Friday, December 28th, 2018

 

ரீ.ஆர்.ரீ வானொலியின் சமூகப் பணிக் குழுவினரின் பங்களிப்புடன் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்

தென்பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனரத்தங்களில் எடுத்த துரித நடவடிக்கையை வடக்கு மாகாணத்திலும் எடுக்கப்பட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்!! முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தங்களது கிணறுகளில் மழைவெள்ளம் புகுந்துள்ளதால் அந்த நீரை பயன்படுத்த முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர். அண்மையில் பெய்த பெருமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் தங்களது கிணறுகளில் மழைநீருடன் சேறும் சேர்ந்துள்ளதால், அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும், இதனால் தங்களது நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். அண்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தங்கியிருந்த இடைத்தங்கல் முகாம்களை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் 25.12.2018 செவ்வாயன்று நேரில் சென்று பார்வையிட்டபோதே மக்கள் மேற்கண்ட முதன்மைக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளமேலும் படிக்க…


வன்னியில் நிவாரண பணியில் தமிழ் மக்கள் கூட்டணி

வன்னியில் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தமிழ் மக்கள் கூட்டணி நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளது. இவர்களுடன் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் கிளிநொச்சி மாவட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணியினரும் இணைந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர்களால் உலர் உணவு பொதிகள் , உடைகள் , நுளம்பு வலைகள் மற்றும் சுகாதார பொருட்கள் உள்ளிட்ட பெருமளவான பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.


மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து – ஐந்து பேர் உயிரிழப்பு

மும்பையின் மிகப்பெரும் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான செம்பூரில் உயர் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 35 மாடிக் கட்டடத்தின் 11ஆவது மாடியில் நேற்று மாலை இந்ததீவிபத்து ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயில் சிக்கிய ஐந்து வயோதிபர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் அவர்கள வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் பாதிப்புக்குள்ளான ஒருவரும் தீயணைப்புபடை வீரர் ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


ஜனாதிபதி மக்ரோனால் பதவி நீக்கப்பட்டவர் ஆலோசகர் பதவியில்!

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனால் பதவிநீக்கப்பட்ட அவரது முன்னாள் பாதுகாப்பு அதிகாரி அலெக்ஸாண்ட்ரே பெனல்லா, ஆலோசகர் பதவியில் நீடிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதுதொடர்பாக ஊடகங்கள் பரவலாக செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, பெனல்லாவின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக அரசாங்கம் தகவல் கோரியுள்ளது. அத்தோடு, குறித்த பயணங்களில் அரசாங்கத்தை தொடர்புபடுத்த வேண்டாமென வலியுறுத்தியுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும், கடந்த வாரம் ஜனாதிபதி மக்ரோன் சாட் நாட்டிற்கு விஜயம் செய்வதற்கு முன்பாக பெனல்லாவும் அங்கு சென்றிருந்தார். இந்நிலையில், பெனல்லாவுக்கும் மக்ரோனுக்கும் இடையில் இன்னும் தொடர்புள்ளதாக பல விமர்சனங்களும் வெளிவந்தவண்ணமுள்ளன. இதனையடுத்து, பெனல்லாவின் ஆலோசகர் பதவி தொடர்பான சகல விபரங்களையும் முன்வைக்குமாறு பிரான்ஸ் அமைச்சரவையின் தலைவர் பட்ரிக் ஸ்ரோதா வலியுறுத்தியுள்ளார். அதே சந்தர்ப்பத்தில், முன்னாள் பொறுப்புக்கள் தொடர்பான விடயங்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் பெனல்லாவை கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் படிக்க…


இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தில் 5.8 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பல விநாடிகள் நீடித்தது என்று அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. எனினும் இந்த நிலநடுக்கத்துக்கு சுனாமியை தோற்றுவிக்கும் சக்தி இல்லை. எனவே, மக்கள் யாரும் அச்சங்கொள்ள வேண்டாம் என்று இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சுனாமி ஏற்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததோடு 700 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


தெஹிவளை பகுதியில் உள்ளவர்களுக்கான பதிவு உடன் நிறுத்தப்படும் – அமைச்சர் மனோ

தெஹிவளை பொலிஸ் வலயத்தில் குடியிருப்பாளர் பதிவை உடன் நிறுத்த நிலைய பொறுப்பதிகாரி பிரதீப் கிரிஷாந்தவுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு இனிமேல் அங்கு பதிவு நடவடிக்கைகள் நடைபெறாது. சிங்களத்திலோ, தமிழிலோ எந்த மொழியில் படிவங்கள் வந்தாலும் படிவங்களை எந்த மொழியிலும் நிரப்பி கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இதை மீறி பொலிஸ் அதிகாரிகள் உங்கள் இருப்பிடங்களுக்கு வருவார்களாயின், 077312770 என்ற இலக்கத்துக்கு குறும்செய்தி அனுப்பி, விவரத்துடன் தன்னிடம் புகார் செய்யுமாறும் அமைச்சர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.


311 குடியேற்றவாசிகள் தெற்கு ஸ்பெயினில் தரை இறங்கியுள்ளனர்!

ஸ்பெயினின் தொண்டு நிறுவனமான ‘ப்ரோஎக்டிவா’ தனது கப்பல் மூலமாக மத்திய தரைக்கடலில் மீட்கப்பட்ட 311 குடியேற்றவாசிகளை தெற்கு ஸ்பெயினில் உள்ள அல்ஜீசிரஸ் துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் லிபியாவிற்கு அப்பால் மத்தியதரைக் கடலில் மீட்கப்பட்ட குறித்த குடியேற்றவாசிகள் இன்று (வௌ்ளிக்கிழமை) ஸ்பெயினுக்கு வந்துள்ளனர். குறித்த தொண்டு நிறுவன கப்பல் மோல்டா மற்றும் இத்தாலி உட்பட சில ஐரோப்பிய நாடுகளுக்கும், வேறு சில நாடுகளுக்கும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதும், கப்பலில் பிறந்த குழந்தையொன்றும் அதன் தாயும் கடந்த வாரம் வான் வழியாக மோல்டாவுக்கு அழைத்துவரப்பட்டனர். தொண்டு கப்பலில் அழைத்து வரப்பட்டவர்கள் பலர் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வௌிநாட்டு குடியேற்றவாசிகளை கப்பலில் இருந்து இறக்கும் பணியில் செஞ்சிலுவைச் சங்கத்தினரும் ஸ்பெயின் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை, குடியேற்றவாசிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளைமேலும் படிக்க…


வழிபாட்டு தலங்களை சேதமாக்கினால் கடும் தண்டனை: கண்டியில் பிரதமர் தெரிவிப்பு

மத வழிபாட்டு தலங்களை இலக்குவைத்து தாக்குதல் மேற்கொள்பவர்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்ட பிரதமர், அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எமது இந்த அரசாங்கத்தின் ஊடாக, விசேடமாக கிராமத்துக்கு சலுகைகளை வழங்கும் வேளைத் திட்டத்தையே மேற்கொள்ளவுள்ளோம். எதிர்க்கட்சிகளுடனுடம் தற்போது இதுதொடர்பில் பேச்சு நடத்தியுள்ளோம். மேலும், எந்தவொரு அரசமைப்புத் திருத்தச்சட்டத்தைக் கொண்டு வந்தாலும், அரசமைப்பின் 9 ஆவது உறுப்புரிமைக்கு இணங்க, பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பதை மட்டும் மாற்றப்போவதில்லை என்பதையும் இங்கு உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். இதற்கு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன. அண்மையில் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பணித்துள்ளேன். இதேவேளை, இந்து ஆலயமொன்றின் மீதும்மேலும் படிக்க…


கிளிநொச்சி மக்களுக்கு வருட இறுதிக்குள் இழப்பீடு!- பிரதமர் உறுதி

கிளிநொச்சியில் வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 31ஆம் திகதிக்கு முன்னர் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். வெள்ள பாதிப்புகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக கிளிநொச்சிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்ட பிரதமர், வடக்கு அதிகாரிகளுடன் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இதனை குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து பல வாக்குறுதிகளை வழங்கிய பிரதமர், வெள்ள அனர்த்தத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை தொடர்ந்து எதிர்வரும் மூன்று தினங்களுக்கு தங்கவைத்து உணவு வழங்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொழும்பு மாநகர சபையால் நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இரண்டு வாரங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைமேலும் படிக்க…


மைத்திரி, மீண்டும் ஜனாதிபதியாக கனவிலும் நினைக்கவே கூடாது!

மஹிந்த ராஜபக்ஸவுடன் சேர்ந்து அரசியல் சூழ்ச்சி ஊடாக நாட்டைச் சீரழித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீண்டும் ஜனாதிபதியாகுவதற்கு கனவிலும் நினைக்கக்கூடாது என்று ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளித் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதியாக நாட்டு மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள் என்றும் மீண்டும் பதவிக்கு ஆசைப்பட்டமையினாலேயே ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு இறுதியில் தோல்வியே கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணி விரைவில் ஜனநாயக தேசிய முன்னணியாக உருவாக்கப்படும் என்றும் ஜனநாயக தேசிய முன்னணியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குபவரே வெற்றியடைவார் என்றும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.


உக்ரைனில் ராணுவச் சட்டம் முடிவுக்கு வந்தது- அதிபர் அறிவிப்பு

ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் நாட்டில் கடந்த ஒரு மாதகாலமாக நடைமுறையில் இருந்த ராணுவச் சட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அதிபர் அறிவித்துள்ளார். உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கிரிமியா அருகே கெர்ச் ஜலசந்தியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா கடந்த மாதம் கைப்பற்றியது. தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி இந்த நடவடிக்கையை ரஷ்ய ராணுவம் எடுத்தது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் பகிர்ந்து கொள்ளும் கெர்ச் ஜலசந்தியானது, அஸோவ் கடலுக்கு செல்லும் ஒரே பாதை ஆகும். அந்த பகுதியில் ரஷ்யா தனது டேங்கர் கப்பலை நிறுத்தி உள்ளது. அத்துடன் ரஷ்ய போர் விமானங்களும் அந்த பகுதியில் பறக்கின்றன. இதனால் எல்லையில் தொடர்ந்துமேலும் படிக்க…


தீவிர நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை பூர்த்தி செய்த ரஷ்ய அதிபர்

ரஷ்யாவில் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனின் ஆசையை அதிபர் புதின் பூர்த்தி செய்துள்ளார். ரஷ்யாவின் தெற்கே ஸ்டாவ்ரோபோல் பகுதியில் வசித்து வரும் 10 வயது சிறுவனுக்கு தீவிர நோய் இருந்தது.  இதனால் அவன் விரும்பிய சம்போ என்ற விளையாட்டில் தொடர்ந்து பயிற்சி பெற முடியாமல் அதில் இருந்து விலக வேண்டியிருந்தது. அவனுக்கு ரஷ்ய அதிபர் புதினுடன் கைகுலுக்க வேண்டும் என்ற நீண்டநாள் ஆவல் இருந்தது.  இந்த ஆசை நிறைவேறியுள்ளது.  சிறுவனை கிரெம்ளின் மாளிகைக்கு புதின் வரவழைத்துள்ளார். அங்கு தனது தாயுடன் சென்ற சிறுவனை புதின் சந்தித்து சிறிது நேரம் பேசினார். அதன்பின் அவனிடம் கைகுலுக்கி அவனது ஆசையை பூர்த்தி செய்து வைத்துள்ளார். அவனது போட்டிக்கான ஆடையிலும் புதின் கையெழுத்து இட்டு உள்ளார். நோயை விரட்டிய பின் முதல் போட்டியில் கலந்து கொள்ளும்பொழுது இந்த ஆடையைமேலும் படிக்க…


கிளி, முல்லை வெள்ள அனர்த்தத்தால் 3,000 மில்லியன் இழப்பு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை புரட்டிப் போட்ட வெள்ள அனர்த்தத்தில் சுமார் 3,000 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில், மாவட்ட செயலாளர்களுடனான மாதாந்த கலந்துரையாடலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய சந்திப்பில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள், அவற்றை சீரசெய்வது தொடர்பில் ஆராயப்பட்டது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர், சுகாதார அமைச்சர், மீள்குடியேற்ற அமைச்சர், நீர்வழங்கல் வடிவாலமைப்பு அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதன்போது, இரண்டு மாவட்டங்களிலும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பின் உத்தேச மதிப்பாக சுமார் 3,000 மில்லியன் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. இந்த பாதிப்புக்களை சீர்செய்ய தேவையான நிதியை, வரவு செலவு திட்டத்தின் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் என்றும், உடனடித் தேவைகள், சமைத்த உணவுகள் என்பவற்றிற்கான நிவாரண நிதியை அவசர தேவையின் அடிப்படையில் விடுவிக்கலாமென அமைச்சு செயலாளர் குறிப்பிட்டார்.மேலும் படிக்க…


முத்தலாக் சட்டமூலம் நிறைவேற்றப் பட்டதால் பெண்கள் மகிழ்ச்சி

முத்தலாக் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமைக்கு, முஸ்லிம் பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மக்களவையில் நீண்ட நேர விவாதத்திற்குப் பின்னர் முத்தலாக் சட்டமூலம் நேற்று (வியாழக்கிழமை) நிறைவேற்றப்பட்டது. கடந்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் சட்டமூலம் மீதான விவாதம் நேற்று மக்களவையில் நடைபெற்றது. இதன்போது, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், முத்தலாக் முறையை இரத்துச்செய்ய தயக்கம் காட்டுகின்றமை ஏன் என கேள்வி ஏழுப்பினார். இந்த முத்தலாக் முறையினை 20 இஸ்லாமிய நாடுகளே தடை செய்துள்ளன. ஆனால் மதச்சார்பற்ற இந்தியாவில் அதனைத் தடைசெய்ய ஏன் இவ்வளவு எதிர்ப்பு எனவும் இவ்விடயத்தை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டாமெனவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் பல தரப்பட்டவர்களின் விவாதங்கள் முடிந்தவுடன் சபாநாயகரினால் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 245 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் வழங்கப்பட்டன. ஆனால் சட்டமூலத்திற்குமேலும் படிக்க…


மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 184.07 ரூபாவாக பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மையில் அதிகரித்திருந்த நிலையில் இன்று வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிரதமர் இன்று கிளிநொச்சிக்கு விஜயம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (28) கிளிநொச்சிக்கு விஜயம் செய்கிறார். சீரற்ற காலநிலையின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேவைகளை நேரில் கண்டறிவது விஜயத்தின் நோக்கமாகும். இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பிரதமர் ஆராயவுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கும் சென்று பிரதமர் நிலைமையை நேரில் கண்டறியவுள்ளார். அஸ்கிரிய மகாநாயக்க தேரரை இன்று காலை சந்தித்து விசேட ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளும் பிரதமர் அதனையடுத்து தலதா மாளிகையில் இடம்பெறும் விசேட சமய வழிபாடுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார். காலை 10.30 இற்கு மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெறுவதுடன் அங்கு இடம்பெறும் அன்னதான நிகழ்விலும் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்துக்குப் பிற்பகல் 1.00 மணிக்கு விஜயம் செய்யும் பிரதமர், அங்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம் பெறும் விசேட மாநாட்டிலும் பங்கேற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்மேலும் படிக்க…


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட வடக்கிற்கு செல்லவுள்ளார் ராஜித

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள மக்களைப் பார்வையிடுவதற்காக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நாளை (சனிக்கிழமை) அவர் விஜயம் செய்யவுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள வடக்கு மக்களுக்கான சுகாதார சேவைகள் செவ்வனே இடம்பெற்று வருவதை உறுதிப் படத்துவதற்காகவும், முகாம்களில் வாழ்வோரின் சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து ஆராயவும், சுகாதார போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன நாளை  விஜயம் செய்யவுள்ளார். இதன்போது  வட மாகாண சுகாதார அமைச்சு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தவும் அவர் திட்டமிடப்பட்டுள்ளார். மேலும், முகாம்களில் வசிக்கும் மக்களின் சுகாதாரத் தேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் அமைச்சர் கவனம் செலுத்தவுள்ளார். இதன் போது சுகாதார போசணைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு மற்றும் இலங்கை மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் ஆகியவற்றினால்மேலும் படிக்க…


ஆர்ப்பாட்டங்கள் எந்நேரத்திலும் வன்முறையாக மாறலாம்: இலங்கை குறித்து கனடா எச்சரிக்கை

அமைதியான ஆர்ப்பாட்டங்கள் எந்நேரத்திலும் வன்முறையாக மாறலாம். எனவே, இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கனடாவின் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் நெருக்கடிகள் தீர்ந்துள்ள நிலையில், இலங்கை குறித்த தமது பிரஜைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையை கனடா வெளியிட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் அரசியல் ஸ்திரமின்மை என்ற பதம் புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கையில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறலாம் என்றும், அதனால் பொதுப் போக்குவரத்துகள் பாதிக்கப்படலாம் என்றும் புதிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் பாரிய கூட்டங்கள் இடம்பெறும் இடங்களுக்கு பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் தமது பிரஜைகளுக்கு கனடா எச்சரித்துள்ளது.


தகவலறியும் சட்டத்தினூடாக தகவல் வழங்க வவுனியா நகரசபை மறுப்பு!

வவுனியா நகரசபை மற்றும் கலாசார பேரவை ஆகியன இணைந்து நடத்திய ‘எழு நீ’ விருது வழங்கும் நிகழ்விற்கான செலவீனங்களை வெளியிடுமாறு தகவல் அறியும் சட்டத்தினூடாக கோரப்பட்டுள்ளது. ஆனால், கோரப்பட்ட தகவல்கள் பூரணமானதாகவோ, திருப்திகரமானதாகவோ இல்லாமையால் தகவல்களை வெளியிட முடியாதுள்ளதாக நகரசபையினால் பதிலளிக்கப்பட்டுள்ளது. எழு நீ நிகழ்வின் செலவீனங்கள் மாத்திரமின்றி, சபை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் செலவீனங்கள் என்பனவும் தகவல் அறியும் சட்டத்தினூடாக வவுனியா நகரசபையிடம் கோரப்பட்டது. ‘எழு நீ’ விருது வழங்கும் நிகழ்வில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து நகரசபை உறுப்பினர்கள் பலர் அதிருப்தி வெளியிட்டுள்ள நிலையிலேயே இந்த விபரங்கள் கோரப்பட்டுள்ளன. ‘எழு நீ’ நிகழ்விற்கு வர்த்தகர்களிடமிருந்து பெரும் தொகைப்பணம் சேகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்தகவல்களை வெளியிடுவதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கவேண்டி ஏற்படுவதுடன் தலைவரின் பதவிக்கும் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்திலேயே விபரங்களை வெளியிடமேலும் படிக்க…


அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களுக்கு படையினர் நிவாரணம்

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு படையினரால் நிவாரண பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் தங்கியுள்ள 200 குடும்பங்களிற்கும், கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தங்கியுள்ள 175 குடும்பங்களிற்கும், திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தங்கியுள்ள 201 குடும்பங்களிற்கும் இவ்வாறு படையினரால் உலருணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் வேறு பல பகுதிகளிலும்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு படையினரால் பொதிகள் வழங்கி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் அடைமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரையில் 24184 குடும்பங்களைச் சேர்ந்த  74730 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களில்  1211 குடும்பங்களைச் சேரந்த 3938 பேர் 12 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான சமைத்த உணவுகளும் நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !