெய்ரூவின் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பிரதமர் பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கம் மீது கொண்டுவந்த நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வியில் முடிந்தது. வரவு செலவுத் திட்டத்தினை நிறைவேற்றும் முனைப்பில் இருக்கும் பெய்ரூ, அதன் ஒவ்வொரு பகுதிகளையும் நிறைவேற்ற 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி வருகிறார். அதை அடுத்துமேலும் படிக்க...
சபையை விட்டு வெளியேற்ற நேரிடும் ; அர்ச்சுனா எம்.பியை எச்சரித்த பிரதி சபாநாயகர்

சபையில் அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனை படைக்கல சேவிதர்களைக் கொண்டு சபையில் இருந்து வெளியேற்ற நேரிடும் என்று பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி கடுமையாக எச்சரித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (06)மேலும் படிக்க...
‘கிலோன் பாரே சிண்ட்ரோம்’ தொற்றுக்கு பக்டீரியா தண்ணீரே காரணம் – சுகாதாரத்துறை தகவல்

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் கடந்த மாதம் கிலோன் பாரே சிண்ட்ரோம் தொற்றினால் நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதோடு, ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த நோய்ப் பரவல் கை, கால்களை வலுவிழக்கச் செய்வதோடு, உணர்ச்சியற்ற தன்மையும் ஏற்படுத்தும். அந்த வகையில் இந் நோய் தொற்றுக்கானமேலும் படிக்க...
டெல்லியில் தி.மு.க. மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக மானியக் குழுவின்(யுஜிசி) வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் தி.மு.க. மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் நோக்கில் வரைவு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டது. இதற்குமேலும் படிக்க...
பங்களாதேஷில் மீண்டும் வெடித்த போராட்டம்

பங்களாதேஷின் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஷேக் ஹசீனாவின் பூர்வீக இல்லமும் அவரது கட்சியின் ஏனைய உறுப்பினர்களின் இல்லங்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தரப்பினரால் தீ வைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. பதவி நீக்கப்பட்ட ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில் அங்கிருந்து சமூக ஊடகங்கள்மேலும் படிக்க...
சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வரப்பட வேண்டும் – லசந்த விக்ரமதுங்கவின் மகள் கோரிக்கை

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையின் குற்றவியல் விசாரணை தொடர்பாக சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் எனக் கோரி லசந்த விக்ரமதுங்கவின் மகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இவ்விடயம் சட்டமா அதிபரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கடுமையான கடமைத்மேலும் படிக்க...
மீளப் பெறப்பட்ட டயனா கமகேவின் பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்து முன்னிலைப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுவதாகக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டயனா கமகே நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து முன்னிலையானதைத்மேலும் படிக்க...
காற்று மாசுபாட்டால் உலகளவில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

காற்று மாசுபாட்டால் ஏற்படும் பல்வேறு நோய்களால் உலகளவில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவாச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து சுவாச மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் நெரஞ்சன் திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில் ” காற்று மாசுபாட்டினால் ஏற்படும் சுவாச நோய்களால்மேலும் படிக்க...
மீண்டும் விசாரணைக்கு வரும் வித்தியாவின் படுகொலை வழக்கு

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது. குறித்த மேன்முறையீட்டுமேலும் படிக்க...
கருணா அம்மான் பிள்ளையானை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் என பிள்ளையானிற்கு தெரிவித்த சுரேஸ்சாலே- டெய்லி மிரர்

கருணா அம்மான் பிள்ளையானை கொலை செய்வதற்கான சதிமுயற்சியில் ஈடுபட்டுள்ளார் என இராணுவபுலனாய்வு பிரிவின் தலைவராக பணியாற்றிய சுரேஸ் சாலே பிள்ளையானிடம் தெரிவித்தார் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் டெய்லிமிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது 2007 நவம்பர் 2ம் திகதி போலிகடவுச்சீட்டில்மேலும் படிக்க...
தேங்காய் பற்றாக்குறைக்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே காரணம் – பிரதமர்

தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறைக்குக் காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார் நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,மேலும் படிக்க...
புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் பணி தாமதமாகும் – அரசாங்கம்

தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் புதிய அரசியலமைப்பொன்று நிச்சயமாக கொண்டுவரப்படும். ஆனால், அவசரமாக இந்தச் செயல்பாடு இடம்பெறாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாராந்தமேலும் படிக்க...
