Day: September 14, 2024
நாளை முதல் SNCF பயணிகளின் பயணப் பொதிகளுக்கு புதிய கட்டுப்பாடு

நாளை முதல் (15/09) SNCF பயணிகளின் பயணப் பொதிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் தொலைதூர தொடரூந்து சேவைகளை வழங்கும் SNCF தங்களின் தொடரூந்து சேவைக்கான TGV, inOui, மற்றும் Intercités சேவைகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அவர்கள் எடுத்து செல்லும் பயணப்மேலும் படிக்க...
விண்வௌியிலில் இருந்து ஊடக சந்திப்பில் இணைந்த சுனிதா வில்லியம்ஸ் – புட்ச் வில்மோர்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் நேரடி ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்துகொண்டனர்.இவர்கள் இருவரும் விண்வெளியில் இருந்து நேற்று(13) நள்ளிரவு நேரடி ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்தனர்.அனைத்து விதமான சூழ்நிலைகளையும் கையாள தாம்மேலும் படிக்க...
நாட்டின் பொருளாதாரம் முதன்மையானது: அதனுடன் விளையாடுவதற்கு இனி எவருக்கும் இடமளிக்கக் கூடாது – ஜனாதிபதி
உண்மையைப் பேச அரசியல்வாதிகள் தயாரில்லை என்பதாலும், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற பெருமளவிலான கடன்களைப் பெற்றுக்கொண்டதாலுமே நாட்டின் பொருளாதாரமும் அரசியலும் சரிவைக் கண்டது என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2048க்குப் பொருத்தமான ஒரு சமூக மாற்றத்தை நோக்கி நாம் நகரமேலும் படிக்க...
ஓய்வுபெறும் வயது எல்லையை உயர்த்தும் சீனா
சீனா, வேலையிலிருந்து ஓய்வுபெறும் வயதை அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தவிருக்கிறது.ஊழியரணி நலிவடைந்து வருவதைச் சமாளிக்க அந்த முடிவு எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.ஆண்களின் வேலை ஓய்வு வயது 60லிருந்து 63க்கு உயர்த்தப்படும். தொழில்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு வேலை ஓய்வு வயது 50லிருந்து 55க்கு உயரும். அலுவலகத்தில்மேலும் படிக்க...
ரஷ்யாவிடமிருந்த போர்க் கைதிகள் 49 பேர் உக்ரேனுக்குத் திரும்பினர்

ரஷ்யாவிடமிருந்த போர்க்கைதிகள் 49 பேரை உக்ரேன் பத்திரமாகத் திரும்பப் பெற்றுள்ளது. 2022ஆம் ஆண்டு மரியுபோல் (Mariupol) நகரில் அஸோவ்ஸ்டால் (Azovstal) எஃகு ஆலையைத் தற்காத்த வீரர்களும் விடுவிக்கப்பட்டவர்களில் அடங்குவர் எனவும் பொதுமக்களும் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கைதிகள் பரிமாற்றத்துக்கு ஐக்கிய அரபுச் சிற்றரசுகள்மேலும் படிக்க...
“இந்தி அலுவல் மொழியாகி 75 ஆண்டுகள்: வளர்ச்சியடைந்த இந்தியாவை உறுதிப் படுத்த இந்தி தொடர்ந்து பங்களிக்கும்” – அமித் ஷா

அனைத்து இந்திய மொழிகளையும் ஒன்றாகக் கொண்டு செல்வதன் மூலம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கு அலுவல் மொழியான இந்தி தொடர்ந்து பங்களிக்கும் என்று நம்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.இந்தி அலுவல் மொழி தினம் இன்று (செப்.14) கொண்டாடப்படுவதைமேலும் படிக்க...
மனித உரிமை குறித்த ஐ.நா தரவரிசை அரசியல் உள்நோக்கம் கொண்டது: அமைச்சர் ஜெய்சங்கர்

உலக நாடுகளின் மனித உரிமை தொடர்பான ஐநா மனித உரிமை ஆணையத்தின் தரவரிசை, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார்.ஸ்விட்சர்லாந்து சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஜெனிவாவில் உள்ள இந்திய மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், “உலகமேலும் படிக்க...
நாட்டின் வறுமையை போக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி அடித்தளம் இடும் -சஜித்

நாட்டின் வறுமையை போக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி அடித்தளம் இடும் என அதன் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித்மேலும் படிக்க...
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெறவுள்ளது.இதனால், தேர்தல் பிரச்சாரங்கள் பரீட்சைகளுக்கு இடையூறை விளைவிக்கலாம். எனவே, நாளைய தினம் காலை பரீட்சை நிலையங்களுக்கு அருகில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர்மேலும் படிக்க...
2005ல் தமிழ் மக்கள் ரணிலுக்கு அளிக்காத வாக்குகளையும் இம்முறை அளித்து ரணிலை வெற்றி பெறச் செய்வோம் – விஜயகலா மகேஸ்வரன்
இறுதி யுத்தத்தில் மக்கள் பலர் கொல்லப்பட்டதோடு . பொதுமக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்ததோடு தமது சொத்துக்கள் உடமைகளையும் இழந்தனர். கடந்த கால அரசுகள் கிறிஸ்பூதம், வாள்வெட்டு கலாச்சாரங்களை விதைத்தனர். 2005ல் தமிழ் மக்கள் ரணிலுக்கு அளிக்காத வாக்குகளையும் இம்முறைமேலும் படிக்க...
தெற்கின் ஜனாதிபதி வேட்பாளர்கள் சிங்கள , பௌத்த தேசியத்தின் மேலாண்மையை வலியுறுத்தியே பிரச்சாரம் – வட கிழக்கு குருக்கள் துறவியர் ஒன்றியம் அறிக்கை

தெற்கிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிங்கள , பௌத்த தேசியத்தின் மேலாண்மையை வலியுறுத்தியே பிரச்சார மேடைகளை அலங்கரிக்கிறார்கள் என வட கிழக்கு மாகாணங்களுக்கான நீதிக்கும் சமாதானத்துக்குமான குருக்கள் துறவியர் ஒன்றியத்தின் சார்பாக அருட்பணி கிறிஸ்தோபர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீண்டும் ஒருமேலும் படிக்க...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி நீதிமன்றில் மனு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாண காவல் துறையினரால் யாழ். நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் 37ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையில்மேலும் படிக்க...