Day: January 17, 2025
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை – தவெக

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக என முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருசேர புறக்கணித்துவிட்ட நிலையில், தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளது தவெக. “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிப்பதோடு, எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்”மேலும் படிக்க...
எம்ஜிஆர் பிறந்தநாள்: வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி புகழாரம்

எம்ஜிஆர் பிறந்தநாளான இன்று (ஜன.17) அவரது வீடியோவை வெளியிட்டு புகழாரம் செலுத்தியுள்ளார் பிரதமர் மோடி. அந்த வீடியோவுடன், “எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கவும், சிறந்த சமுதாயத்தை உருவாக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாங்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளோம்.”மேலும் படிக்க...
தொலைபேசிகளில் வரும் குறுஞ் செய்திகளை நம்பவேண்டாம்; விசேட அறிவிப்பு

பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு அறிவுறுத்தியள்ளது. போலியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் வசூலிப்பவர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அதன்மேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பில் வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவையும் சி.ஐ.டியில்மேலும் படிக்க...
யுக்ரேனுக்கான உதவிகள் ஒருபோதும் நிறுத்தப்படாது – பிரித்தானியப் பிரதமர்

யுக்ரேனுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உதவிகளை பிரித்தானியா ஒரு போதும் நிறுத்தாது என பிரித்தானியப் பிரதமர் சேர் கீர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார். பிரதமராகப் பதவியேற்று முதல் முறையாக யுக்ரேனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், ரஸ்யாவுடனான போரில் உயிரிழந்தமேலும் படிக்க...
வீரர்களின் ஒழுக்கமின்மையே இந்திய அணியின் தோல்விக்குக் காரணம் – கௌதம் கம்பீர்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போடர்- கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், அணியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அணியின் வீரர்களது போட்டிக் கொடுப்பனவைமேலும் படிக்க...
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளையதினம் நடைபெறவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது. இதன்போது, கட்சிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு, கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மீதுமேலும் படிக்க...
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் – பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்றுஆரம்பம்
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. முல்டன் சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 10 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி 18மேலும் படிக்க...
“க்ளீன் ஸ்ரீ லங்கா” திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இரு நாள் விவாதம்
நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கூடுகிறது சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கடந்த 10 ஆம் திகதி கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு: மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் 16ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள இச்சம்பவத்திற்கு மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கையை பயன்படுத்த இடமளிக்க மாட்டேன் – ஜனாதிபதி

சுயாதீன தாய்வான் எண்ணக்கருவை தாம் முழுமையாக எதிர்ப்பதாகவும், தேசிய மீள் ஒருங்கிணைப்பை அடைந்துக் கொள்வதற்காக சீன அரசினால் முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளையும் ஆதரிப்பதாகவும்,சீனாவுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தின் போது சீன மக்கள் குடியரசிடம் உறுதியளித்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,மேலும் படிக்க...

