Day: October 26, 2024
எல்பிட்டிய தேர்தலில் 63 சதவீத வாக்குப்பதிவு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ.ஏ. தர்மசிறி இதனைத் தெரிவித்தார். மேலும், எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் 10 மணிக்கு பின்னர் வௌியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்றுமேலும் படிக்க...
சசிகலா ரவிராஜ் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சசிகலா ரவிராஜின் வீட்டிக்கு அயல் வீட்டில் உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவாளரான பெண் ஒருவரினிலாயே இந்த கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சசிகலா ராவிராஜ் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
பிரான்சில் கடந்த வாரத்தில் விற்பனை செய்யப்பட்ட முட்டைகளில் பக்டீரியா?

பிரான்சில் கடந்தவாரத்தில் விற்பனை செய்யப்பட்ட முட்டைகளில் பக்டீரியா கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டைகளை பயன்படுத்தவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. Tout frais tout français, Douce France, Ovalis, Poitou oeufs மற்றும் ECO+ ஆகிய நிறுவனங்களை சேர்ந்த முட்டைகளில் ”Salmonella Typhimurium” எனமேலும் படிக்க...
ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டு வரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7-ந்தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. ஓர் ஆண்டுக்குள் தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள்மேலும் படிக்க...
ரஷியாவுடன் இணைந்த வடகொரிய ராணுவம்: அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் 2 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும் போர் நிற்கவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருகிறது என ரஷியா குற்றம்சாட்டியது. இதற்கிடையே, உக்ரைனுக்குமேலும் படிக்க...
2024-இல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் மூன்று இந்திய பள்ளிகள்

2024-இல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் தமிழகம், தில்லி, மத்திய பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த மூன்று பள்ளிகள் இடம்பிடித்துள்ளன. லண்டனை தளமாகக் கொண்ட ‘டி4’ கல்வி நிறுவனம் சிறந்த பள்ளிக்கான இந்த அங்கீகாரத்தை அறிவித்துள்ளது. உலக அளவில் சிறந்த பங்களிப்பு மற்றும்மேலும் படிக்க...
புதிய திட்டங்களும் நவீன தீர்வுகளும்தான் இன்று தேவை – ராகுல்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஒரு சலூன் கடையில் சவரம் செய்யும்போது கடைக்காரரான அஜித்துடன் உரையாடல் குறித்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விடியோவில் “நாள் முழுவதும் உழைத்தாலும், நாளின் இறுதியில் சேமிக்கக்கூடிய வகையில் எதுவும் மிஞ்சவில்லை’’ என்றுமேலும் படிக்க...
ஒரே நாளில் 191 கோடி பரிசுப் பொருட்களை தேர்தல் ஆணையம் பறிமுதல்

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் ஒரே நாளில் 191 கோடி பரிசுப்பொருட்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20ம் தேதியன்று பேரவைத் தேர்தல் நடக்கிறது. அங்கு 24 மணி நேரத்தில் ரூ.52 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
ரஷ்யா மற்றும் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளை தேடும் நடவடிக்கை

ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்து தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளைத் தேடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நவம்பர் மாத தொடக்கத்தில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தால், தெற்கு கரையோரப் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. கிறிஸ்மஸ்மேலும் படிக்க...
இலங்கை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் திருநங்கை

இலங்கை சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கை தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் திருநங்கை என்ற வரலாற்றை படைத்துள்ளார். இவர், நடைபெறவுள்ள பொதுதேர்தலில், கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றனது. இந்நிலையில் “பொதுத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளித்தமேலும் படிக்க...
யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தின் புதிய செயலாளருக்கு எதிர்ப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளராக சட்டவிரோதமான முறையில் புதிதாக பதவியேற்றவருக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளராக இதுவரை காலமும் பதவிவகித்தவர் தனது கற்கைகளை முடித்து வெளியேறிய நிலையில் அவருடையமேலும் படிக்க...
பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நாளை முதல் விநியோகம்

பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தபால்மூலம் விநியோகிக்கப்படும். எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதியுடன் வாக்காளர் அட்டை விநியோக பணிகள் நிறைவடையும். பொதுத்தேர்தல் எதிர்வரும் நவம்பவர் மாதம் 14 (வியாழக்கிழமை) நடைப்பெறவுள்ளது. வாக்கெடுப்புக்கான சகல பணிகளையும்மேலும் படிக்க...
தமிழ் முற்போக்கு கூட்டணியும், இலங்கை தமிழரசு கட்சியும் வெல்வது காலத்தின் கட்டாயம் – மனோ கணேசன்
தமிழ் முற்போக்கு கூட்டணியும், இலங்கை தமிழரசு கட்சியும் வெல்வது காலத்தின் கட்டாயம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இது குறித்து மனோ கணேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஜனாதிபதி அநுரகுமாரமேலும் படிக்க...
தமிழ் மக்கள் கூட்டணியினர் யாழில் பிரசாரம்

தமிழ் மக்கள் கூட்டணியினரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று (26) யாழ் நகரில் முன்னெடுக்கப்பட்டது. யாழ் நகர் பகுதியில் தேர்தலுக்கான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு பொதுமக்களிடம் ஆதரவு கோரப்பட்டது. இப்பிரசாரத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன்,மேலும் படிக்க...
நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் சிக்கல்

நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்படி, ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்பட்டன. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாமலும் ஏழுமேலும் படிக்க...