Day: February 1, 2025
நபி முஹம்மதுவின் ஹிஜ்ரத் பாதையை மீண்டும் உயிர்ப்பிக்கும் சவூதி அரேபியா

சவூதியில் மதீனா நகரில், “நபியின் பாதையில் (In the Prophet’s Steps)” என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டம், மதீனா பிராந்திய தலைவர் இளவரசர் சல்மான் பின் சுல்தானால் அதிகாரப்பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மக்காவில் இருந்து மதீனாவிற்கு நபி முஹம்மதின் இடம்பெயர்வின்மேலும் படிக்க...
காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள் – எவ்வேளையிலும் மரணிக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை

உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளனர் என மருத்துவர்கள் எச்சரித்துள்ள காசாவை சேர்ந்த 2500 சிறுவர்களை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க மருத்துவர்களுடனான சந்திப்பின் பின்னர் ஐக்கியமேலும் படிக்க...
அமெரிக்காவில் வீடுகள் மீது விழுந்து நொருங்கிய விமானம்

ஒரு குழந்தை உட்பட 6 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய அம்பியூலன்ஸ் விமானமொன்று அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு மேல் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது, விமானம் வீழ்ந்து வெடித்ததில் அங்கிருந்த பல வீடுகளில்மேலும் படிக்க...
கிலான் பாரே சிண்ட்ரோம் – மூன்றாவது உயிரிழப்பு பதிவு

மராட்டிய மாநிலம் புனேயில் கிலான் பாரே சிண்ட்ரோம் எனும் நோய் தொற்று பரவி வருகிறது. இதுவரையில் சுமார் 130 பேர் இந் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தசைகளை பலவீனமடையச் செய்து, உடல் பாகங்களை செயலிழக்கச் செய்யும். இந்த நோயினால்மேலும் படிக்க...
சட்டத்துக்கு மதிப்பளித்து மஹிந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் ; பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு கடிதம் அனுப்ப போவதில்லை. வெகுவிரைவில் புதிய சட்டம் இயற்றப்படும். சட்டத்துக்கு மதிப்பளித்து வீட்டை விட்டு அவர் வெளியேற வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதிமேலும் படிக்க...
ஆண்டு வருமானமாக 12 லட்சம் ரூபாவினை பெறுபவர்களுக்கு வரிவிலக்கு
இந்தியாவின் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் ஆண்டு வருமானமாக 12 லட்சம் ரூபாவினை பெறுபவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டுக்கான பாதீட்டி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முக்கிய அறிவிப்புகளில்மேலும் படிக்க...
மக்கள் கட்டியெழுப்பிய அரசாங்கத்தினை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் ; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

இலங்கை வாழ் மக்கள் இந்த நாட்டில் புதிய அரசியல் வரலாறொன்றை எழுத ஆரம்பித்துள்ளனர். நாடு முன்னோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. மக்களால் கட்டியெழுப்பப்பட்ட இந்த அரசாங்கத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். எமது இலக்கை அடையும் வரை நாம் அனைவரும் ஒன்றாக பயணிக்க வேண்டுமெனமேலும் படிக்க...
தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மாவையின் அர்ப்பணிப்பு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் ; பிரதமர்

தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் மாவை.சேனாதிராஜாவின் அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளனர். மாவை.சேனாதிராஜாவின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதோடு அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மக்கள்மேலும் படிக்க...
76 அபிவிருத்தி வேலைத் திட்டங்களைச் சீனா ஆரம்பிக்க உள்ளதாக ஜனாதிபதி உறுதி

சீன அரசாங்கம் இலங்கையில் 76 வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சீன அரசாங்கம் கைவிட்டிருந்த வேலைத்திட்டங்கள் உட்பட புதிய வேலைத்திட்டங்களையும் ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது தெரிவித்துள்ளது. குருநாகல் மாவட்டத்தில் கல்கமுவ பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். தமது அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்கும்மேலும் படிக்க...
மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை தொடர்பான அறிவிப்பு

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை நாளை தினம் நடைபெறும் . அதன்படி நாளை காலை 8 மணிக்கு மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சமய கிரியைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு அஞ்சலிமேலும் படிக்க...
சொகுசு வாகனங்களை சட்டவிரோதமாக விடுவித்து, பயன்படுத்திய அரசியல்வாதிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – ஜனாதிபதி

சொகுசு வாகனங்களை துறைமுகத்திலிருந்து சட்டவிரோதமாக விடுவித்து, பயன்படுத்திய அரசியல்வாதிகள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருணாகல் – பொல்பித்திகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஜனாதிபதி ஒருவருக்கானமேலும் படிக்க...
2வது ஆண்டு நினைவு தினம் – அமரர். திருமதி. சந்திரமணி செல்வராஜா (01/02/2025)

தாயகத்தில் கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் திருகோணமலை, பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் திருமதி சந்திரமணி செல்வராஜா அவர்களின் 2 வது ஆண்டு நினைவு தினம் 1ம் திகதி மாசி மாதம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. அமரர் திருமதி செல்வராஜா சந்திரமணி அம்மாவைமேலும் படிக்க...
சுவீடனில் குரானை எரித்த நபர் சுட்டுக்கொலை – பின்னணியில் வேறு நாடு என சந்தேகம்

சுவீடனில் குரானை எரித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் வெளிநாடு ஒன்றிற்கு தொடர்புள்ளதாக சுவீடனின் பிரதமர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தரப்பினர் இது குறித்த விசாரணைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் ஏனென்றால் இந்த கொலையின் பின்னணியில் வேறு ஒருநாடுஇருக்கலாம் என சந்தேகம் நிலவுகன்றது என சுவீடனின்மேலும் படிக்க...