Monday, April 30th, 2018

 

பசுப்பாதுகாவலர்களால் தாக்கப்படும் தலித்கள் 450 பேர் புத்த மதத்திற்கு தழுவினர்!

குஜராத்தில் பசு பாதுகாவலர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான குடும்பத்தினர் உள்பட 450 தலித்துகள் புத்த மதத்தை தழுவியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் உனா பகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு இறந்த பசுவின் தோலை உரித்ததாக தலித் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது பசு பாதுகாவலர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த 4 பேரும் இந்து மதத்திலிருந்து வெளியேறி புத்த மதத்தை தழுவ முடிவு செய்தனர். நேற்று நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், இவர்களுடன் சேர்த்து ஆதிக்க சாதியினரால் தீண்டாமை கொடுமைக்கு ஆளான 450 தலித்துகள் புத்த மதத்திற்கு மாறினர். தலித்துகளை குஜராத் மாநில பாஜக அரசு இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக மதம் மாறியவர்கள் தெரிவித்துள்ளனர்.


பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரணை செய்ய 2 வாரம் அவகாசம் வழங்கினார் ஆளுநர்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரித்து வரும் ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்திற்கு மேலும் 2 வாரம் அவகாசம் வழங்கி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்தார். இவர் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைகழக துணை வேந்தர் செல்லத்துரை, பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார். விசாரணை ஆணையத்தின் காலக்கெடு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் மேலும் கால அவகாசம் வேண்டும் என்று அதிகாரி சந்தானம் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று மேலும் 2 வாரம் அவகாசம் வழங்கி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து முருகன், கருப்பசாமி ஆகியோரிடம் சந்தானம் விரைவில் விசாரணை நடத்துகிறார்.


சென் நதியில் காணாமல் போன பெண் காவல்துறை அதிகாரி 4 மாதங்களின் பின்னர் சடலம் மீட்பு!

கடந்த ஜனவரி மாதம் சென் நதியில் உட்ல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது காணாமல் போன பெண் காவல்துறை அதிகாரியின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 27 வயதுடைய குறித்த பெண் காவல்துறை அதிகாரி, கடந்த ஜனவரி 5 ஆம் திகதி, தன் நண்பர்களுடன் நீச்சல் பயிற்சியில் Notre-Dame Cathedral பகுதியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அதன் போது அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, தொடர்ச்சியாக தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டார். அந்த அதிர்ச்சி நாளடைவில் அமைதியாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 29 ஆம் திகதி, pont des Arts பகுதியில் இருந்து குறித்த அதிகாரியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதிகாரி காணாமல் போன இடத்தில் இருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அதிகரியின் குடும்பத்தினருக்கு, பிரதமர் எத்துவா பிலிப் தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார்.


பரவியது பெண்ணை நிர்வாணமாக்கும் வீடியோ: நால்வர் கைது

பெண்ணை நிர்வாணமாக்கும் வீடியோ வைரலாகப் பரவியது தொடர்பாக பிகாரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பிகார் மாநிலம் ஜஹானாபாதில் ஒரு பெண்ணின் ஆடையை பலாத்காரமாக அவிழ்க்கும் காணொளிக் காட்சி வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நான்கு பேரை கைது செய்தனர். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பட்னா மண்டல காவல்துறை ஐ.ஜி நையர் ஹன்னைன் கான் இந்தத் தகவலை தெரிவித்தார். இந்த காணொளிக் காட்சி 28 ஏப்ரல் இரவு காவல்துறைக்கு கிடைத்ததாக கூறிய அவர், அதன்பிறகு உடனே துரித நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறினார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மைனர். சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். குற்றவாளிகள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், பாதிக்கப்பட்ட பெண் மைனர் என்றும், ஆனால் அந்த பெண்மேலும் படிக்க…


ஆப்கானிஸ்தான் பிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை!

பிசி ஆஃப்கன் சேவையின் செய்தியாளர் அகமது ஷா, ஆப்கானிஸ்தானின் ஹோஸ்ட் மாகாணத்தில் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று திங்கள்கிழமை காலை ஆஃப்கன் தலைநகர் காபூலில் நடந்த இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 8 பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்ட நிலையில், வேறொரு சம்பவத்தில் பிபிசி செய்தியாளர் கொல்லப்பட்டுள்ளார். பிபிசி இரங்கல் இது தொடர்பாக பிபிசி உலக சேவையின் இயக்குநர் ஜேமி அங்கஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,” ஆப்கானிஸ்தானில் இன்று காலை நடந்த தாக்குதலை தொடர்ந்து, பிபிசி ஆஃப்கன் செய்தியாளர் அகமது ஷா இறந்ததை பிபிசி மிகுந்த வருத்தத்துடன் உறுதி செய்கிறது. 29 வயதான அகமது ஷா, பிபிசி ஆஃப்கன் சேவையில் ஒரு வருடத்திற்கு மேலாகப் பணியாற்றினார். ஏற்கனவே தன்னை மிகவும் திறமையான பத்திரிகையாளராக நிறுவியிருந்த அவருக்கு, ஆஃப்கான் சேவையில் மிகுந்த மரியாதை இருந்தது. இது ஒரு பேரிழப்பு.மேலும் படிக்க…


ஆப்கானிஸ்தான் கந்தகார் பகுதியில் கார் குண்டுவெடிப்பு – 11 மாணவர்கள் பலி!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த கந்தகார் பகுதியில் இன்று நடைபெற்ற கார் குண்டு தாக்குதலில் மதரசாவைச் சேர்ந்த 11 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த கந்தகார் மாகாணத்தின் தமான் மாவட்டத்தில் இன்று திடீரென கார் வெடிகுண்டு வெடித்து சிதறியது. ரோமானிய படையினர் தங்கிருந்த முகாமை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலில் அருகிலிருந்த மதராசா பள்ளி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதில், 11 மதரசா மாணவர்கள் பலியாகினர். மேலும், 5 ரோமானிய வீரர்கள் உட்பட 16 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காபூல் நகரில் உளவுத்துறை நிறுவனம் அருகே நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 29 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக நடத்தப்படும் வெடிகுண்டு தாக்குதல் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தென்கொரியா – வடகொரியா எல்லையில் கிம் ஜாங் அன் – டிரம்ப் சந்திப்பு?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரியா- தென்கொரியா நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதியில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்-னை சந்தித்துப் பேச விருப்பம் தெரிவித்துள்ளார். பரம விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா – வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. ஆனால், இந்த சந்திப்பு நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில், வடகொரியா- தென்கொரியா அதிபர்கள் சந்தித்துப் பேசிய பன்முன்ஜோம் எல்லைப்பகுதியில் உள்ள ‘பீஸ் ஹவுஸ்’ என்ற கட்டிடத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்-னை சந்தித்துப் பேச டிரம்ப் தற்போது விருப்பம் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க…


சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிதம்பரம் மனைவி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மே 7-ம் தேதி ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம். மூத்த வக்கீலான இவர், மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கில், அந்த நிறுவனத்தின் சார்பில் ஆஜரானார். இதற்காக ரூ.1 கோடி வக்கீல் கட்டணமாக பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சாரதா நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நேரில் ஆஜராகும்படி நளினி சிதம்பரத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சம்மன் அனுப்பினார்கள். இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி நளினி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த தனிமேலும் படிக்க…


அறிவுடையோர் பிராமணர்கள் என்பதால் அம்பேத்கரும், மோடியும் பிராமணர்களே – குஜராத் சபாநாயகர்

நாரதர் அந்த காலத்து கூகுள் என குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி பேசியிருந்த நிலையில், அம்பேத்கரும், பிரதமர் மோடியும் பிராமணர்களே என குஜராத் சட்டசபை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி கூறியுள்ளார். பாஜக தலைவர்களுக்கு இது போதாத காலமா என்னவென்று தெரியவில்லை. சர்ச்சைக்கு மேல் சர்ச்சையாக பேசி ஊடகங்களிடமும், சமூக வலைதளங்களிலும் விமர்சனத்தை வாங்கி கட்டிக்கொள்கின்றனர். இதனால், மீடியாவுக்கு தீனி போடும் விதமாக பா.ஜ.க.வினர் கருத்து கூற வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். ஆனால், மோடியின் அறிவுத்தலுக்கு பிறகே அக்கட்சி தலைவர்கள் அதிக சர்ச்சையுடன் பேசி வருகின்றனர். மகாபாரதத்தில் இணையதளம், உலக அழகி குறித்து விமர்சனம், சிவில் எஞ்சினியர்கள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதலாம் என திரிபுரா முதல்வர் ஒரு பக்கம் தொடர்ச்சியாக பேசி அதிர வைத்து வருகிறார். குஜராத் முதல்வராக உள்ள விஜய் ரூபாணி சமீபத்தில்மேலும் படிக்க…


அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண், தாத்தா-பாட்டியுடன் தீயில் கருகி பலி!

அமெரிக்காவில் வீட்டினுள் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளி பெண் மாகோ மற்றும் அவருடைய தாத்தா, பாட்டி ஆகிய 3 பேரும் தீயில் உடல் கருகி இறந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் ஹாலீன் மாகோ. இவர் தனது தந்தை வழி தாத்தா கவுர் காயிந்த் (வயது 82), பாட்டி பியாரா காயிந்த் மற்றும் தன்னுடைய 8 வயது மகள், 6 வயது மகனுடன் வசித்து வந்தார். ஹாலீன் மாகோவின் உறவுக்கார ஆண் ஒருவருக்கு அடுத்த வாரம் திருமணம் நடக்க உள்ளது. இதை கொண்டாடும் விதமாக ஹாலீன் மாகோவின் உறவினர்கள் கடந்த சனிக்கிழமை இரவு அவருடைய வீட்டில் கூடினர். அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக வீட்டினுள் திடீரென தீப்பிடித்தது. தீப்பிடித்ததை அறிந்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்குள் தீ மளமளவென பரவி ஒட்டுமொத்தமேலும் படிக்க…


முள்ளிவாய்க்கால் நினைவாலயம் கட்டும் பணிகளை தடை செய்தமை கண்டிக்கத்தக்கது

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் கட்டும் பணிகளை அரசாங்கம் தலையிட்டு தடை செய்தமை கண்டிக்கத்தக்க செயலென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சமூகங்கள், முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அனுபவித்த கட்டமைப்புகளாக உள்ளன. அவற்றில் கல்வி கற்கும் சமூகத்தினர் போராலும் இனப் படுகொலையாலும் நேரடியாக பாதிக்கப்பட்டு அதன் வலியை சுமந்தவர்களாக உள்ளனர். அந்த வகையில், அவர்களின் நினைவேந்தலைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தச் செயற்பாடு ஆத்திரமூட்டுவதாக அமைந்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறான உண்மைகள் பல்கலைக்கழகங்களிலேயே பதிவு செய்யப்படவேண்டியுள்ளவென்பதனால் மாணவர்கள் தமது செயற்பாட்டை தொடரவேண்டும் எனவும் பல்கலைக்கழக மாணவர்களின் தலைமையில் நடைபெறும் இத்தகைய செயற்பாடுகளுக்கு தாம் முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.


விண்வெளி படையை உருவாக்குவதன் மூலம் பூமியில் சூப்பர் பவர் நாடாக அமெரிக்கா இருக்கும்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பாதுகாப்பிற்காக விண்வெளி படையை உருவாக்க திட்டமிட்டு உள்ளார். விண்வெளி படையை உருவாக்குவதன் மூலம் பூமியில் சூப்பர் பவர் நாடாக இருக்கும் அமெரிக்கா விண்வெளியிலும் சூப்பர் பவர் நாடாக மாறும் என்று கூறியுள்ளார். அவர் மனதில் பெரிய திட்டங்களை வைத்துக் கொண்டு இதை உருவாக்கியதாக கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் அமெரிக்க விமான படையில் தற்போது 5 படைகள் இருக்கிறது. தரைப் படை, விமானப் படை, 2 கடற்படை, ஒரு கடலோரக் காவல்படை ஆகியவை இருக்கிறது. இந்த படைகள் மட்டும் இல்லாமல் இதனுடன் ஆறாவதாக ஸ்பேஸ் போர்ஸ் எனப்படும் விண்வெளி படையை உருவாக்க இருப்பதாக கூறியுள்ளார். இதற்கான திட்டம் எல்லாம் தயார் அனுமதிக்கு மட்டும் காத்து இருப்பதாக கூறியுள்ளார். இப்போது உலக நாடுகள், தனியார் நிறுவனங்கள் விண்வெளி துறையில் சிறந்து விளங்குகிறது.மேலும் படிக்க…


எஸ்.வி.சேகரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் ..!

பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறான கருத்து பதிவிட்ட எஸ்,வி.சேகரை கைது செய்யும் நடவடிக்கையில் சென்னை போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். நிர்மலா தேவி விவகாரத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது, ஆளுநர் பன்வாரிலால் பெண் பத்திரிகையாளர் ஒருவரை கன்னத்தில் தட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து ஆளுநருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும், பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு பரப்பும் வகையில் எஸ்.வி.சேகர், டிவிட்டரில் கருத்து பதிவிட்டார். இதனால் அவரை கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் எஸ்.வி.சேகர் மீது பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வி.சேகரை கைது செய்வதை தடுக்க முடியாது என்று கூறினார். இந்நிலையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையில்மேலும் படிக்க…


செர்பியாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு 3 தங்கப் பதக்கங்கள்

செர்பியாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியா 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. செர்பியாவில் உலக குத்துச்சண்டைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இந்தியாவின் சுமித்சங் வான், நிகத்சரீன், ஹிமான் ஷீசர்மா ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். 91 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் சுமித்சங் வான், ஈக்வடாரின் காஸ்டிலோ டோரெர்சை 5 -க்கு பூஜ்யம் என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தார். இதேபோல, 51 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் நிகத்சரீன், கிரீஸின் ஐ காட்டேரிணியையும், 49 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் ஹிமான் ஷீசர்மா, அல்ஜீரியாவின் முகமது டௌராசையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.


“சதாம் உசைனின் இறுதி நிமிடங்கள்” அமெரிக்க படை வீரர் வெளியிட்ட சிலிர்க்க வைக்கும் உண்மை கடிதம்!

மாவீரன் சதாம் உசைனின் நெகிழ வைக்கும் இறுதி நிமிடங்கள் பற்றி அமெரிக்க படைவீரர் வெளியிட்ட சிலிர்க்க வைக்கும் உண்மை கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. இராக் அதிபராக இருந்த சதாம் உசைனை அமெரிக்கா அநியாயமாக கொலை செய்த கொடுமையை உலகறியும். சதாமின் இறுதி நிமிடங்கள் பற்றி சில அழகான தகவல்களை அந்த நேரத்தில் அவரின் அருகில் இருந்த மிக சிலர்களில் ஒருவரான அமெரிக்க படைவீரர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அந்தப் படை வீரர் தனது அந்த கால கட்டத்தில் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு முஸ்லிமின் வாழ்வு எப்படி இருந்தாலும் அவனது இறுதி கட்டம் சிறப்பானதாகவும் இறைவனுக்கு விருப்பமானதாகவும் இருப்பது முக்கியம். அந்த அடிப்படையில் சதாமின் இறுதி நிமிடங்கள் ஒரு உண்மை முஸ்லிமின் நிலைகளை எதிரொலிப்பதாக அமைந்திருப்பதை அறியமுடிகிறது. சதாம் உசைன் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முந்தையமேலும் படிக்க…


கர்நாடக அணையை தகர்ப்போம் : புதிய திட்டத்தில் மாவோயிஸ்டுகள்!

’அநியாயமான ஆட்சி அதிகாரத்தின் மீது ஆதங்கப்படும் ஓவ்வொருவருமே மாவோயிஸ்டுதான்!’ என்று நக்சல்தனம் நியாயப்படுத்தப்படும் தேசம் இது. அதிகார மையங்களுக்கு எதிரான போராளி மக்கள் குழுக்கள் சரியானவையா? தவறானவையா? என்று பொதுஜனங்கள் மத்தியில் பல காலமாக நடந்து கொண்டிருக்கும் விவாதங்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இந்தியாவை பொறுத்தவரையில் கணிசமான ஆண்டுகள் வரை வடகிழக்கு மாநிலங்கள் மட்டும்தான் மாவோயிஸ நடமாட்டத்துக்கான களங்களாக இருந்தன. ஆனால் கடந்த ஆறேழு ஆண்டுகளாக தென் இந்தியாவிலும் மாவோயிஸ்டுகள் தலை தூக்க துவங்கினர். ’வெஸ்டர்ன் கார்ட்ஸ் பட்டர்ஃபிளைஸ்’ (மேற்கு தொடர்ச்சி மலை வண்ணத்துப்பூச்சிகள்) எனும் பெயரில் கேரள, கர்நாடக மற்றும் தமிழக மாநிலங்களை இணைத்து அதன் மலைத்தொடர்களில் பதுங்கிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். தென் இந்தியாவில் கேரளத்தில் மாவோக்களின் நடமாட்டம் வெகு அதிகமாகவே இருந்தது 2014 முதல் 2017 வரை. காங்கிரஸ் ஆட்சி கேரளத்தில் இருந்தபோதுமேலும் படிக்க…


நாடு திரும்பிய ஜேர்மன் ஜிகாதி பெண்கள் கைது செய்யப்படுவார்களா?

ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகளை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த ஜேர்மானிய பெண்கள் இருவர் தங்களது பிள்ளைகளுடன் நாடு திரும்பியுள்ளனர். குறித்த ஜிகாதி பெண்களை கைது செய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்ட போது, அதை நீதிமன்றம் முறியடித்துள்ளது. ஐ.எஸ் பயங்கரவாத இயக்கமானது அமெரிக்க மற்றும் ரஷ்ய கூட்டுப்படைகளின் தீவிர ராணுவ நடவடிக்கைகளால் சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் இருந்து முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஈராக்கிய ராணுவத்தின் உதவியுடன் கூட்டுப்படைகள் தொடர்ந்து கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தது. இதில் ரஷ்ய, ஜேர்மானிய, பிரான்ஸ் நாட்டு ஜிகாதி பெண்கள் கைதாகினர். பலருக்கு ஈராக்கிய நீதிமன்றம் தண்டனை அறிவித்து சிறையில் தள்ளியுள்ளது. இந்த நிலையில் ஈராக்கில் இருந்து ஜேர்மானிய ஜிகாதி பெண்கள் இருவர் தங்கள் பிள்ளைகளுடன் வியாழக்கிழமை நாடு திரும்பியுள்ளனர். ஈராக்கில் உள்ள குர்துகளின் ஆதிக்கம் மிகுந்த பகுதியில் சிறையில் இருந்துள்ளதாகமேலும் படிக்க…


பிரான்ஸில் காணாமல் போன 13 வயது சிறுமி சடலமாக மீட்பு!

பிரான்ஸ் நாட்டில் உள்ள நோர்ட் பகுதியில் கடந்த புதன்கிழமை காணாமல் போன 13 வயது சிறுமி மூன்று நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Wambrechies நகரில் வசிக்கும் Angelique எனும் 13 வயது சிறுமி நண்பர்களுடன் வீட்டை விட்டு வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அன்று முழுவதும் சிறுமி வீட்டிற்கு வரவில்லை இதனால் பதட்டம் அடைந்த சிறுமியின் பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை Quesnoy-sur-Deule பகுதியில் உள்ள காடு ஒன்றில் இருந்து குறித்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பின்னர் சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பொலிசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலையில் தொடர்புடையவர் என்று 45 வயது நபர் ஒருவரையும் பிரான்ஸ் பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்த நபர் மீது ஏற்கெனவே பாலியல்மேலும் படிக்க…


இரு நாட்டு ஜனாதிபதிகளாலும் வெள்ளை மாளிகையில் நடப்பட்ட மரக்கன்று மாயம்!

பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளின் சிறப்பு நட்புறவை பாராட்ட இரு நாட்டு ஜனாதிபதிகளாலும் வெள்ளை மாளிகையில் நடப்பட்ட மரக்கன்று தற்போது மாயமாகியுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் அரசு முறை பயணமாக தமது மனைவி பிரிஜிட் உடன் கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் மேக்ரான் தம்பதிக்கு சிறப்பு வரவேற்பு அளித்திருந்தனர். இந்த நிலையில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளின் சிறந்த நட்புறவை பாராட்டிஇருநாட்டு ஜனாதிபதிகளும் வெள்ளை மாளிகையில் கருவாலி மரக்கன்று ஒன்றை நட்டனர். தற்போது அந்த மரக்கன்று மாயமாகியுள்ளது. வெள்ளை மாளிகையின் புகைப்படக்கலைஞர்களே குறித்த விடயத்தை கண்டுபிடித்துள்ளனர். குறித்த கருவாலி மரக்கன்றானது மேக்ரான் பிரான்ஸ் நாட்டில் இருந்து அமெரிக்கா சென்றபோது கூடவே எடுத்துச் சென்றதாகும். மரக்கன்று மாயமானது தொடர்பில் வெள்ளை மாளிகை அதிகாரிகளால் இதுவரை எந்த விளக்கமும்மேலும் படிக்க…


சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

சுவிட்சர்லாந்தில் நடப்பு ஆண்டில் குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 3 மாதத்தில் சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கையானது அரசு அதிகாரபூர்வ தகவல்படி 7,098 ஆகும். இது கடந்த 2017 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களை ஒப்பிடுகையில் 3,080 எண்ணிக்கை குறைவு என தெரிய வந்துள்ளது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் இதற்கான உறுதியான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், இது இறுதியானது அல்ல எனவும், மிக குறுகிய கால நடவடிக்கையாக மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது எனவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு துவக்கத்தில், சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற தேவையான வழிமுறைகளில் அரசு மாற்றம் செய்தது. அதில் முக்கியமாக மொழியை முன்னிலைப்படுத்தியது. ஆனால் அதன் தாக்கம் இதுவரை வெளிப்படையாக அறியப்படவில்லைமேலும் படிக்க…


சுவிட்சர்லாந்துக்கு இன்னும் அதிக பொலிசார் தேவை: பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு

சுவிட்சர்லாந்துக்கு இன்னும் அதிக பொலிசார் தேவைப்படுவதாகவும் அதனால் குறைந்தபட்சம் 2000 பொலிசாராவது தேர்வு செய்யப்படவேண்டும் என்றும் பொலிஸ் மற்றும் நீதித்துறை மாநாட்டிற்கு தலைமையேற்ற Pierre Maudet தெரிவித்துள்ளார். இணையதள குற்றங்கள் மற்றும் உலக பொருளாதார மாநாடு போன்ற பெரிய நிகழ்வுகள் நடைபெறுவதால் இது மிகவும் அத்தியாவசியமாகும் என அவர் தெரிவித்துள்ளார். பல ஐரோப்பிய நாடுகளில் இருப்பதைக் காட்டிலும் சுவிட்சர்லாந்தில் பொலிசாரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் 277 பேருக்கு ஒரு பொலிசார் இருக்கும் நிலையில் சுவிட்சர்லாந்தில் 455 பேருக்கு ஒரு பொலிசார் உள்ளனர். அதாவது பொலிசாரின் எண்ணிக்கை 10 சதவிகித்திலிருந்து 15 சதவிகிதமாக அதிகரிக்கப்பட வேண்டும். வேறு வகையில் சொல்ல வேண்டுமானால், இன்னும் 2000 பேர் பொலிஸ் வேலையில் சேர்க்கப்பட வேண்டும். ஒரு தேசிய பொலிஸ் படை இருக்குமானால், முக்கிய நிகழ்வுகள் ஏதேனும் நடக்கும்மேலும் படிக்க…


நடிகர் சிவகுமார் சிறப்பு நேர்காணல் – பாகம் 2


பிரித்தானியாவின் உட்துறைச் செயலாளர் அம்பர் ருட் ராஜினாமா!

வின்ட்ரஷ் சமூகத்தினரை வெளியேற்றுவது தொடர்பான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள பிரித்தானியாவின் உட்துறைச் செயலாளர் அம்பர் ருட், தனது பதவியை ராஜினாமாச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமாத் தொடர்பான அறிவிப்பை, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேக்கு தொலைபேசி வாயிலாக நேற்று தெரியப்படுத்திய அவர், தனது ராஜினாமாக் கடிதத்தை இன்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாகக் கையளிப்பாரென, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கரீபியன் நாடுகளிலிருந்து 1940ஆம் ஆண்டு முதல் 1970ஆம் ஆண்டு காலப்பகுதியில், தொழிலுக்காக பிரித்தானியாவுக்கு அழைத்துவரப்பட்ட வின்ட்ரஷ் சமூகத்தினரின் சந்ததியினரைச் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளாக அறிவித்து, அவர்களை வெளியேற்றும் திட்டமொன்றை உட்துறைச் செயலாளர் அம்பர் ருட் அண்மையில் முன்வைத்திருந்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், இதற்காக அவர் மன்னிப்புக் கோரியிருந்தார். இதனையடுத்து, வின்ட்ரஷ் சமூகத்தினர் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கவனக்குறைவுடன் வழிநடத்திய தனது தவறுக்குப் பொறுப்பேற்று தனது பதவியைமேலும் படிக்க…


வவுனியாவில் த.தே.கூட்டமைப்பு சபைகளை இழக்க சிவசக்தி ஆனந்தனே காரணம்! – ப.சத்தியலிங்கம்

வவுனியாவில் தேசிய கட்சிகளுக்கு எதிராக தமிழ் கட்சிகளாக ஒன்றிணைந்து ஆட்சியமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடன் பல தடவை பேசிய போதிலும் அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டதாக வட மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதுவே சில சபைகளை கூட்டமைப்பு இழக்க காரணம் என அவர் கூறியுள்ளார். வன்னியின் சில பகுதிகளின் உள்ளூராட்சி சபைகளில் வேறு கட்சிகள் ஆட்சி அமைந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே ப.சத்தியலிங்கம் கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தேர்தல் முறை வித்தியாசமான பல பாதிப்புக்களை ஏற்படுத்திய முறையாக இருந்தாலும் கூட அரசியல் கட்சியாக இருந்தவர்கள் பல்வேறு காரணங்களால் பிரிந்து சென்றதாக அவர் குறிப்பிட்டார். அதன்காரணத்தினாலேயே வவுனியா உட்பட வட மாகாணத்திலே தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக ப.சத்தியலிங்கம் சுட்டிக்காட்டினார். யுத்த காலத்திலும் யுத்தத்தின் பின்னர் மகிந்த ராஜபக்சவின் காலப்பகுதியிலேயேமேலும் படிக்க…


தென் கொரியாவுடன் இணைய – வட கொரியா செய்த நேர மாற்றம்!

கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (அல்லது பொதுவாக வட கொரியா) கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும். இதன் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் பியொங்யாங் ஆகும். இதன் வடக்கில் சீனாவும் ரஷ்யாவும் அமைந்துள்ளன.தெற்கே தென் கொரியா அமைந்துள்ளது. வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகள் தொடர்ந்து பல வருடங்களாக எதிரி நாடுகளாகவே காணப்பட்டு வந்துள்ளன. மேலும் ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்களை பரிசோதித்து உலக நாடுகளையே அதிரவைத்த வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தற்போது மனம்மாறி வெள்ளைக்கொடி காட்டி வருகின்றார். அணு ஆயுத சோதனை நிறுத்தம், தென் கூறியவுடன் நல்லுறவு என ஆச்சர்யங்களை அளித்து கொண்டே இருக்கிறார்.இந்நிலையில் புதிய திருப்பமாக தென்கொரியா பின்பற்றி வரும் நேரத்தையே பின்பற்ற வட கொரியா நாடு முடிவு செய்துள்ளது. இதனால் அந்த நாட்டின்மேலும் படிக்க…


அவுஸ்ரேலியாவில் பீதியை ஏற்படுத்திய அழுகிய பழம்!

அவுஸ்ரேலியா பல்கலைக்கழகத்தில் அழுகிய பழத்தில் இருந்து வெளியேறிய துர்நாற்றத்தை எரிவாயு கசிவு என நினைத்து அஞ்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளியேறியுள்ளனர். அவுஸ்ரேலியா மெல்பேர்னில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நேற்று திடீரென துர்நாற்றம் எழுந்துள்ளது. இதனை எரிவாயு கசிவு என அஞ்சிய பல்கலைக்கழக ஊழியர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வெளியேற்றியுள்ளதுடன், தீயணைப்பு படையினருக்கும் அறிவித்துள்ளனர். இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் துர்நாற்றம் குறித்த தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். தேடுதலில் தொழில்நுட்ப நிறுவன நூலகத்தில் மறைவிடத்தில இருந்த துரியன் பழங்களே துர்நாற்றத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.


கொலை செய்யப்பட்ட ஈழ அகதி கிருஷ்ணகுமாரின் நினைவு நிகழ்வு அனுஷ்டிப்பு

கனடாவில் கொலையுண்ட ஈழ அகதியான கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் நினைவு நிகழ்வு நேற்று(30) கனடாவின் டொரென்டோ நகரில் நடைபெற்றது. 2010ம் ஆண்டு எம்.வீ.சன்சீ கப்பல் ஊடக அகதியாக கனடா சென்ற அவர், கடந்த ஆண்டு கனடாவின் தொடர் கொலையாளியான மெக் ஆர்த்தரினால் கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்டு, அவரது தொழில் அனுமதியும் நிராகரிக்கப்பட்ட நிலையில், நாடுகடத்தலுக்கு உட்படாதிருக்கும் நோக்கில் தலைமறைவாகி இருந்தார். இந்தநிலையிலேயே அவர் கொலை செய்யப்பட்டார். அவரது நினைவேந்தல் நிகழ்வில் அவரது உறவினர்கள், நண்பர்களுடன், 2010 சன்சீ கப்பல் மூலம் கனடா சென்ற சக அகதிகளும் கலந்து கொண்டிருந்தனர். அவருடன் மற்றுமொரு இலங்கையரும் மெக்ஆர்த்தரினால் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டு வீரர் ரஃபேல் நடால் கிரீக் நாட்டை சேர்ந்த ஸ்டெபனோஸ் டிட்சிபாசை வென்று சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று இறுதி போட்டி நடந்தது. இந்த போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான ரஃபேல் நடால், கிரீக் நாட்டை சேர்ந்த ஸ்டெபனோஸ் டிட்சிபாசுடன் மோதினார். இந்த போட்டியில் நடால் அதிரடியாக ஆடி 6-2, 6-1 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இது இவரது 11-வது பார்சிலோனா ஓபன் சாம்பியன் பட்டமாகும். இந்த ஆட்டம் சுமார் 40 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.


சமரச பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தலீபான்களுக்கு மீண்டும் ஆப்கானிஸ்தான் அதிபர் அழைப்பு

தலீபான்கள் பேச்சு வார்த்தைக்கான அழைப்பை ஏற்று சமரச பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டும் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிற தலீபான் பயங்கரவாதிகளை நிபந்தனையற்ற, நேரடி பேச்சு வார்த்தைக்கு அந்த நாட்டின் அதிபர் அஷரப் கனி கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் அழைப்பு விடுத்தார். போர் நிறுத்தம் செய்யும் திட்டத்தையும், கைதிகளை விடுவிக்கும் திட்டத்தையும் அவர் முன்மொழிந்தார். அந்த நாட்டின் அரசியல் சட்டத்தை ஆராய்ந்து மாற்றி அமைக்கவும் அவர் சம்மதம் தெரிவித்தார். ஆனால் தலீபான்கள் பேச்சு வார்த்தைக்கு திரும்பாமல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், 1992-ம் ஆண்டு அங்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவுடன் இருந்த நஜிபுல்லா அரசை முஜாகிதீன்கள் வீழ்த்தியதின் 26-வது ஆண்டு வெற்றி தின விழாவில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி கலந்து கொண்டுமேலும் படிக்க…


4 வாரங்களில் வடகொரிய தலைவருடன் சந்திப்பு – டிரம்ப் அறிவிப்பு

வட கொரிய தலைவருடனான சந்திப்பு இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் நடைபெறும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்தி வந்த வட கொரியாவுக்கும், அதைத் தீவிரமாக எதிர்த்து வந்த அமெரிக்காவுக்கும் போர் மூளும் என்று எதிர்பார்க்கப்பட்ட தருணங்கள் உண்டு. ஆனால் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் நிலைமை மாறி விட்டது. இரு கொரியாக்களுக்கு இடையே மட்டுமின்றி, வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயும் இணக்கமான சூழல் உருவாகி வருகிறது. வரலாற்று திருப்பமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சம்மதம் தெரிவித்து உள்ளார். இந்த சந்திப்பு எப்போது நிகழும் என்று உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது. இது தொடர்பாக டிரம்ப் நேற்று முன்தினம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இப்போதுதான் தென்கொரிய அதிபர் மூன் ஜேமேலும் படிக்க…


தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்கா உறுதி அளித்தால் அணு ஆயுதத்தை கைவிட தயார் – கிம்

எங்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்கா உறுதியளித்தால் நாங்கள் அணு ஆயுதத்தை கைவிட தயார் என வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். 65 ஆண்டுகள் நிலவிய பகையை மறந்து வட, தென்கொரிய அதிபர்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமே கொரிய பிராந்தியத்தில் அணு ஆயுத சோதனைகளை கைவிடுவது என்பதுதான். ஐ.நா. உள்பட பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனைகளை நடத்தியது தான் வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கோபத்திற்கு காரணமாக இருந்தது. எனவே அடுத்த மாதம் அணு சோதனை கூடங்களை வடகொரியா மூடும் என தென்கொரிய அதிபரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இந்நிலையில், எங்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்கா உறுதியளித்தால் நாங்கள் அணு ஆயுதத்தைமேலும் படிக்க…


நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி தேனியில் மே 6-ந் தேதி தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி தேனியில் மே 6-ந் தேதி டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தேனி மாவட்டம் தேவாரம் பகுதி பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆராய்ச்சி மையத்தை அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி கொடுத்திருப்பது மேற்கு தொடர்ச்சி மலையை நாசமாக்கிடும் ஒரு பெரும் சதி. இதில் எடப்பாடி பழனிசாமியின் அரசு வழக்கம்போல் ஊமையாக இருந்துகொண்டு இத்திட்டத்தை எதிர்க்காமல் உள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்கும், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சுற்று வட்டார நீர் ஆதாரத்திற்கும், இயற்கை சூழலுக்கும், தேனி மாவட்டத்தின் விவசாயத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தை இத்திட்டம் ஏற்படுத்தும். நியூட்ரினோ கதிர்கள் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்வதன் மூலம் இப்பகுதியை ஒரு பரிசோதனைக்கூடமாக்க முயலும்மேலும் படிக்க…


காரைக்குடி அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர். காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 37). மாவட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளரான இவர், வீட்டிலேயே முட வைத்திய சாலை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஸ்கரன் தனது நண்பர்களுடன் ரிஷிகேஷ் சென்று விட்டார். நேற்று இரவு வீட்டில் அவர் மனைவி தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் வீட்டு வாசலில் 2 பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பெட்ரோல் குண்டுகள் வெடித்து கதவு சேதமடைந்தது. மேலும் அங்குமேலும் படிக்க…


1,300 மதுக் கடைகளை உடனடியாக மூட உத்தரவு: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின் காரணமாக, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அந்த கடைகள் மூடப்பட்டன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள ‘டாஸ்மாக்’ மதுபானக்கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபானக்கடைகள் மூடப்பட்டன. இந்த கடைகளை தமிழக அரசு வேறு இடத்துக்கு மாற்றம் செய்தது. இந்தநிலையில் தமிழகத்தில் பல இடங்களில் மாநில நெடுஞ்சாலைகள் உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்யப்பட்டு மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. இதுபோன்று மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து மதுபானக்கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்களுக்கான சமூக நீதிப் பேரவை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்தமேலும் படிக்க…


பச்சை பட்டு அணிந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்

மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார். அந்த கண்கொள்ளா காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.  மதுரை மாநகரில் மாதந்தோறும் திருவிழா நடைபெற்று வந்தாலும், சித்திரைத் திருவிழா வரலாற்று சிறப்பு பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து, சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக இந்த திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறப்புமிக்க சித்திரை திருவிழா இந்த ஆண்டு கடந்த 18-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 15-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பமானது. கண்டாங்கிப் பட்டு மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் 25-ந் தேதி பட்டாபிஷேகமும், 26-ந்தேதி திக்கு விஜயமும் நடந்தன. திருவிழாவின் முக்கியமேலும் படிக்க…


இரணைத்தீவு மக்கள் தொடர்ந்தும் காணி விடுவிப்பு போராட்டம்

இரணைத்தீவு மக்களது காணி விடுவிப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒரு வருடத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள், தற்போது இரணைத்தீவிற்கு சென்று அங்கு இரண்டாவது வாரமாக போராட்டத்தை நடத்துகின்றனர். அவர்களை பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் சந்தித்து ஒத்துழைப்பை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி நேற்று ஈ.பி.டி.பியின் உறுப்பினர்கள், அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.


நடிகர் சிவகுமார் சிறப்பு நேர்காணல் – பாகம் 1


விரைவில் நாடாளுமன்றில் ஊழல் தடுப்பு சட்டத்தில் ஏற்படுத்தவுள்ள திருத்தங்கள்

ஊழல் தடுப்பு சட்டத்தில் ஏற்படுத்தப்படவுள்ள திருத்தங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன. ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜெயமன்னேவை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. புதிய சட்டத்திருத்தத்தின் பிரகாரம், தனியார் துறையில் இடம்பெறுகின்ற ஊழல் மற்றும் கையூட்டல்களை தடுப்பதற்கான அதிகாரம், அந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் அந்த ஆணைக்குழுவினால் நேரடியாக மேல் நீதிமன்றின் ஊடாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அதிகாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.


பிரபல திரைப்பட இயக்குனர் காலமானார்!

சிங்கள சினிமாவின் தந்தை என வர்ணிக்கப்படும் உலகின் சிரேஷ்ட இயக்குனரான கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் 99 வயதில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த அவர் சற்று முன்னர் காலமானதாக சினெஸ்டா மன்றத்தின் தலைவர் ஜெயந்த தர்மதாச தெரிவித்தார். 1919 இல் பிறந்த இவர் ஒரு பத்திரிகையாளராக செயற்பட்டு பின்னர் திரைத்துறையில் பிரவேசித்தார். 1956 இல் இவரது முதலாவது திரைப்படமான ‘ரேகாவ’ திரைப்படம் வெளியாகியது. 2003 டிசம்பரில் பேராதனைப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.


முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை விவகாரம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கோரிக்கை

முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை விடயத்தில், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இதில் தலையிட்டு, சுமுக நிலையை ஏற்படுத்த வேண்டுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள், அபாயா ஆடை அணிந்துவருவது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சகலருக்குமான புதிய இலங்கையை கட்டியெழுப்பும் வகையில் ஒவ்வொரு சமூகத்தவர்களினதும் கலாசார தனித்துவங்களை மதித்து பரஸ்பர அனுசரிப்புகளோடு எல்லோரும் நடந்து கொள்ள வேண்டிய தருணத்தில் இது போன்ற சம்பவங்கள் மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையினையும் தருகின்றன. பாடசாலை மட்டத்தில் நிர்வாக ரீதியாக கையாளப்பட்டு தீர்வு காணப்பட்டிருக்க வேண்டிய இவ்விடயம் இனவாத பிரதிபலிப்புகளைக் கொண்ட உடனடி ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டமையினைமேலும் படிக்க…


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !