Day: December 17, 2024
பேரவலத்தின் சாட்சியாக முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கப்பட வேண்டும்; ரவிகரன் எம்.பி வலியுறுத்து

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் பேரவலத்தின் சாட்சியாக, நினைவாலயம் ஒன்று அமைக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை (17) சர்வதேச இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்புதொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும்மேலும் படிக்க...
இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்

இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் பாலஸ்தீன அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி பி.பி.சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதேநேரம், இஸ்ரேலின் பாதுகாப்புமேலும் படிக்க...
நாமல் பல்கலைக் கழகங்களில் படித்து பட்டம் பெற்றவர்களின் கல்வித் தகைமையை கேள்விக்கு உள்ளாக்குகிறார் – வசந்த சமரசிங்க

தந்தை ஜனாதிபதி என்பதால் பரீட்சை சட்டத்திட்டங்களை முழுமையாக மீறி தனி அறையில் இருந்து சட்டமாணி பரீட்சை எழுதிய நாமல் ராஜபக்ஷ பல்கலைக்கழகங்களில் கடினமாக படித்து பட்டம் பெற்றவர்களின் கல்வித் தகைமையை கேள்விக்குள்ளாக்குகிறார். முறையான விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என வர்த்தகம், வாணிபம்,மேலும் படிக்க...
தமிழகத்திலுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகளை மீளவும் வரவழைப்பதே எமது விருப்பம் – வடக்கு மாகாண ஆளுநர்

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் நாட்டுக்கு வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகவும் இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் தேசிய அலுவலகத் தலைவராகப் பணியாற்றிய சஞ்சிதா சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர்மேலும் படிக்க...
13 ஆம் திருத்தத்தை உள்ளடக்கிய பிரதமர் மோடியின் வலியுறுத்தலை வரவேற்கிறோம் – எம்.ஏ.சுமந்திரன்

அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியினால் வலியுறுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனுள் 13 ஆவது திருத்தமும் உள்ளடங்குவதனால் அவ்வலியுறுத்தலை தாம் வரவேற்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இருப்பினும் அவற்றை கூட்டறிக்கையில் உள்ளடக்குவதற்கு இலங்கை அரசாங்கம் உடன்பட்டிருக்காவிடின்,மேலும் படிக்க...
பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு – பிரதமர்

2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 25,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (17) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றுக் கொண்ட அமைச்சர்கள், எம்.பிகளின் பெயர் பட்டியல் வெளியானது

2005 – 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுக்கொண்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் இன்று (17) பகிரங்கப்படுத்தினார். முன்னாள் பிரதமர் தி.மு ஜயரத்னவுக்குமேலும் படிக்க...
வானுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வானுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கமானது போர்ட்- விலாவிற்குமேலும் படிக்க...
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெர்மன் அதிபர் தோல்வி

ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸின் கூட்டணி அரசாங்கம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பனது வரும் பிப்ரவரியில் விரைவான தேர்தலுக்கு வழி வகுத்துள்ளது. 394 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தனர். அரசாங்கத்திற்கு ஆதரவாக 207 பேர் வாக்களித்தனர். பட்ஜெட்மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு அடுத்த வாரம் முதல் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த முப்படை பாதுகாப்பை அடுத்த வாரம் முதல் நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இன்று நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்தார் இதுவரை வழங்கப்பட்டு வந்த முப்படை பாதுகாப்பை அடுத்த வாரம் முதல் நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுமேலும் படிக்க...
கோட்டாபய அரசாங்கம் தான் தோன்றித்தனமாக செயற்பட்டது – எதிர்க் கட்சித் தலைவர்
கொவிட் காலத்தில் முஸ்லிம்களின் சடலங்கள் தகனம் செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். கொவிட் பரவல் காலத்தில் ஒரு இனத்தையும்,மதத்தையும் இலக்கு வைத்து கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய வழிகாட்டுதல்களையும் மீறி செயற்பட்டது.மேலும் படிக்க...
நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது

கஞ்சா வைத்திருந்ததாக தேனி மாவட்ட போலீசார் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்வேறு தடைகளை தாண்டி இந்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் ஜாமின் பெற்று சமீபத்தில் விடுதலை ஆனார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில்மேலும் படிக்க...
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: இலங்கை அதிபரிடம் வலியுறுத்த பிரதமருக்கு நவாஸ்கனி எம்.பி கடிதம்

இலங்கை அதிபர் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இவரிடம், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திரமோக்கு ஐயூஎம்எல் எம்பி கே.நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து ராமநாதபுரம் தொகுதி இந்தியன் யூனியன்மேலும் படிக்க...
டிச.21 முதல் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அனுமதி : மாநகர போக்குவரத்துக் கழகம்

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் டிச.21-ம் தேதி முதல் வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்குமேலும் படிக்க...
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை இரத்துச் செய்யும் மனு தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு

யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷலமேலும் படிக்க...
புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன தெரிவு

10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இடம்பிட்டிய கெதரயோ வணிகசூரிய முதியான்சலாகே ஜகத் விக்கிரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரது பெயரை பிரதமர் ஹரினி அமரசூரிய முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து சபை முதல்வர்மேலும் படிக்க...



