Day: January 10, 2025
புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு

ரஷ்ய ஜனாதிபதியுடன் ஒரு சந்திப்பினை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சந்திப்பு குறித்த திகதி மற்றும் இடம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்பதற்கு முன்னதாக இந்த சந்திப்புமேலும் படிக்க...
234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. போட்டியிடும்-பிரேமலதா
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. போட்டியிடும் என்றும் வேட்பாளர் யார்? என்பதை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அறிவிப்போம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் விஜயகாந்த் பிறந்து வளர்ந்த ஊரான ராமானுஜபுரத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றும் போதேமேலும் படிக்க...
ரணிலின் பொருளாதாரக் கொள்கைத் திட்டத்தை மாற்றுவதாகக் கூறிய அரசாங்கம் அதனையே மாற்றமின்றி நடைமுறைப் படுத்திவருகிறது – சரித்த ஹேரத்

ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கைத்திட்டம் நாட்டுக்குப் பொருத்தமற்றது எனவும், ஆகவே புதிய கொள்கைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவோம் எனவும் கூறி ஆட்சிபீடமேறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது ரணிலின் பொருளாதாரக் கொள்கைத்திட்டத்தையே எவ்வித மாற்றமுமின்றி நடைமுறைப்படுத்தி வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர்மேலும் படிக்க...
மலையக தியாகிகளை நினைவுகூரும், மலையக தியாகிகள் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

மலையக மக்களுக்கான உரிமைப் போராட்டங்களில் உயிர் தியாகம் செய்த மலையக தியாகிகளை நினைவுகூரும், மலையக தியாகிகள் தினம் வெள்ளிக்கிழமை (10) கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பிடிதளராதே அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள்,மேலும் படிக்க...
தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 9:30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழராட்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் இடம்பெற்றது இதன் போது உயிரிழந்த ஒன்பதுமேலும் படிக்க...
மண்ணெண்-ணெய்யை அருந்திய குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில், குளிர்பான போத்தலில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய்யை அருந்திய குழந்தை ஒன்று உயிரிழந்தது. சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை ஒன்றே உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தாய் சமையலறையிலிருந்த சந்தர்ப்பத்தில், மண்ணெண்ணெய் போத்தலுடன் விளையாடிய குழந்தை அதனை அருந்தியதாகமேலும் படிக்க...
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: 1.30 லட்சம் அமெரிக்கர்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அங்கு வசித்த 1.30 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஐந்து முக்கிய பகுதிகளில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல்மேலும் படிக்க...
சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் பல நகரங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெய்த கன மழையால் சாலைகள் முழுவதும் ஆறுகள் போல காட்சியளித்தன. குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கட்டிடங்கள், வாகனங்கள்,மேலும் படிக்க...
அவுஸ்திரேலியா இலங்கையர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த புகலிடக் கோரிக்கை -யாளர்களின் உரிமைகளை மீறியது – ஐநா வரலாற்று தீர்ப்பு

இலங்கை உட்பட ஏனைய பல நாடுகளை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் தன்னிச்சையாக நவ்று தீவு தடுப்பு முகாம்களில் தடுத்துவைத்திருந்ததன் மூலம் அவர்களின் மனித உரிமைகளை மீறியுள்ளது என ஐநா தெரிவித்துள்ளது. நவ்றுவில் புகலிடக்கோரிக்கையாளர்களை தடுத்து வைத்திருந்ததன் மூலம் அவுஸ்திரேலியா அவர்களின்மேலும் படிக்க...
டெல்லியில் காற்றின் தரக்குறியீட்டில் பாதிப்பு!150-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

நாடு முழுவதும் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறதுடன் குறிப்பாக வட இந்தியாவில் இந்த காலத்தில் கடும் குளிரும், பனிப்பொழிவும் நிலவி வருகிறது அதன்படி, வட இந்தியாவில் இப்போது குளிர்காலம் நிலவி வருவதால் அங்குக் கடுமையான மூடுபனி நிலவுகிறது. இதனால் டெல்லியில் இன்றுமேலும் படிக்க...
பெண்களின் பாதுகாப்புக்கான சட்டதிருத்த சட்டமூலம் தமிழக சட்டப் பேரவையில் அறிமுகம்
பெண்களின் பாதுகாப்பிற்கான சட்டதிருத்த சட்டமூலத்தினை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப் பேரவையில் முன்வைத்துள்ளார் ஏற்கெனவே இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், இத்தண்டனைகளை மேலும் கடுமையாக்க வேண்டிய அவசியம் உள்ளதாக மு.க ஸ்டாலின் தெரிவித்தார். பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட மாநிலமாகமேலும் படிக்க...
சொகுசு பஸ்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் பாதுகாப்புப் பிரிவின் வேண்டுகோளுக்கு அமைய சொகுசு பஸ்கள் கட்டுநாயக்க விமான நிலைத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 187 வழித்தடத்தில் இயங்கும் கோட்டை – கட்டுநாயக்க சொகுசு பஸ்கள் இன்றுமேலும் படிக்க...
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார். அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். உதயங்க வீரதுங்கவை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தமேலும் படிக்க...
மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து ‘இராணுவத்தை அகற்று’ – கையெழுத்து போராட்டம்

பதினைந்து வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வன்னியில் உள்ள மிகப்பெரிய மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் மனு ஒன்றில் கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, விசுவமடுவில் அமைந்துள்ள தேராவில் மாவீரர் துயிலும் இல்லமேலும் படிக்க...
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள கடமைகளைப் பொறுப்பேற்றார்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று (10) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கடமைகளைப் பொறுப்பேற்றார் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கமேலும் படிக்க...

