Day: January 17, 2025
ஈழத்து சிறுவர் நாடக தந்தை குழந்தை ம.சண்முகலிங்கம் காலமானார்

ஈழத்து தமிழ் நாடகத்தின் பெரு விருட்சம், நாடக அரங்க கல்லூரியின் ஸ்தாபகர், ஈழத்து சிறுவர் நாடக தந்தை என ஈழத்து நாடக வரலாற்றில் தவிர்க்க முடியாத மாபெரும் ஆளுமையான நாடகம் தந்த உண்மை மனிதன் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் காலமானார். குழந்தைமேலும் படிக்க...
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் சுமார் 190மேலும் படிக்க...
பிப்.1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்: ஜன.31-ல் தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்க உள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டம்,மேலும் படிக்க...
நடிகர் சயிப் அலிகான் கத்திக் குத்து வழக்கு: சந்தேக நபரை கைது செய்த மும்பை போலீஸ்

பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீதான கத்திக் குத்து வழக்கில் சந்தேகிக்கப்படும் நபரை மும்பை போலீஸார் இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்தனர். இதுகுறித்து தகவல் அறிவந்தவர்களின் கூற்றுப்படி, மும்பை போலீஸார் பல்வேறு சந்தேக நபர்களை பாந்த்ரா காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவுமேலும் படிக்க...
சுண்டிக்குளம் கடற்பரப்பில் கரையொதுங்கிய மர்மப்பொருள்

கிளிநொச்சி – சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் மர்மப் பொருள் ஒன்று இன்று (17) கரை ஒதுங்கியுள்ளது. உருளை வடிவிலான குறித்த மர்மப் பொருளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுத்துக்கள் தெளிவற்ற நிலையில் காணப்படுகின்றன. அண்மைக்காலமாக வடக்குமேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ஷவிடம் CIDயினர் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்றைய தினம் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கதிர்காமம் பகுதியிலுள்ள காணி ஒன்றுக்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டமை தொடர்பிலான குற்றச்சாட்டு குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.மேலும் படிக்க...
போர் நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரித்த இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கப் பரிந்துரைத்துள்ளது. எனினும், குறித்த ஒப்பந்தம் அரசாங்க அமைச்சரவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தங்கள் மூன்று கட்டமாக நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் கட்டமானது, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைமேலும் படிக்க...
ஈழத்தமிழர்களின் இறைமையை நிலைநாட்ட “சமஷ்டியே” தேவை – சிவஞானம் சிறிதரன்

ஈழத்தமிழர்களின் அரசியல் உரித்துகளை நிலைநாட்ட, சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றே காலத் தேவையானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் வலியுறுத்தியுள்ளர். ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் அமோர், ஐரோப்பியமேலும் படிக்க...
வியட்நாமில் உலகத் தமிழர் மாநாடு : பெப். 21, 22இல் ஏற்பாடு – இலங்கை தமிழ் அமைச்சர்களும் பங்கேற்பு

பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் வியட்நாம் தமிழ் சங்கம் இணைந்து நடத்தும் உலகத் தமிழர் மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 21, 22ஆம் திகதிகளில் வியட்நாம் டனாங் நகரில் நடைபெறவுள்ளது. இம்முறை தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வகையிலும் உலகத்மேலும் படிக்க...
அம்பாந்தோட்டையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வயோதிபப் பெண் கொலை
அம்பாந்தோட்டை, வலஸ்முல்ல, ஹொரேவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வயோதிபப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது. வலஸ்முல்ல, ஹொரேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடையமேலும் படிக்க...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின்கட்டணம் குறைப்பு

சராசரியாக 20 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த கட்டண திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அதன் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜயனாத் ஹேரத் தெரிவித்துள்ளார். இதன்படி, முதல் ஆறு மாதங்களுக்கு புதியமேலும் படிக்க...
சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து 3ஆவது ஆண்டாக சரிவு
சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து 3ஆவது ஆண்டாக குறைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் 2ஆவது மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில், குழந்தை பிறப்பு விகிதம், கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. குழந்தைப்மேலும் படிக்க...
அரசியல் கைதிகளென எவரும் சிறையில் இல்லை என்று கூறுவார்களாயின் அவர்களை காணாமலாக்கியது யார்? – அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி

அரசியல் கைதிகள் என எவரும் சிறையில் இல்லை என்று கூறுவார்களாயின், அவர்களை காணாமலாக்கியது யார் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வியெழுப்பியுள்ளார். இன்று (17) வெளியிட்டுள்ள தனது ஊடகமேலும் படிக்க...
தேசிய கல்வித்துறையில் 4,000 பணிநீக்க திட்டத்தை கைவிட உள்ளோம்- பிரான்சுவா பெய்ரூ

தேசிய கல்வித்துறையில் ( l’Éducation nationale) 4,000 பணியிடங்கள் நீக்கப்பட உள்ளதாக முன்னாள் பிரதமர் மிஷல் பார்னியே அறிவித்த நிலையில், தற்போது அந்த திட்டத்தை கைவிட எத்தனித்துள்ளதாக புதிய பிரதமர் பிரான்சுவா பெய்ரூ அறிவித்துள்ளார். “தேசிய கல்வியில் 4,000 பணியிடங்களை நீக்கும்மேலும் படிக்க...
ஜனாதிபதி மக்ரோனின் பிரபலத்தன்மை இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சி

பிரெஞ்சு அரசியல் தலைவர்களின் பிரபலத்தன்மை (popularité) குறித்து மாதம் தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இதுவரை இல்லாத அளவு மிகவும் மோசமான செல்வாக்கு இழப்பினைச் சந்தித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் ஜனாதிபதி மக்ரோன் 42%மேலும் படிக்க...
உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை பிணையில் விடுதலை செய்ய நுகேகொடை நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (17) உத்தரவிட்டுள்ளார். உதயங்க வீரதுங்க 10 ஆயிரம் ரூபா ரொக்க பிணை மற்றும் இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அயல் வீட்டில்மேலும் படிக்க...
யாழில் பட்டம் பறக்கவிட்ட இளைஞன் பாம்பு தீண்டி வைத்திய சாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தில் பட்டம் பறக்கவிட்டுக்கொண்டிருந்த இளைஞன் பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் நேற்றைய தினம் (16) இளைஞன் பட்டம் ஏற்றியபோது விஷப் பாம்பொன்று தீண்டியுள்ளது. அதன் பின்னர், இளைஞன் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைமேலும் படிக்க...
போர் நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்ப-தற்கான அமைச்சரவை வாக்கெடுப்பில் இஸ்ரேல் தாமதம்

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கான அமைச்சரவை வாக்கெடுப்பை இஸ்ரேல் தாமதப்படுத்தியுள்ளது. ஹமாஸ் இறுதி நிமிடத்தில் ஒப்பந்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டுக்கமைய வாக்கெடுப்பை தாமதப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், ஒப்பந்தத்தின் அனைத்து விடயங்களையும் ஹமாஸ் ஏற்றுக்கொள்ளும் வரை அமைச்சரவைமேலும் படிக்க...