Day: December 28, 2024
தமிழரசுக் கட்சியில் இருந்து முன்னாள் எம்.பி அரியம் உட்பட பலர் நீக்கம்

கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளதுடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பின் சி. சிவமோகன் அவர்களும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும் படிக்க...
இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் நியமனம்

மாவை சேனாதிராஜா அரசியல் குழு தலைவராகவும், பெரும் தலைவராகவும் இருப்பார். இடைக்கால பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் என இலங்கை தமிழரசுக் கட்சின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (28) இடம்பெற்ற மத்திய குழுக்மேலும் படிக்க...
“அண்ணாமலை ‘பஞ்சு சாட்டை’ நாடகம் வெட்கக் கேடானது!” – கனிமொழி எம்.பி விமர்சனம்

பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் பஞ்சு சாட்டை நாடகம் வெட்ககேடானது, தமிழகத்துக்கு தலைகுனிவு செயல் என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி விமர்சித்துள்ளார். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட திமுக மண்டல ரீதியாக இணைந்த ஐடி விங்மேலும் படிக்க...
விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள் குருபூஜை: ஆயிரக் கணக்கானோர் புகழஞ்சலி

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவுநாளையொட்டி, கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குருபூஜையில், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், திரையுலகினர், தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் புகழஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மறைந்த முதலாம் ஆண்டுமேலும் படிக்க...
மட்டக்களப்பு – கல்லடி பழைய பாலத்தில் இயங்கி வரும் வர்த்தக நிலைய கூடாரங்கள் தீயிடப்பட்ட சம்பவம் – ஒருவர் கைது

மட்டக்களப்பு – கல்லடி பழைய பாலத்தில் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வர்த்தக நிலைய கூடாரங்கள் தீயிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் தற்போது தடுத்து வைத்து விசாரனைக்குட்படுத்துவதாக மட்டக்களப்பு தலைமைய கால்துறை தெரிவித்துள்ளது. குறித்த வர்த்தக நிலைய கூடாரங்கள் நேற்றுமேலும் படிக்க...
மன்மோகன் சிங்கின் பூதவுடல் முழு அரச மரியாதையுடன் தகனம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற மன்மோகன் சிங்கின் பூதவுடல் சீக்கிய முறைப்படி முழு அரச மரியாதையுடன் இன்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது. அதன் ஒருகட்டமாக 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை, இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்மேலும் படிக்க...
சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதைத் தடுப்பது குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமானச் சேவை நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள்மேலும் படிக்க...
இலங்கை பிரஜைகளுக்கு இலவச விசாவை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை
இந்தியா செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவச விசாவை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை – இந்தியாவுக்கிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை மேலும் விரிவாக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் இது ஏதுவாக அமையும் என்று வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.மேலும் படிக்க...
குற்றப் புலனாய்வு திணைக் களத்தில் ஜனவரி 3 இல் முன்னிலை ஆகுமாறு யோஷித்தவுக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரான யோஷித்த ராஜபக்ஷவை எதிர்வரும் 3 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. முறையற்ற சொத்து சேகரிப்பு விவகாரம் தொடர்பான விசாரணைக்கு முன்னிலையாகுமாறு யோசித்த ராஜபக்ஷவுக்கு குற்றப்புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. முன்னாள்மேலும் படிக்க...