Day: December 27, 2022
இனப்பிரச்சனைக்கான விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள்-சுரேந்திரன் குருசுவாமி
இனப்பிரச்சினை விடயத்தில் கருத்து கூறுவதற்கு எரிக் சொல்ஹெய்முக்கு எவ்வித உரிமைகளும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இனப்பிரச்சனைக்கான தீர்வுமேலும் படிக்க...
திலினி பிரியமாலி சிறைச்சாலையில் இருந்து விடுதலை
நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலிக்கு அனைத்து வழக்கிலும் பிணை வழங்கப்பட்டமை காரணமாக அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் தொலைபேசி வைத்திருந்த குற்றச்சாட்டுமேலும் படிக்க...
வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் 151 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்
கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையை சேர்ந்தவர்களில் 151 பேர் இன்று வியட்நாம் நாட்டு நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர். புவனேஸ்வரி பாஸ்கரதாஸ் (27/12/2022)

தாயகத்தில் சுழிபுரத்தை சேர்ந்த திருமதி.புவனேஸ்வரி பாஸ்கரதாஸ் அவர்கள் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்ற பாஸ்கரதாஸ் அவர்களின் அன்பு மனைவியும், அனுசுயா (பிரான்ஸ்), மதியழகன் (யாழ்ப்பாணம்), மதிசுதன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், அருள்மொழித்தேவன் நந்தினி குமுதினிமேலும் படிக்க...
