Friday, January 11th, 2019

 

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை இழந்து தடுமாறும் பாகிஸ்தான் அணி!

பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 262 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பில் Aiden Markram 90 ஓட்டங்களையும், Theunis de Bruyn 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களம் இறங்கியுள்ள பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கட்டுக்களை இழந்து 17 ஓட்டங்களை பெற்றுள்ளது. போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளது.


ஜேர்மனியில் எரிமலை வெடிக்கும் வாய்ப்பு?

ஜேர்மனியில் முதல் முறையாக ஆழ்ந்த மற்றும் தாழ்வதிர்வெண் நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளமையானது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜேர்மனியின் Eifel volcano பகுதியில் தாழ்வதிர்வெண் நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதையடுத்து, இத்தகைய நிலநடுக்கங்கள் பொதுவாக பூமியின் ஆழத்தில் எரிமலைக் குழம்பு நகர்வதால் ஏற்படக்கூடியவை என்பதால், அப்பகுதியில் எரிமலை வெடிப்பு ஏற்படலாம் என கருதப்படுகிறது. தென்மேற்கு ஜேர்மனியின் நிலநடுக்கங்களை ஆய்வு செய்யும் அமைப்பும், நிலவியல் ஆய்வு அமைப்பும், Karlsruhe தொழில்நுட்ப நிறுவனமும், North Rhine-Westphaliaவின் நிலநடுக்கங்களை ஆய்வு செய்யும் அமைப்பும் இந்த ஆய்வில் ஈடுபட்டன. Geophysical நிறுவனத்தின் பேராசிரியரான Joachim Ritter இந்த நிலநடுக்கங்கள் பூமிக்கடியில் மிகவும் ஆழத்தில் உருவாகியுள்ளதாகவும், மிகவும் தாழ்வதிர்வெண் கொண்டவையாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார். மனிதனால் உணர முடியாத அளவுக்கு அவற்றின் அதிர்வெண் உள்ளதாக தெரிவிக்கிறார் அவர். இத்தகைய தாழ்வதிர்வெண் நிலநடுக்கங்கள், பூமியின் பரப்பிலிருந்து 10 முதல் 40 கிலோமீற்றர் ஆழத்தில்மேலும் படிக்க…


நார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட் காலத்தை அதிகாரிக்கும்!

நாம் உண்ணும் உணவுகளில் காணப்படும் அதிகளவிலான நார்ச்சத்து ஆரம்பகால மரணத்தின் ஆபத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்க உதவுகிறது என ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. நார்ச்சத்துள்ள உணவுகள் இயல்பாகவே பலவீனமான மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற வாழ்க்கை முழுதும் நீடிக்கக்கூடிய நோய்களின் வாய்ப்புகளை குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நார்ச்சத்துள்ள உணவுகள் எடையை சரியான அளவில் பேணுவதற்கும் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுகளில் காணப்படும் நார்ச்சத்து மனித உடலுக்கு அதிகளவில் நன்மை தரக்கூடியது என உலக சுகாதார அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தினசரி உண்ணும் உணவுகளிலிருந்து 30 கிராம் நார்ச்சத்து கிடைக்கவேண்டுமெனவும் ஆனாலும் பெரும்பான்மையான மக்கள் 20 கிராமுக்கும் குறைவாகவே தற்போது உட்கொண்டு வருவதாகவும் இந்த ஆராய்ச்சியில் மதிப்பிடப்பட்டுள்ளது. ஓட்ஸ், முழுமேலும் படிக்க…


கியூப விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 7பேர் உயிரிழப்பு!

கியூபாவில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் உயிருக்கு ஆபத்தான நிலையத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாப்பயணிகள் பயணித்த பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டமையினாலேயே இன்று(வெள்ளிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான பேருந்தில் பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், நெதர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் ஹொலன்ட் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 22 சுற்றுலாப்பயணிகளும், 18 கியூப பிரஜைகளும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஐவர் உயிருக்கு ஆபத்தான நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்தநிலையில்  விபத்துக் குறித்து விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தின் மீது அக்கறை செலுத்துபவர்களுக்கே ஆதரவு: பழனிசாமி

தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்குமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மாற்று கட்சிகளை சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் அ.தி.மு.கவில் இணைந்துக்கொண்ட நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதன்போது, அந்நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் பழனிசாமி இதனை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “தமிழ் நாட்டு மக்கள் மீது அக்கறை செலுத்தும் ஒருவரே மத்தியில் ஆட்சியமைக்க வேண்டுமென்பதே எங்களின் நிலைப்பாடாகும். இதேவேளை உள்ளூராட்சி அமைச்சராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இருந்த காலத்தில், செய்யாத விடயங்களை தற்போது தேர்தலுக்காக அவர் செய்து வருகின்றார். மேலும் கிராமம் பற்றி அறியாத ஸ்டாலின், தற்போது கிராமம் கிராமமாக சென்று மக்களை தவறாக வழி நடத்தி வருகின்றார்” எனவும் பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.


மஞ்சள் மேலங்கி போராளிகளால் 60 வீத கண்காணிப்பு ரேடார் கருவிகள் உடைப்பு!

மஞ்சள் மேலங்கி போராளிகளால் இதுவரை 60 வீத வீதி கண்காணிப்பு ரேடார் கருவிகள் உடைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் Christophe Castaner வழங்கிய தகவல்களின் படி,  மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 3,200 வீதி கண்காணிப்பு ரேடார் கருவிகள் உடைக்கப்பட்டுள்ளன எனவும், இதற்கு முழுக்க முழுக்க மஞ்சள் மேலங்கி போராளிகளே காரணம் எனவும் தெரிவித்துள்ளார். சில முட்டாள்கள் ரேடார் கருவிகளை உடைப்பதையும், எரியூட்டுவதையும் சமூகவலைத்தளமூடாக பார்த்திருந்தேன். அவர்கள் பின்னொரு நாளில் வீதி விபத்துக்களில் சிக்கிவிடக்கூடாது என நான் ஆசைப்படுகிறேன்! என Christophe Castaner தெரிவித்தார். ‘உயிர்களில் என்ன அரசியல் வேண்டியுள்ளது?! இவர்களை முட்டாள் என்றும், சுயநினைவு இல்லவர்கள் எனவும் நான் அழைக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ஒன்பதாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம் – 80,000 படையினர் நாடு முழுவதும் குவிப்பு

நாளை சனிக்கிழமை பரிஸ் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் மஞ்சள் மேலங்கி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது ஒன்பதாவது வார ஆர்ப்பாட்டமாகும். பரிசின் சோம்ப்ஸ்-எலிசே பகுதியை குறிவைத்திருக்கும் போராளிகள், இம்முறை Cher மாவட்டத்தின் தலைநகரான Bourges பகுதியையும் குறிவைத்துள்ளனர். நாளை ஜனவரி 12 ஆம் திகதி இங்கு பெருமளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வன்முறைகளும் அதிகமாக இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசுக்குள் சோம்ப்ஸ்-எலிசே தவிர்த்து La Défense பகுதியையும் மஞ்சள் மேலங்கி போராளிகள் குறிவைத்துள்ளனர். இங்கு 3,200 பேர் வரை நாளை கூடலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பரிஸ் தவிர,Bordeaux, Marseille, Toulouse, Lyon, Strasbourg, Lille, Nantes, Rennes ஆகிய பெரு நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதால், பாதுகாப்பும் உச்சக்கட்டமாக பலப்படுத்தப்பட்டுள்ளது. பரிசுக்குள் 12,000 வரையான அதிகாரிகளும், நாடு முழுவதும் 80,000 அதிகாரிகளும் பாதுகாப்புமேலும் படிக்க…


அரசியல் கைதிகளுக்கு விரைவில் நற் செய்தி – நீதி அமைச்சர்!

நீண்ட காலமாக, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு, விரைவில் நற்செய்தி கிடைக்கும் என நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து, 11 மாதங்கள் சிறையிலிருந்த அர்ஜுன் அலோசியஸுக்குப் பிணை வழங்க முடியுமென்றால், 11 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் வாடும் அரசியல் கைதிகளுக்கு ஏன் பிணை வழங்க முடியாது​? என நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பில், அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று, நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்க்கு பதிலளித்த அவர், “அங்கு தொடர்ந்துரைத்த அமைச்சர், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், அரசாங்கம், நல்லதொரு தீர்மானத்தை எடுக்கவுள்ளளோம். மேலும் இது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் இந்தத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் விரைவில் அறிவிப்பதாகவும்” கூறினார்.


தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியடையும் – வைகோ

நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடையும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லையில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன், பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது. வாஜ்பாய் நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டியவர். ஆனால் மோடி மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறார். மேலும் மக்களிடையே இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை திணித்து வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டம் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து பாலைவனமாக்க திட்டமிட்டுள்ளார். தமிழக மக்களுக்கு நல்ல திட்டம் எதையும் கொண்டு வரவில்லை. அழிக்கக்கூடிய திட்டங்களை தான் கொண்டு வருகிறார். இதற்கு தமிழக அரசு உதவியாக உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து அதன்மூலம்மேலும் படிக்க…


30 முதல் 40 ஆண்டுகளில் வடக்கு மாகாணம் அரை பாலைவனமாக மாறும் – அமைச்சர்

காலநிலை மாற்றத்தின் காரணமாக வட மாகாணமானது கடுமையான சவால்களை எதிர்நோக்குகின்றது என நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அந்தவகையில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளில் வடக்கு மாகாணமானது அரை பாலைவனமாக மாறும் என அவர் மேலும் கூறியுள்ளார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலயும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணமானது மோசமான பாதிப்புற்ற பிரதேசமாகும், மழை பற்றாக்குறை, வெள்ளம் மற்றும் கடலால் சூழப்பட்ட வடக்கு மாகாணத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. அதற்கான நிலையான அபிவிருத்தியை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை, மாகாணத்தை அத்தகைய அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு ஒரு நடைமுறை தேவை” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.


விஜய்சேதுபதியின் திரைப்படத்தில் அறிமுகமாகிறார் லியோனியின் மகன்!

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள மாமனிதன் திரைப்படத்தின் மூலம் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் நடிகராக அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தர்மதுரை திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி மூன்றாவது முறையாக இணையும் இந்த திரைப்படத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளரின் மகனான லியோ சிவகுமார் இணையவுள்ளார். குறித்த தகவலை இயக்குனர் சீனு ராமசாமி அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கவுள்ளதாக தொிவிக்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கு இளையராஜா, யுவன் சங்கர்ராஜா, கார்த்திக் ராஜா என மூன்றுபேர் இசையமைக்கவுள்ளனமை குறிப்பிடத்தக்கது.


நியூசிலாந்து அணியுடனான ரி-20 போட்டியிலும் இலங்கை அணி தோல்வி!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒரேயொரு ரி-20 போட்டியில், நியூசிலாந்து அணி 35 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. ஒக்லேந் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் நியூசிலாந்து அணி சார்பில், அணியின் அதிகபட்ச ஓட்டமாக டக் பிரெஸ்வெல் 44 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் கசுன் ராஜித 3 விக்கெட்டுகளையும், லசித் மாலிங்க 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைதொடர்ந்து, 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, 16.5 ஓவர்களில் 144 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் நியூசிலாந்து அணி 35 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக திசர பெரேரா, 43 ஓட்டங்களைமேலும் படிக்க…


கண்ணீருடன் ஓய்வை அறிவித்தார் என்டி முர்ரே!

பிரித்தானியாவின் பிரபல டென்னிஸ் வீரரான என்டி முர்ரே, எதிர்வரும் அவுஸ்ரேலியா பகிரங்க டென்னிஸ் தொடருடன் ஓய்வுப் பெற போவதாக அறிவித்துள்ளார். சமீபகாலமாக இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வரும், 31 வயதான என்டி முர்ரே, தொடர்ந்தும் தன்னால் விளையாட முடியாது என உடல் ரீதியாக உணர்ந்ததால், இந்த முடிவை எடுத்தாக அவர் கூறியுள்ளார். தனது ஓய்வு குறித்து என்டி முர்ரே கூறிய கருத்துக்கள் இவை, ‘என்னால் தொடர்ந்து விளையாடுவதில் சிரமம் ஏற்படுகின்றது. காயமே தன்னுடைய ஓய்வுக்கு காரணம். விம்பிள்டன் போட்டி வரை விளையாடி ஓய்வு பெறுவதே தன் விருப்பம். ஆனால் அதுவரை விளையாடமுடியுமா எனத் தெரியவில்லை’ என கூறினார். அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில், காயத்திலிருந்து மீண்டு களம் கண்ட என்டி முர்ரே, 2ஆவது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். இந்தமேலும் படிக்க…


சிலியில் சாலை விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் பலி

சிலியில் சங்கிலி தொடர் போல நிகழ்ந்த சாலை விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் வால்டிவியா மாகாணத்தின் தலைநகர் வால்டிவியா மற்றும் மாபில் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 10 மாத பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் இருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் ஒரு லாரி மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி எதிர் திசைக்கு சென்ற லாரி அந்த வழியாக வந்த வேன் மீது மோதியது. சங்கிலி தொடர் போல நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிமேலும் படிக்க…


எம்ஜிஆரின் 102வது பிறந்தநாள்- தமிழகம் முழுவதும் மூன்று நாட்கள் அதிமுக பொதுக்கூட்டம்

எம்ஜிஆரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் 18-ம் தேதி முதல் 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்; கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரது அறிவிப்பிற்கிணங்க, டாக்டர் எம்.ஜி.ஆரின் 102-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 18.1.2019 – வெள்ளிக்கிழமை முதல் 20.1.2019 ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 102-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள், அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும்; கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன. பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்மேலும் படிக்க…


மஞ்சள் மேலங்கி போராட்டத்தால் பாரிய பிரச்சினை – பிரான்ஸ் பிரதமர்

ஜேர்மனிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரான்ஸ் பிரதமர் எடுவர்ட் பிலிப், மாணவர்களையும் வர்த்தக பிரமுகர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பொன் (Bonn) நகருக்கு சென்ற அவர் அங்குள்ள மாணவர்களையும், கொலொங் நகரில் சில வர்த்தகத்துறை முக்கியஸ்தர்களையும் பிரான்ஸ் பிரதமர் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்தார். அவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், மஞ்சள் மேலங்கி போராட்டங்கள் காரணமாக பாரியளவில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தேர்தலின் போது பிரான்ஸை நெருக்கடிக்கு உள்ளாக்கும் விதமாக இந்த போராட்டங்கள் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மஞ்சள் மேலங்கி போராட்டங்கள் இறுதியாக வன்முறையாக மாறிய நிலையில், வர்த்தக தொகுதிகளும் சுற்றுலாத் தளங்களும் கடந்த பல வாரங்களாக செயலிழந்து போயுள்ளன. அத்துடன் போராட்டங்கள் காரணமாக பிரான்ஸ் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக தளங்களில் சுமார் 60 மில்லியன் யூரோக்கள் வரை இழப்புமேலும் படிக்க…


பெண் பேருந்து சாரதியின் மனிதாபிமான செயல்!

அமெரிக்காவின் வின்கோன்ஸின்னில் உள்ள மிகப் பெரிய நகர் ஒன்றில் வீதியில் அநாதரவாக சென்ற குழந்தையொன்றை பெண் பேருந்து சாரதியொருவர் உடனடியாக ஓடிச் சென்று பாதுகாப்பாக மீட்டுள்ளார். மில்வாவ்கீ கவுண்டியில் பேருந்து சாரதியாக பணியாற்றும் பெண்ணொருவர் பாலம் ஒன்றை கடந்து சென்ற போது சிறு பெண் குழந்தையொன்று வீதியை கடக்க முற்படுவதை அவதானித்துள்ளார். ஐரினா இவிக் என்று குறித்த பெண் சாரதியின் துணிகரச் செயலை சமூக வலைத்தளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர். கடந்த மாதயிறுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான சி.சி.ரி.வி காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. குழந்தை மீட்கப்பட்ட பின்னர் பொலிஸ் மீட்பு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதுடன், உடனடியாக அங்கு சென்ற பொலிஸாரும், தீயணைப்பு அதிகாரிகளும் சாரதியிடமிருந்து குழந்தையை பெற்றுக் கொண்டனர். கடும் குளிரான காலநிலை நிலவியதன் காரணமாக அந்த குழந்தை மிக நீண்ட நேரம் வௌியில் குளிரால்மேலும் படிக்க…


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் – ட்ரம்புக்கு சவால்!

அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை சென்னையை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் பெற்றிருந்தார். இவர், ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா மாகாணத்தில் போட்டியிட்டு செனட் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். மூத்த சட்டத்தரணியும், எழுத்தாளருமான கமலா ஹாரிசுக்கு ஜனநாயக கட்சியினர் மற்றும் அமெரிக்க மக்களிடையே மிகுந்த செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து களம் இறங்குவார் என அமெரிக்க ஊடகங்களில் பரவலாக செய்திகள் வௌியாகி வருகின்றன. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் தீர்மானிப்பேன் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியொன்றில் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், அமெரிக்க மக்கள் தங்களுக்கான தலைவரை சரியாக தேர்வு செய்யும் திறனை கொண்டிருக்கிறார்கள். அவர்கள்மேலும் படிக்க…


உள்ளூராட்சித் தேர்தல் மே மாதம் நடைபெறும்!- கே.பாண்டியராஜன்

தமிழகத்தில் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பொதுக்கூட்டங்களுக்கு  மக்கள் சமூகமளிக்கடாட்டார்கள் என்ற காரணத்தினால், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்  மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளுக்கு சென்று கூட்டங்களை நடத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும் தேர்தல் நடைபெறாமல் காலதாமதம் ஏற்பட்டமைக்கு தி.மு.க.வே காரணமெனவும் அ.தி.மு.க தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றதெனவும் கே.பாண்டியராஜன் குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்காவை பாதுகாப்பதற்கு எல்லை சுவர் மிக முக்கியமானது – ட்ரம்ப் வலியுறுத்தல்!

அமெரிக்காவை பாதுகாப்பதற்கு மெக்ஸிகோ எல்லை சுவர் அமைக்கப்படுவது மிக முக்கியமானது என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டெக்ஸாஸ் மாநிலத்தின் ரியோ கிரேண்ட் பகுதிக்கு விஜயம் செய்திருந்த அவர் அமெரிக்க எல்லை தொடர்பாக ஆராய்ந்த பின்னர் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார். அமெரிக்க – மெக்சிகோ எல்லைச் சுவர் பிரச்சினையில் வாக்குவாதம் ஏற்படவே எதிர்க்கட்சி கூட்டத்தில் இருந்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று வெளியேறியிருந்தார்.  இந்த நிலையில், அமெரிக்காவை பாதுகாப்பதற்கு எல்லை சுவர் அமைப்பதன் அவசியதை அவர் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “நான் மெக்ஸிகோவில் இருந்து வரும் அகதிகள் தொடர்பில் மாத்திரம் பேசவில்லை, மாறாக உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் பேசுகின்றேன். மெக்சிக்கோ எல்லை ஒரு பலவீனமான இடமாக இருப்பதால், அவர்கள் இலகுவாக நுழைகின்றனர். எனவே சட்டங்கள் வலுவாக இருக்க வேண்டும், உரிய பாதுகாப்பு தேவை,மேலும் படிக்க…


இனவாதத்தைத் தூண்ட வேண்டாம் : மஹிந்த அணியிடம் அநுர கோரிக்கை!

புதிய அரசியலமைப்பு தொடர்பில் மஹிந்த அணியினர் போலிப்பிரச்சாரத்தினை முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பு நிர்ணயச்சபையில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘‘இனவாதத்தைத் தூண்டவேண்டாம், குரோதத்தை விதைக்க வேண்டாம் என மஹிந்த ராஜபக்ஷ சற்று நேரத்துக்கு முன்னர் உரையாற்றும்போது குறிப்பிட்டார். ஆனால், அவரும் அவரின் சகாக்களுமே விகாரை, விகாரையாகச் சென்று மக்களைக் குழப்பும் வகையில் இனவாத கோணத்தில் பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஏப்ரல் மாதத்துக்குள் நாடு பிளவுபடும், சமஷ்டி அரசியலமைப்பு உருவாகும், 09 பொலிஸ் நிலையங்கள் உருவாகும் என்றெல்லாம் அறிவிப்புகளை விடுத்து வருகின்றனர். 10 வருடங்கள் ஜனாதிபதி பதவியை வகித்த ஒருவர்கூட, புதிய அரசமைப்பு தொடர்பில் போலிக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். இது அவருக்கு வெட்கமில்லையா? கிராமமொன்றுக்கு சென்று பொய்யுரைத்தால்கூட பரவாயில்லை. ஆனால், விகாரை விகாரையாகச்மேலும் படிக்க…


யுத்த குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளின் தலையீடு அவசியம்: நோர்வே

யுத்த குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிபதிகளின் மத்தியஸ்தம் அவசியம் என நோர்வே தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஒஸ்லோ பிரதி மேயர் கம்சாயினி குணரத்னம் இதனை தெரிவித்துள்ளார். ஆதவன் செய்திபிரிவுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவித்த அவர், ”யுத்தம் நிறைவடைந்த பின்னர் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. அது முதலில் நடைபெற வேண்டும். அதுவும் உள்நாட்டு விசாரணையாளர்களின் மூலமின்றி, சர்வதேச விசாரணையாளர்களின் மூலம் இடம்பெற வேண்டும். முறையான விசாரணைகளின் பின்னரே பொறுப்புகூரல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்” எனத் தெரிவித்தார்.


அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு கூட்டமைப்பிற்கு பகிரங்க அழைப்பு!

அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். அரசியலமைப்பு நிர்ணயச்சபையில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவேண்டும். அமைச்சுப் பதவிகளை பெற்று வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைவதால், வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆளுங்கட்சியில் அங்கம் வகித்ததால் மலையகத் தமிழ் மக்களின் கலாசாரத்துக்கு அச்சுறுத்தல் – பாதிப்பு ஏற்பட்டதா? இல்லை. அதேபோல் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாக அங்கம் வகிப்பதால் முஸ்லிம் மக்களின் கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களில் எதாவது மாற்றம்மேலும் படிக்க…


அரசியலமைப்பை நிராகரிப்பது பாரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும்: மனோ

அரசியலமைப்பு நிராகரிக்கப்படின் அது புலம்பெயர் தமிழர்களுக்கு தவறானதொரு செய்தியை கொண்டு செல்வதுடன், அதனால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக அமையும் என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய அரசியலமைப்பு சபையில் புதிய அரசியலமைப்பு குறித்த யோசனையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசியலமைப்பு உருவாக்கத்தில் தற்போது சர்வ கட்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கோரும் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான விடயங்களும் நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனை நிராகரித்தால் புலிகளை மீள உருவாக்குங்கள். இங்கே பிரச்சினை உண்டு. மீண்டும் யுத்தத்தை ஆரம்பியுங்கள் என்ற செய்தி புலம்பெயர் தமிழர்களுக்கு செல்லும். அதுவா உங்களுக்கு தேவை? இனவாதம் மதவாதம் பிரிவினைவாதம் போன்ற காரணங்களால் எமது நாடு முன்னேற்றமின்றி காணப்படுகிறது.மேலும் படிக்க…


பாடுவோர் பாடலாம் – 04/01/2019


மார்பக புற்றுநோய் வருவதற்கு பரம்பரையும் காரணமா?

ஒருவரது குடும்ப பரம்பரையில் யாரேனும் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் இருந்திருக்குமானால், அவருக்கும் மார்பக புற்றுநோய் உருவாவதற்குரிய வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். மார்பக புற்றுநோய் உடைய ஒரு குடும்ப வரலாறு இருக்கும் பெண்கள், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அதிக இடர் வாய்ப்பு பிரிவில் இருக்கின்றனர் என்றாலும், மார்பக புற்றுநோய் உள்ள அநேக பெண்களுக்கு அவர்களது குடும்பத்தில் புற்றுநோய் இருந்த வரலாறு இல்லை. புள்ளிவிவர ரீதியாக மார்பக புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்ட நபர்களில் ஏறக்குறைய 5 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே குடும்பத்தில் புற்றுநோய் இருந்த வரலாறு உள்ளது. மார்பக புற்றுநோய் இருந்த ஒரு முதல் டிகிரி உறவினர், இரண்டாம் டிகிரி உறவினர் அல்லது குடும்பத்தின் ஒரே தரப்பில் பல தலைமுறைகள் உங்களுக்கு இருப்பார்களானால், உங்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான இடர்வாய்ப்பு அதிகமாக இருக்கக்கூடும். * மார்பகமேலும் படிக்க…


பாடுவோர் பாடலாம் – 30/12/2018


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !