Day: December 26, 2024
2023-24-ல் பாஜக பெற்ற நன்கொடை ரூ.2,244 கோடி, காங்கிரஸுக்கு ரூ.289 கோடி!

கடந்த 2023-24 நிதியாண்டில் பாஜக ரூ.2,244 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சிக்கு ரூ.580 கோடி கிடைத்த நிலையில், காங்கிரஸுக்கு ரூ.289 கோடி மட்டுமே கிடைத்தது. அரசியல் கட்சிகள் தாங்கள் பெறும் நன்கொடை பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்தில் ஆண்டுதோறும் தாக்கல்மேலும் படிக்க...
ஜப்பான் ஏர்லைன்ஸில் சைபர் தாக்குதல்: டிக்கெட் விற்பனை நிறுத்தம்; விமானங்கள் தாமதம்

ஜப்பான் ஏர்லைன்ஸ் சைபர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில். டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு, சர்வதேச விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜப்பான் ஏர்லைன்ஸ் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெள்யிட்டுள்ள பதிவில், “உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 7.25 மணிக்குமேலும் படிக்க...
கஜகஸ்தான் விமான விபத்தில் 35 பேர் உயிரிழப்பு

அசர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் கஜகஸ்தானின் அக்டா நகரில் விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்தனர். 11 வயது சிறுவன் உட்பட 32 பேர் காயங்களுடன் தப்பினர். அசர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்பரர்-190 ரக விமானம் 67 பேருடன், அசர்பைஜான் தலைநகர்மேலும் படிக்க...
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்

இந்த வருடம் நாட்டுக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை கடந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 20மேலும் படிக்க...
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்தின் உண்மைத் தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் – சாணக்கியன்

ஏப்ரல் 21 தாக்குதல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களின் உண்மைத் தன்மையை தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில்மேலும் படிக்க...
பாதாள குழுக்களிடம் சம்பளம் பெறும் பொலிஸ் அதிகாரிகளும் உள்ளனர் – சட்டத்தரணி சுனில் வட்டகல

பாதாள உலகக்குழு மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் சம்பளம் பெறும் பொலிஸ் அதிகாரிகள் இருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். இன்று (26) இடம்பெற்ற BIG FOCUS நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 552 மில்லியன் ரூபாய் நிதி உதவி
சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 552 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் கலைஞர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பான வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கானமேலும் படிக்க...
கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அமைதியின்மை – அர்ச்சுனா எம்.பி, தம்பிராசா இடையில் கருத்து மோதல்

கிளிநொச்சியில் இன்று (26) இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த சகாதேவன், நாடாளுமன்ற உறுப்பினர் போல இல்லாமல் நீங்கள் ஏன்மேலும் படிக்க...
இசையுலகில் ஹாரிஸ் ஜெயராஜின் மகன் அறிமுகம்!

இசையுலகுக்கு ‘ஐயையோ’ என்ற பாடலின் மூலம் அறிமுமாகியுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜின் மகன் சாமுவேல் நிக்கோலஸ். முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். ‘மின்னலே’ தொடங்கி பல்வேறு படங்களுக்கு ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார். தற்போது அவருடைய மகன் சாமுவேல் நிக்கோலஸும் இசையுலகுக்குமேலும் படிக்க...
‘எம்ஜிஆரை மோடியுடன் ஒப்பிடுவதா?’ – அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம்

“மத அரசியல் செய்யாத மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை, பிரதமர் மோடியுடன் ஒப்பிட முடியாது” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி, அவருக்கு புகழாரம் சூட்டியிருந்தமேலும் படிக்க...
20 ஆண்டுகளைக் கடந்துள்ள ஆழிப்பேரலை – தேசிய பாதுகாப்பு தினம் இன்று

ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்று தேசிய பாதுகாப்பு தினம் அனுட்டிக்கப்படவுள்ளது. அதற்கமைய, ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடுமுழுவதும் இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்தமேலும் படிக்க...
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாண அரச ஆசிரியர் சேவைக்கு 2024ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்டமாக 52 ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் இன்று வியாழக்கிழமை (26) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில்மேலும் படிக்க...
வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய இரு இளைஞர்கள் – ஒருவர் பலி

வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்றிரவு இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். கோவில்குளம் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் அதன் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன்மேலும் படிக்க...
சுனாமி ஆழிப் பேரலையில் சிக்கி உயிரிழந்த கள்ளப்பாடு பாடசாலை மாணவர்களுக்கு நினைவஞ்சலி

கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும்போது ஆழிப்பேரலையில் சிக்கி உயிரிழந்த 68 மாணவர்களுக்கு இன்று (26) கள்ளப்பாடு பாடசாலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சுனாமி கடல் அனர்த்தத்தில் உயீர்நீத்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றப்பட்டுமேலும் படிக்க...