Day: November 15, 2024
தனித்துவமான வெற்றிக்கு நன்றி – ஜனாதிபதி

பாராளுமன்ற தேர்தலில் தனித்துவமான வெற்றியை வழங்கிய வாக்காளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது நன்றியை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது ‘எக்ஸ்’ கணக்கில் குறிப்பை ஒன்றை இட்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் ‘மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும்மேலும் படிக்க...
முதல் தடவையாக இரு மலையகத் தமிழ்ப்பெண்கள் பாராளுமன்றம் தெரிவு

மலையக அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மலையக சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரான கலைச்செல்வி 33,346 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள அதே வேளை பதுளை மாவட்டத்தின் தேசியமேலும் படிக்க...
தேர்தல் வரலாற்றில் அதிக விருப்பு வாக்குகள் பெற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய

2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இந்த எண்ணிக்கையான வாக்குகள் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒருமேலும் படிக்க...
பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் எனக்கில்லை – அங்கஜன் இராமநாதன்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் அதேநேரத்தில், காலங்காலமாக பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் எனக்கில்லை என்பதோடு என்னால் எனது சொந்த விடயங்களை கவனிக்க கிடைத்த சந்தர்ப்பமாகவும் இதனை எடுத்துக் கொள்கிறேன் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன்மேலும் படிக்க...
தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் – சுமந்திரன்
தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது கட்சி என்ன தீர்மானம் எடுக்கும் என நான் முன்கூட்டியே தெரிவிக்க முடியாது,கட்சியினது முடிவு இறுதியானதாகயிருக்கும்,நான் கட்சியின் சகல முடிவுகளிற்கும்மேலும் படிக்க...
விகிதாசார தேர்தல்களின் கீழ் இது ஒரு வரலாற்று வெற்றி – டில்வின் சில்வா

விகிதாசாரத் தேர்தலின் கீழ் இது ஒரு வரலாற்று வெற்றி எனத் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். வெற்றியின் அரசியல் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், வெற்றிக்காகத் தியாகம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். பொய்ப் பிரசாரங்களுக்குமேலும் படிக்க...
வன்னியில் பாராளுமன்றுக்கு தெரிவானவர்கள் விபரம்

வன்னித் தேர்தல் தொகுதியில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியவர்களில் அதிகூடிய விருப்பு வாக்குளை ரிசாத் பதியுதீன் அவர்களும், குறைந்த விருப்பு வாக்குகளை செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் பெற்றுள்ளனர். நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல்மேலும் படிக்க...
அமைதியான, ஜனநாயக ரீதியிலான பாராளுமன்றத் தேர்தலுக்கு ஜப்பான் தூதுவர் வாழ்த்து

அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான பாராளுமன்றத் தேர்தலுக்கு இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடா (Akio Isomata) வாழ்த்து தெரிவித்துள்ளது. ஜனநாயக ரீதியாகவும் ஒற்றுமையாகவும் பாராளுமன்றத் தேர்தலில் ஈடுபட்ட இலங்கை மக்களுக்குத் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பாராளுமன்றமேலும் படிக்க...
அரசு மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்: 45,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்றமேலும் படிக்க...
யாழில் வெற்றி பெற்ற நபர்கள்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இலங்கை தமிழரசு கட்சி,மேலும் படிக்க...
கட்சிகள் பெற்றுக் கொண்ட போனஸ் ஆசனங்கள்

நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய 6,863,186 வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தியினருக்கு 18 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் 1,968,716 வாக்குகளை பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு 05 போனஸ் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன் 500,835மேலும் படிக்க...
தோல்வியடைந்த பிரபல தமிழ் அரசியல்வாதிகள்

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர். இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்துள்ளார். ப்ளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் யாழ்ப்பாண மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். அத்துடன் கடந்தமேலும் படிக்க...
சரத்வீரசேகர -நிமால் – சுசில் பிரேமஜயந்த தோல்வி

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர தோல்வியடைந்துள்ளார். இதேபோன்று முன்னாள் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் தோல்வியடைந்துள்ளார் இதேபோன்று முன்னாள் அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வாவும் தோல்வியடைந்துள்ளார். 1989இல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் 35 வருடங்களின் பின்னர்மேலும் படிக்க...
முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினார் தேர்தலில் வெற்றிபெற்ற துரைராசா ரவிகரன்

பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற துரைராசா ரவிகரன் இன்று வெள்ளிக்கிழமை (15) முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். நேற்று வியாழக்கிழமை (14) நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றிமேலும் படிக்க...
2024 நாடாளுமன்றத் தேர்தலின் இறுதித் தேர்தல் முடிவுகள்

2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளுக்கமைவான மொத்த ஆசன ஒதுக்கீடுகள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, தேசிய மக்கள் சக்தி 141 ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலம் 18 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. இதன்படி, மொத்தமாக 159 ஆசனங்களைத் தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டுள்ளது. அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி 35மேலும் படிக்க...
டொமினிகா நாட்டின் உயரிய விருதைப் பெறுகிறார் பிரதமர் மோடி
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலின்போது அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்தியா மருந்து பொருட்களை வழங்கி உதவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டனர். கொரோனா தடுப்புக்கான 70 ஆயிரம் ஆஸ்டிராஜெனிகா டோஸ்களை டொமினிகாவுக்கு இந்தியா வழங்கியது. இதனால் அவற்றை பெற்று சகமேலும் படிக்க...
மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம் விதித்த ஐரோப்பிய ஆணையம்

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை ‘மெட்டா’ நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க் ஜுக்கர்பெர்க் நிர்வகித்து வருகிறார். இதனிடையே மெட்டா நிறுவனம், மார்க்கெட்பிளேஸ் எனும் விளம்பர சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்த சேவையை ஃபேஸ்புக்கில் புகுத்திய மெட்டா,மேலும் படிக்க...
இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை தடை செய்யக் கோரிய மனு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி

இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கேரளாவை சேர்ந்த ஓமனகுட்டன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், வாட்ஸ்அப் செயலியை தடை செய்ய வேண்டும் என கோரியிருந்தார். அந்த மனுவில், குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் மத்தியமேலும் படிக்க...
பாராளுமன்றின் பெரும்பான்மையை கைப்பற்றியது NPP

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இதுவரை வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) மொத்தம் 123 இடங்களை வென்றுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 19 ஆசனங்களில் 16 ஆசனங்களைக் கைப்பற்றியதன் பின்னர், தேசிய மக்கள் சக்தியின் பெரும்பான்மை பலம் உறுதியாகியுள்ளது. இதுவரைமேலும் படிக்க...

