Day: September 21, 2024
தமிழக மீனவர்கள் 37 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கை

தமிழக மீனவர்களின் மூன்று விசைப் படகுகளை கைப்பற்றி 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். நெடுந்தீவு கடற்பகுதியில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 3 விசைப்படகுகளையும், அதிலிருந்த 37 மீனவர்களையும் எல்லை தாண்டியக் குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் ரோந்துப்மேலும் படிக்க...
“ஒரு தமிழன் பிரதமர் ஆக நாட்டை தயார்படுத்த வேண்டும்” – மநீம பொதுக்குழுவில் கமல்ஹாசன்

“ஒரு தமிழன் பிரதமர் ஆக நாட்டை தயார்படுத்த வேண்டும்” என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். சென்னை, தேனாம்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று (செப்.21)மேலும் படிக்க...
எவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப் பட்டாலும் அவருக்கு எனது ஆதரவு -மைத்திரி
எவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாலும் அவருக்கு ஆதரவளிப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.பொலனுவையில் வாக்களித்த பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.எதிர்வரும் தேர்தல்களிற்காக அரசாங்கம் 40 பில்லியனை செலவிடவேண்டும் என்பதால் புதிய ஜனாதிபதி பல சவால்களை எதிர்கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார்.இந்தமேலும் படிக்க...
அமைதியான முறையில் வெற்றியை கொண்டாடுங்கள் – ஜனாதிபதி வேட்பாளர்கள் மக்களிடம் கோரிக்கை

ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் வாக்களித்தனர். வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுங்கள். வன்முறைகளுக்கு இடமளிக்க வேண்டாம் என பொதுமக்களிடம் வலியுறுத்தினார்கள்.ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை (21) காலை 7மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்
இன்று சனிக்கிழமை (21) இரவு 10.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
ரணில் வென்றால் பாராளுமன்றம் கலைக்கப் படாது – பாராளுமன்ற உறுப்பினர் திலீபன்

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெல்லும் பட்சத்தில் ஒன்றரை வருடங்களுக்குப் பாராளுமன்றம் கலைக்கப்படாது என்பதில் நம்பிக்கை உள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவித்தார்.இன்று வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் தனது வாக்கைப் பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதேமேலும் படிக்க...
வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப் படுகின்றன

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (21) ஆம் திகதி சுதந்திரமாகவும் அமைதியாகவும் நிறைவடைந்துள்ளது.இன்றையதினம் காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.இந்நிலையில், வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுக்மேலும் படிக்க...
முதலாவது தேர்தல் முடிவு நள்ளிரவு வெளியாகலாம் – தேர்தல் ஆணைக்குழு

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவு இன்று சனிக்கிழமை (21) நள்ளிரவுக்குள் வெளியாகும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.முதலில் தபால் மூல வாக்கு முடிவுகளா அல்லது பதிவு வாக்கு முடிவுகளாமேலும் படிக்க...
மட்டக்களப்பு மாவட்டத்தில் மதியம் 12.00 வரை 23.36 சதவீதம் வாக்களிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 442 வாக்கெடுப்பு நிலையங்களிலும் மதியம் 12.00 வரையிலும் 105,054 (23.36%) வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே. ஜே. முரளிதரன் தெரிவித்தார்.இதனடிப்படையில், கல்குடா தொகுதியில் 28,668 வாக்குகளும், மட்டக்களப்பு தொகுதியில் 55,089 வாக்குகளும்,மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது – ரோஹன ஹெட்டியாராச்சி

நாடளாவிய ரீதியில் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருவதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம்மேலும் படிக்க...
துணைவியாருடன் சென்று தனது வாக்கைப்பதிவு செய்தார் ரணில்

2024 இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளாரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது துணைவியாருடன் சென்று வாக்களித்துள்ளார்.கொழும்பு ரோயல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று அவர் தமது வாக்கினை பதிவு செய்தார். அதேவேளை ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் மேலும் படிக்க...
வவுனியா மாவட்டத்தில் காலை 10.00 மணி வரை 30 சதவீதமான வாக்குகள் அளிக்கப் பட்டுள்ளன

இன்றைய தினம் (21) இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பானது காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.அந்தவகையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.பி.ஏ. சரத்சந்ர அவர்கள் தற்சமயம் ஊடக சந்திப்பில் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.வவுனியா மாவட்டத்தில் பதிவுமேலும் படிக்க...
திருகோணமலை மாவட்டத்தில் நண்பகல் 12 மணி வரை 51.7 வீதமான வாக்குகள் பதிவு

திருகோணமலை மாவட்டத்தில் இன்று (21) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 51.7 வீதமான வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன. திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 315,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 155,713 பேர் பகல் 12 மணி வரை வாக்களித்துள்ளனர். இது 51.7மேலும் படிக்க...
கிளிநொச்சியில் காலை 10.00மணிவரை 27.14 சதவீதம் வாக்களிப்பு

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று(21) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் காலை 10.00 மணிவரை 27.14 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.இதுவரை வாக்களிப்பு சுமூகமான முறையில் இடம்பெற்றுவருவதுடன், தேர்தல் கடமைகளில்மேலும் படிக்க...
யாழ். நீர்வேலியில் வீடொன்றில் தீ விபத்து – வயோதிபப் பெண் பலி

யாழ்ப்பாணம் நீர்வேலியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.வீட்டிலிருந்த எரிவாயு சிலிண்டர் வெளியே தூக்கி வீசப்பட்டு தீயில் எரிந்துள்ளது. அத்தோடு, அவ்வீட்டின் வாசலில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிளகாய்த்தூள் வீசப்பட்டுள்ளது.இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற யாழ்ப்பாண மாநகரமேலும் படிக்க...





