Day: November 10, 2024
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன்
மீனவர்களின் மீன்பிடித்தொழில் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மத்திய மாநில அரசுகள்மேலும் படிக்க...
வாக்குரிமையை பயன்படுத்துமாறு மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தல்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகியிருப்பதையோ அல்லது செல்லாத வாக்களிப்பதையோ தவிர்த்து, உரிய முறையில் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, வாக்காளர்களை வலியுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துமேலும் படிக்க...
தமிழ் மக்களின் பிரதான கட்சி தமிழரசுக் கட்சி தான்

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ். சிவகரன் தலைமையில் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் நேற்று (09) இடம்பெற்ற மக்கள்மேலும் படிக்க...
ஒரு சில அதிகாரிகள் விடும் தவறுகளுக்கு அரசாங்கத்தை குறை கூறி பயனில்லை – கீதநாத் காசிலிங்கம்

ஒரு சில அதிகாரிகள் விடும் தவறுகளுக்கு அரசாங்கத்தை குறை கூறி பயனில்லை. சம்பவம் உரிய விசாரணை நடத்தி நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாக இருக்கின்றது என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய குழு உறுப்பினரும், யாழ்மேலும் படிக்க...
அரசியல் கைதிகள் விடுதலை- நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலங்கள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார். வடபகுதி தமிழர்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பல வருடங்களாக மூடப்பட்டிருந்தமேலும் படிக்க...
ராமேஸ்வரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது
ராமேஸ்வரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டமேலும் படிக்க...
இஸ்ரேல் – ஹமாஸ் மத்தியஸ்த பேச்சு வார்த்தையிலிருந்து கட்டார் விலகியுள்ளது

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக செயற்பட்டுவந்த கட்டார் குறித்த பணியை இடைநிறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் தங்கள் விருப்பத்தைக் காட்டும்போது, குறித்த பணிகள் மீண்டும் தொடங்கும் என்று கட்டார் குறிப்பிட்டுள்ளது.மேலும் படிக்க...
உக்ரைன் டிரோன் தாக்குதல்.. 2 விமான நிலையங்களை தற்காலிகமாக மூடிய ரஷியா

மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் காரணமாக அந்நாட்டில் விமான சேவை பாதிக்கப்பட்டது. உக்ரைனின் திடீர் டிரோன் தாக்குதல் காரணமாக இரண்டு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. டிரோன் தாக்குதலால் விமான நிலையங்கள் மூடப்பட்டதை ரஷிய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். மாஸ்கோ பிராந்தியத்தின் ராமென்ஸ்காய் மற்றும்மேலும் படிக்க...
கனடா இந்து கோவில் தாக்குதல்: இந்தியாவால் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்க நபர் கைது

கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து மகாசபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பிராம்டனில் உள்ள ஹிந்து மகா சபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது அங்கு கூடிய காலிஸ்தான்மேலும் படிக்க...
இலங்கைக்கு வருகை தரவுள்ள IMF பிரதிநிதிகள் குழு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வார இறுதியில் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வு குறித்துக் கலந்துரையாடுவதற்காக இந்தக் குழு இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல்

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (10) காலை இடம்பெற்றது. சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவு சதுக்கத்தில் முன்னாள் நகர சபை உறுப்பினர்மேலும் படிக்க...
சுன்னாகத்தில் பொலிஸாரினால் தாக்கப் பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் – கீதநாத் காசிலிங்கம்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் சுன்னாகம் பொலிஸாரால் இளம் தாயொருவரும்,மேலும் படிக்க...
பெரும்பான்மை இன்றேல் கொள்கை கூட்டுக்கு தயார் – ரஞ்சித் மத்தும பண்டார
அடுத்த பாராளுமன்றத்தில் எந்தவொரு தரப்பினருக்கும் பெரும்பான்மையான மக்கள் ஆணை கிடைக்கவில்லை என்றால் கொள்கையளவிலான கூட்டணியொன்றை அமைத்து சட்டவாக்க ஆட்சி அதிகாரத்தினை முன்னெடுப்பதற்கான பேச்சுக்களை தொடர்வதற்கு நாம் தயாராகவே உள்ளோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...