Day: February 3, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக வெளிவந்த தகவல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக மேலும் பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிடுவதற்கு அசாத் மௌலானா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் செனல் 4 அலைவரிசைக்கு தகவல்களை வழங்கிய அசாத் மௌலானா என்றழைக்கப்படும் மொஹமட் மஹிலார் மொஹமட் ஹன்ஸீர்.மேலும் படிக்க...
சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரிப்பு! -கனிமொழி குற்றச்சாட்டு
நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழலை அளிக்க மத்திய அரசு தவறிவிட்டது என கனிமொழி குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழலை அளிக்கமேலும் படிக்க...
தமிழரசுக் கட்சியின் 3 எம்.பிகள் உள்ளிட்ட எழுவருக்கு எதிராக தடையுத்தரவு

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நாளை ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டங்களில் ஈடுபட இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எழுவருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இதற்கானமேலும் படிக்க...
அமெரிக்காவின் நியாயமற்ற வரிகளுக்கு பதிலாக வரித் திட்டம் : எமது தேசம் இலக்கு வைக்கப்படும் போது நாம் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை – கனேடிய அமைச்சர்கள்

ஐக்கிய அமெரிக்கா கனேடிய பொருட்கள் மீது விதித்த நியாயப்படுத்த முடியாததும், நியாயமற்றதுமான வரிகளுக்குப் பதில் நடவடிக்கையாக 155 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் மீது கனேடிய அரசு வரிகளை விதிக்குமென கனேடிய நிதியமைச்சரும் பல்மட்ட அரசுகளுக்கு இடையிலான விவகாரங்களுக்கான அமைச்சருமானமேலும் படிக்க...
குண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழப்பு

வடக்கு சிரியா, மன்பிஜ் நகரப் பகுதியில் விவசாய தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் அருகில் இருந்த காரொன்றில் குண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 பெண்கள் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களைமேலும் படிக்க...
ராமேஷ்வரம் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த பத்து பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதோடு, அவர்களிடமிருந்த விசைப் படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைதான மீனவர்களை மன்னார் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்திமேலும் படிக்க...
அரச இல்லத்திலிருந்து வெளியேறுமாறு மஹிந்தவுக்கு இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைக்கவில்லை ; சாகர காரியவசம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சி உறுப்பினரை போல் பேசுகிறார். அரச இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு ஏதும் கிடைக்கப்பெறவில்லை. மக்கள் மத்தியில் பொய்யுரைக்காமல் உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம் எனமேலும் படிக்க...
பிரச்சினைக்கான பொறுப்பு கூறலைத் தவிர்க்கும் அரசாங்கம் எதற்கு? – ஐக்கிய மக்கள் சக்தி

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் நாம் என்ன செய்வது என்று அமைச்சர்கள் கேட்பார்களாயின், அவ்வாறான அமைச்சர்களைக் கொண்ட அரசாங்கம் எதற்கு? போராட்டத்தில் ஈடுபடும் போது அவர்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. கடந்த அரசாங்கங்களுக்கு எதிராக சகல தொழிற்சங்கங்களையும் வீதிக்கிறக்கி போராடியமேலும் படிக்க...
ரணில் விக்ரமசிங்க லண்டனுக்கு விஜயம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (03) லண்டனுக்கு பயணமாகியுள்ளார். குறித்த விஜயத்தின் போது, அவர் சர்வதேச அளவிலான பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்கவுள்ளார். ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களை நிவர்த்தி செய்வதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் ஏப்ரல் 21மேலும் படிக்க...
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக அனுராதபுரம் தலைமை நீதவான் காவல்துறைக்குப் பிறப்பித்த உத்தரவு

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக மே 28ஆம் திகதி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்யுமாறு அனுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பான வழக்குமேலும் படிக்க...
சுதந்திர தினத்தை முன்னிட்டு 285 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 285 கைதிகளுக்கு நாளை 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளனர். அதன்படி, தீவு முழுவதும் சிறையிலுள்ள பொது மன்னிப்புக்கு தகுதியுடைய கைதிகளை சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைமேலும் படிக்க...