Day: January 29, 2025
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதி சென்னை என பெற்றோர் அச்சம்: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

அனைவரும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். புதுதில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அரசு சாரா அமைப்பான இந்திய மகளிர் சங்கத்தின் மாநாடு, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பொடவூர் பகுதியில் உள்ள பிரம்மாமேலும் படிக்க...
கோவையில் காதல் திருமணம் செய்த தம்பியை கொன்ற அண்ணனுக்கு தூக்கு தண்டனை

கோவை அருகே மேட்டுப்பாளையத்தில், மாற்றுச் சமூகப்பெண்ணை காதல் திருமணம் செய்த இளைய சகோதரர் மற்றும் அவரது மனைவியை வெட்டிக் கொன்ற வழக்கில், அண்ணணுக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை பட்டியலின மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.மேலும் படிக்க...
தென் கொரியாவில் 176 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடிப்பு

தென் கொரியாவில் 176 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடித்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிம்ஹே விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு தீப்பிடித்ததுள்ளது. எனினும், பயணிகள் 176 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் தென் 169 பயணிகள்மேலும் படிக்க...
ஆபிரிக்காவின் முன்செக்ஸ் நகர சிறைச் சாலையிலிருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்

கிழக்கு ஆபிரிக்க நாடான கொங்கோவில் பொதுமக்களை இலக்காகக் கொண்டு எம்-23 எனும் கிளர்ச்சிக் குழுவினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் கோமா நகரில் குறித்த கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 13 பேர் பலியாகினர். எனவே, இவர்களை கட்டுப்படுத்தும்மேலும் படிக்க...
இலங்கையில் 2024ஆம் ஆண்டில் சிறுவயது கர்ப்பங்கள் அதிகரிப்பு

இலங்கையில் இளம் கர்ப்பங்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 213 ஆக உயர்ந்துள்ளதாக சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான புலனாய்வுப் பணியகத்தின் தலைவரான டி.ஐ.ஜி ரேணுகா ஜெயசுந்தர தெரிவித்தார். ”2023 ஆம் ஆண்டில் 167 என்ற எண்ணிக்கையில் இருந்துமேலும் படிக்க...
ஜனாதிபதி விஜயத்தின் போதான போராட்டத்திற்கு நீதிமன்றத் தடை கோரப்பட்டுள்ளது

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு தாம் எதிர்க்கவில்லை எனக் கூறும் ஜனாதிபதி, இம்மாத இறுதியில் வடக்கிற்கு விஜயம் செய்யும் போது நடத்த திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் போராட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸார் நீதவான் நீதிமன்றத்திடத் விடுத்த கோரிக்கைக்குமேலும் படிக்க...
யோஷிதவிடமிருந்து 4 துப்பாக்கிகள் மீளப் பெறப்பட்டுள்ளன ; இனி ஒருவருக்கு ஒரு துப்பாக்கி மாத்திரமே – பாதுகாப்பு செயலாளர்

நாட்டில் எந்தவொரு பிரஜைக்கும் தற்பாதுகாப்பிற்காக ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்குவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு புலனாய்வு அறிக்கை அவசியமாகும். அந்த வகையில் யோஷித ராஜபக்ஷவிடமிருந்து 4 துப்பாக்கிகள் ஏற்கனவே மீளப் பெறப்பட்டுள்ளதோடு, எஞ்சியுள்ள இரு துப்பாக்கிளையும் பெறுவதற்கான நடவடிக்கைகள்மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப் பட்டிருக்கும் உரிமைகளை இரத்துச் செய்யவோ குறைக்கவோ முடியாது ; வஜிர அபேவர்த்தன

அரசியலமைப்பின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை இரத்துச்செய்யவோ குறைக்கவோ முடியாது. அதனால் செய்ய முடியாத விடயங்களை அரசாங்கம் வெளியில் தெரிவிக்காமல் இருப்பது நல்லது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். காலி ஹினிதும தேர்தல் தொகுதிமேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு பிணை

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் சிறப்பு காவல் குழுவினால் புதன்கிழமை (29) பிற்பகல் கைது செய்யப்பட்டு அன்று இரவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பிரிவைத் தொடர்பு கொண்டபோது, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் அவரை தலா 200,000 ரூபாய் மதிப்புள்ளமேலும் படிக்க...
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காலமானார். 1942 ஒக்டோபர் 27 ம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜாமேலும் படிக்க...
உக்ரைன் ரஸ்ய போர்முனை – வடகொரிய படையினர் உயிருடன் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக கைக்குண்டுகளை வெடிக்க வைத்து மரணிக்கின்றனர்

ரஸ்ய உக்ரைன் போர்முனையில் ரஸ்யாவின் சார்பில் போரிடும் வடகொரிய படைவீரர்கள் உயிருடன் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக கைக்குண்டுகளை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொள்கின்றனர் என உக்ரைனிய படையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஸ்கைநியுஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது வடகொரிய படையினர் பெரும் உயிரிழப்புகளை சந்தித்த பின்னர்மேலும் படிக்க...
பிரதமர் தலைமையில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஒன்றியத்தின் தலைவர் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரின் தலைமையில் கடந்த 24 ஆம் திகதிமேலும் படிக்க...
‘தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு’ – தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை

“பிரதமர் மோடி இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவோடு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை போட வேண்டும். அந்த ஒப்பந்தத்தின் மூலமே தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையை தீர்க்க முடியும். இத்தகைய ஒப்பந்தத்தினால் யாழ்ப்பாண தமிழ் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதுமேலும் படிக்க...
சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பதற்கு அறைகூவல்

இலங்கையின் சுதந்திரதினத்தினை கரிநாளாக அனுஷ்டிப்பதற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கம் அறைகூவல் விடுத்துள்ளது. இதுதொடர்பில் அந்த இயக்கத்தின் தலைவர் அருட்பணி.து.ஜோசப்மேரி மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் விடுத்துள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒவ்வொரு ஆண்டும்மேலும் படிக்க...
கிளிநொச்சி குளத்தை அண்டிய பகுதிகளை சுற்றுலாப் பயணிகளுக்காக மாற்றியமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கிளிநொச்சி குளத்தை அண்டிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நேற்று (28) நடைபெற்றது. கிளிநொச்சி குளத்தின் கீழ்ப்புறமாக உள்ள கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கட்டடத்தினை SY NIRO COOL CAFE நிறுவனம் குத்தகை அடிப்படையில்மேலும் படிக்க...
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தை பெப்ரவரி 6 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானம்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் 5 ஆம்மேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா மீது, கடந்த 20 ஆம் திகதி அனுராதபுரம் பகுதியில் போக்குவரத்து கடமையிலிருந்த காவல்துறையினருக்குமேலும் படிக்க...
31ம் நாள் கண்ணீர் அஞ்சலி – அமரர். பொன்னுத்துரை சக்திவேல் (29/01/2025)

தாயகத்தில் வல்வெட்டியை பிறப்பிடமாகவும் ,சுவிஸ் பாசல் நகரினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் பொன்னுத்துரை சக்திவேல் ஐயாவின் 31ம் நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் இன்று 29ம் திகதி தை மாதம் அன்னாரது இல்லத்தில் அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்னாரின் 31ம் நாள்மேலும் படிக்க...