Wednesday, September 13th, 2017

 

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலாவதியான பொருட்களை வழங்கிய பதஞ்சலி நிறுவனம்!

அசாம் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு பதஞ்சலி நிறுவனம் காலாவதியான உணவுப் பொருட்களை வழங்கி உள்ளதாக சர்ச்சை எழுந்து உள்ளது. கடந்த மாதம் அசாம் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. 3,300 கிராமங்களை சேர்ந்த 37 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்று உள்ளனர். மக்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு பல இடங்களில் இருந்தும் ஆதரவுகளும், நிவாரண பொருட்களும் வந்து குவிகிறது. இந்த நிலையில் பதஞ்சலி நிறுவனம் காலாவதியான உணவுப் பொருட்களை வழங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி நிறுவனம், சுமார் ரூ.12 கோடி மதிப்பிலான உணவுப் பொருட்களை அசாம் மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக வழக்கியுள்ளது. தற்போது அந்த உணவுப் பொருட்களில் காலாவதியான பொருட்கள் இருந்ததாகமேலும் படிக்க…


எகிப்தில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் – ராணுவம் மோதல்: 7 பேர் பலி

எகிப்து நாட்டின் சினாய் மாகாணத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்த வந்த 5 தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. இந்த மோதலில் 2 வீரர்களும் பலியாகினர். எகிப்து நாட்டின் சினாய் மாகாணத்தில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடியில் இன்று ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் இடுப்பில் வெடிமருந்தை கட்டிக்கொண்டு சோதனை சாவடியில் பணிபுரியும் வீரர்களை நோக்கி வந்துள்ளான். இதைக்கண்ட ராணுவ வீரர்கள் அவனை மடக்கி பிடித்தனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் 2 ராணுவ வீரர்களும் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், வெடி மருந்தை கட்டிக் கொண்டு வந்து தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகளின் தாக்குதல் நடவடிக்கை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது எனமேலும் படிக்க…


மியான்மர் கலவரத்தில் 86 இந்துக்கள் படுகொலை: 200 குடும்பங்கள் வீடுகளை இழந்து காட்டில் தஞ்சம்

மியான்மர் கலவரத்தின்போது 86 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், 200 இந்து குடும்பங்கள் உயிருக்குப் பயந்து காடுகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் ரோகிங்யா முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது. அதை ஒடுக்க சென்ற மியான்மர் ராணுவத்துக்கும், ரோகிங்யா ஆயுதக் குழுவினருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. அதில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ராணுவத்தின் ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட மக்கள், உயிர் பிழைக்க அண்டை நாடான வங்காளதேசத்துக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்குள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். கலவரத்தில் ஏராளமான ரோகிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 86 இந்துக்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை வங்காளதேச அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் கலு சீல் என்பவர் தெரிவித்துள்ளார். ராக்கின் மாகாணத்தில்மேலும் படிக்க…


இங்கிலாந்தில் உள்ள தாவூத் இப்ராகிமின் ரூ.43 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்

இங்கிலாந்தில் உள்ள தாவூத் இப்ராகிமின் ரூ.43 ஆயிரம் கோடி மதிப்பிலாள சொத்துக்களை அந்நாட்டு அதிகாரிகள் முடக்கி உள்ளனர். இதேபோல் தாவூத்தின் கூட்டாளிகள் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவன். உலகில் உள்ள மிகப் பெரிய பணக்கார தாதாக்களில் இவரும் ஒருவர் என்று போர்பஸ் பத்திரிகை 2015-ம் ஆண்டு தெரிவித்து இருந்தது. தாவூ இப்ராகிமுக்கு உலகின் பல்வேறு இடங்களில் ஏராளமான சொத்துக்கள் இருக்கிறது. அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள தாவூத் இப்ராகிமின் ரூ.43 ஆயிரம் கோடி மதிப்பிலாள சொத்துக்களை அந்நாட்டு அதிகாரிகள் முடக்கி உள்ளனர். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தாவூத் இப்ராகிமின் சொத்துக்களை முடக்குவது குறித்து மத்திய அரசு இங்கிலாந்து அதிகாரிகளிடம்மேலும் படிக்க…


இலங்கை சர்வதேச செஞ்சிலுவை சங்க தலைவர் – கடற்படை தளபதி சந்திப்பு

இலங்கையின் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் திருமதி கிளரி மெட்ரவுட் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யாவை சந்தித்தார். கடற்படை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் திருமதி மெட்ரவுட் கடற்படைத் தளபதிக்கு செஞ்சிலுவை சங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் பற்றி தெளிவுபடுத்தியதுடன் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக்கொள்ளப்பட்டன.


மாணவர்களுக்கு காப்புறுதித் திட்டம்!

நாட்டின் 45இலட்சம் பாடசாலை மாணவர்களுக்காக சுறக்ஸா காப்புறுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலவசக்கல்வியை மேலும் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ்; காரியவசம் தெரிவித்துள்ளார். காலி சவுத் லாண்ட வித்தியாலயத்தில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்வின்போது கல்வி அமைச்சர் மாணவிகளுக்கு பரிசில்களை வழங்கினார். அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில், மாணவர்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கம் விசேட பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. தற்போதைய யுகத்திற்கு ஏற்றவகையில் கல்வி தொடர்பில் உன்னதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


திங்கள் முதல் அரச அலுவலகங்களின் கடமை நேரங்களில் மாற்றம்

பத்தரமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள அரச அலுவலங்களின் கடமை நேரங்களை மாற்றுவது தொடர்பிலான செயற்றிட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதற்கமைய, அலுவலக ஊழியர்கள் காலை 7.30 முதல் 9.15 வரை சேவைக்கு சமூகமளிக்க முடியும். பிற்பகல் 3.35 முதல் 5 மணி வரை அலுவலக பணிகளை பூர்த்தி செய்ததன் பின்னர் வெளியேற முடியும். நிறுவனத் தலைவர்களின் அங்கீகாரத்துடன் மூன்று மாதங்களுக்கு இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டிடம்

கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை அமைத்துக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்பொழுது சுமார் 200 மாணவர்கள் NVQ 4 ,5 மற்றும் 6 தரத்திலான பயிற்சி கற்கை நெறிகளை கற்று வருகின்றனர். இவர்களில் 57 சதவீதமானோர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு அப்பால் இருந்து வருகை தருகின்றனர். தற்பொழுது 144 மாணவர்கள் தங்க கூடிய விடுதி வசதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. திறன்முறை ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கிளிநொச்சி இலங்கை ஜேர்மன் பயிற்சி நிலையம் 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இவ்வருடத்தில் மேலும் 400 மாணவர்கள் இங்கு கற்கை நெறிக்காக சேர்த்துக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனால் தங்குமிட வசதிகளை விரிவுபடுத்தவேண்டியுள்ளது. மேலதிக 400 மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளை விரிவுபடுத்தும் பொருட்டு இந்த பயிற்சி நிறுவனத்தில் புதிய தங்குமிட கட்டம் ஒன்றைமேலும் படிக்க…


கிழக்கு பல்கலை கழகத்தின் 2ஆவது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு இன்று ஆரம்பம்..

கிழக்கு பல்கலை கழகத்தின் இரண்டாவது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு திருகோணமலை கோணேஸ்வரபுரியில் அமைந்துள்ள வளாகத்தில் வளாக முதல்வர் டொக்டர் வீ.கனகசிங்கம் தலைமையில் நடைபெற்றது. திருகோணமலை வளாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்;மாநாடு இன்று (13) இடம்பெற்றது. இம்மாநாட்டில் 66 ஆய்வு கட்டுரைகள் துறைசார் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படவுள்ளதுடன் வேலையில்லா பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான காரணங்கள்- சமகால சமூக கலாச்சார பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துறையாடப்படவுள்ளது. இன்றைய தினம் ஆரம்பமான இம்மாநாடு நாளை நிறைவு பெறவுள்ளதுடன் உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வாளர்களும் இதில் பங்குகொள்ளவுள்ளமை விஷேட அம்சமாகும். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம, விஷேட அதிதியாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா ,கிழக்கு பல்கலைக்கழக பிரதி துணைவேந்தர் டொக்டர் கருணாகரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தமிழர் என்றாலே இனவாதத்துடன் செயற்படுவதே சிலரின் நிலைப்பாடாகும் – அமைச்சர் Dr.ராஜித சேனாரத்ன

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் தமிழர் என்பதினாலேயே அவருக்கு எதிராக இன ரீதியில் குற்றம் சுமத்தப்படுகின்றது என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். செய்தியாளர் :  பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன திரு.ஆர்.பாஸ்கரலிங்கத்திற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டொன்றை சுமத்தியுள்ளார் . இவர் எல்ரீரீஈ க்கு நிதிஉதவி வழங்கியுள்ளார் என்றும் புகார் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டானது தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஒப்பானது என்று செய்தியாளர் சுட்டிக்காட்டினார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளரும் மேற்கண்டவாறு பதிலளித்தார். மேலும் , தமிழர்மேலும் படிக்க…


ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்களைப் பகிர்ந்தால் அது எந்நேரமும் பறிக்கப்படலாம் – வடமாகாண முதலமைச்சர்!

ஒற்றையாட்சியின் கீழ் மாகாணங்களுக்கு எந்தகைய அதிகாரங்களைப் பகிர்ந்தாலும், அவை மீளப் பெறக்கூடிய அபாயம் உள்ளதாகவும், சமஷ்டி முறையிலான தீர்வே அறுதியானதாகவும், உறுதியானதாகவும் அமையும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரபல அரசியல் விமர்சகரான குசல் பெரேராவின் நூல் வெளியீடு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று மாலை நடைபெற்றது. அதில் வடமாகாண முதலமைச்சரும் கலந்துகொண்டார். இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் ‘அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு முழுமையான அதிகாரப் பகிர்வு வழங்கினால் சமஷ்டிக் கோரிக்கைகைவிடப்படுமா எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த வடமாகாண முதலமைச்சர், அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளில் எது சரியோ அதனைச் சரியென்றும், எது பிழையோஅதனைப் பிழையென்றும் சுட்டிக்காட்டி வருகின்றேன். இதில் தவறிருப்பதாக நான் நினைக்கவில்லை. மகிந்தராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார் என்ற அச்சத்தைப் பரப்பி சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது.மேலும் படிக்க…


வித்தியா படுகொலை வழக்கு செப்ரெம்பர்27 தீர்ப்பு!

நேற்றையதினம் வழக்குத் தொடுநர் சாட்சியங்கபுங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப் பாலியல் வன்புனர்வின் பின் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ட்ரயல் அட் பார் முறையில் நடைபெற்றுவந்த நிலையில், எதிர்வரும் 27ஆம் நாள் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ளின் தொகுப்புரை வாசிக்கப்பட்டதன் பின்னர் இன்று எதிரி தரப்பின் சாட்சியங்களின் தொகுப்புரை வழங்கப்பட்டது. இந்நிலையில், தீர்ப்பாயம் எதிர்வரும் 27ஆம் நாள் கூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கின் தீர்ப்பும் 27ஆம் நாளன்று வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜனவரி 20 இற்குப் பின்னரே உள்ளூராட்சித் தேர்தல் – மகிந்த தேசப்பிரிய!

உள்ளூராட்சித் தேர்தல் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் நாளுக்குப் பின்னரே நடத்தப்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சிறிலங்காவின் தேர்தல்கள்ஆணைக்குழு  தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரி்வித்தார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “ கபொத சாதாரண தரத் தேர்வுகள் நடக்கவிருப்பதால், உள்ளூராட்சித் தேர்தலை இந்த ஆண்டு டிசெம்பர் மாதம் நடத்த முடியாது. டிசெம்பர் 9ஆம் நாள் மாத்திரம் பயன்படுத்தக் கூடியதாக இருந்தாலும்,  அன்றைய நாளில் தேர்தலை நடத்த வேண்டாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார். டிசெம்பர் 30, 31ஆம் நாள்களில் தேர்தலை நடத்துவதற்குச் சாத்தியம் இல்லை. ஏனென்றால், அரச நிறுவனங்கள், இந்த ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையை ஆண்டு இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதனால் அரச பணியாளர்கள் விடுமுறை எடுக்க முடியாது. ஜனவரி நடுப்பகுதியில் தான் ஒரு நாள் இருக்கிறது. ஆனால் தைப்பொங்கல்மேலும் படிக்க…


தேசியக்கொடி ஏற்றும் போது செல்ஃபோனில் பேசியவருக்கு வித்தியாசமான தண்டனை!

சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றிய போது செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஆம்பூர் மருத்துவமனை மருத்துவ அலுவலருக்கு நீதிமன்றம் வித்தியாசமான தண்டனை வழங்கியுள்ளது. ஆம்பூர் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் கென்னடி கடந்த மாதம் சுதந்திர தினத்தன்று, மருத்துவமனை வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்ட போது, செல்போனில் பேசியபடி நின்றிருந்தார். இதுகுறித்து, ஆம்பூர் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சுரேஷ்பாபு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் கென்னடி முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். Ads By Datawrkz விசாரணை நடத்திய நீதிபதி பி.என்.பிரகாஷ், தேசிய கொடியை அவமதித்த மருத்துவ அலுவலர் கென்னடி செப்டம்பர் 12ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தினமும் காலை 10 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அதன் அடிப்படையில்மேலும் படிக்க…


இலங்கை மைதானத்தில் முரளீதரனின் பெயர் திடீர் நீக்கம்

மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில், இலங்கையின் கண்டி மாவட்டத்திலுள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்திற்கு இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரனின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. தற்போது தன் மகன் முத்தையா முரளீதரனின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முரளீதரனின் தந்தை முத்தையா மல்வத்து மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரிடம் முறையிட்டுள்ளார். மகிந்தஆட்சிக் காலத்தில் இந்த மைதானத்திற்கு எனது மகனான முரளீதரனின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. தற்போது தனது மகனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதற்குரிய தீர்வை விளையாட்டமைச்சுடன் கதைத்து தீர்வைப் பெற்றுத் தருவதாகதிப்பட்டுவாலே ஸ்ரீ சிததார்த்த சுமங்கல தேரர் உறுதியளித்துள்ளார்.


எஸ்.வி.சேகர் பெயரில் போலி முகநூல் பக்கம்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்

நடிகர் எஸ்.வி.சேகர் அவரது பெயரில் போலியாக முகநூல் பக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அதை முடக்க வேண்டும் என்றும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக்கொடுத்தார். அந்தபுகார் மனுவில், தனது பெயரில் போலியாக முகநூல் பக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அதை முடக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “ஏற்கனவே என் பெயரில் போலி முகநூல் பக்கம் தொடங்கப்பட்டு முடக்கப்பட்டது, தற்போது மீண்டும் போலியாக எனது பெயரில் முகநூல்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த போலி முகநூல் பக்கத்தை போலீசார் உடனடியாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்” என்றார்.


நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: தி.மு.க. தலைமையில் அனைத்து எதிர்க்கட்சியினரும் போராட்டம்

நீட் தேர்வை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மருத்துவப் படிப்புக்கு மாணவ – மாணவிகளை தேர்வு செய்ய ‘நீட்’ எனும் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த தேர்வுக்கு மத்திய பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவ- மாணவிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் டாக்டராகும் கனவுக்கு மத்திய அரசின் ‘நீட்’ தேர்வு முறை பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. அரியலூர் மாணவி அனிதா பிளஸ்-2 தேர்வில் 1176 மதிப்பெண்களுடன் 196.75 கட்ஆப் பெற்றிருந்தும் ‘நீட்’ தேர்வு முட்டுக்கட்டை காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்தார். இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் ‘நீட்’ தேர்வுமேலும் படிக்க…


1013 மருத்துவ பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை: முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் புதியதாக தேர்வு செய்த 1013 மருத்துவ பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தற்போது 1013 உதவி மருத்துவர்களை புதியதாக தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல்-அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- இந்தியாவிலேயே, மருத்துவத் துறையில் தமிழகம் தான் முதன்மை வகிக்கின்ற அளவிற்கு சிறப்பான மருத்துவர்களால் சேவையாற்றப்பட்டு வருகின்றது. புதிதாக ஆணை பெற்றிருக்கின்ற மருத்துவர்கள் கிராமப்புறத்திலே சேவை செய்து, கிராமப்புறத்தில் வாழ்கின்ற ஏழை, எளியோருக்கு சிறப்பான முறையிலே சிகிச்சை அளித்து மக்கள் போற்றுகின்ற அளவிற்கு உங்கள் பணி அமையமேலும் படிக்க…


‘இர்மா’ புயல்: புளோரிடாவில் உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – கரீபியன் தீவில் 100 கைதிகள் தப்பி ஓட்டம்!

அட்லாண்டிக் கடலில் உருவாகிய ‘இர்மா’ புயல் பாதிப்பால் புளோரிடா மாகாணத்தில் பலியாணவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பிரிட்டிஷ் விர்ஜின் தீவில் 100-க்கும் மேற்பட்ட மோசமான கைதிகள் மாயமாகியுள்ளனர். வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவான ‘இர்மா’ புயல் கரீபியன் தீவுகளை கடந்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புயலின் தாக்கத்திலிருந்து கரீபியன் தீவுகள் இன்னும் மீளாத நிலையில் நேற்று வரை அங்கு 37 பேர் பலியாகியுள்ளனர். செயிண்ட் மார்டின் உள்ளிட்ட பல தீவுகளில் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மணிக்கு சுமார் 130 கி.மீ வேகத்தில் வீசியது. பலத்த காற்று காரணமாக மின்கம்பங்கள் சாலைகளில் விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்ததால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. புளோரிடா மாகாணத்தின் பல்வேறு நகரங்களில் மின்சாரம்மேலும் படிக்க…


7 சிறுமிகளை தெய்வங்களாக தேர்ந்தெடுத்து நடைபெறும் ஏழைகாத்த அம்மன் கோவில் விழா!

அம்மன் தெய்வங்களாக 7 சிறுமிகளை தேர்வு செய்து வழிபடும் பாரம்பரியமான ஏழைகாத்தம்மன் கோவில் திருவிழா தொடங்கியது. அம்மன் தெய்வங்களாக தேர்வு செய்யப்பட்ட 7 சிறுமிகளுடன், கோவில் பூசாரி சின்னதம்பி உள்ளார். மேலூரை அடுத்த வெள்ளலூரை தலைமையிடமாக கொண்டும், அதன் சுற்று பகுதியில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் 5 மாகாணங்களாக பிரிக்கப்பட்டும், அதை வெள்ளலூர்நாடு எனவும் இந்த பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. இங்குள்ள வல்லடிகாரர் சாமியும், ஏழைகாத்த அம்மனும் இந்த பகுதி மக்களின் காவல் தெய்வங்களாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருவிழாவாக ஏழைகாத்த அம்மன் கோவில் விழா கொண்டாடப்படுகிறது. வெள்ளலூரில் கோவில் வீடும், 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோவில்பட்டியில் ஏழைகாத்தம்மன் கோவிலும் உள்ளன. திருவிழாவையொட்டி 7 சிறுமிகளை அம்மன் தெய்வங்களாக தேர்ந்தெடுக்கும் முதல் நாள் விழா நேற்று வெள்ளலூரில் உள்ள ஏழைகாத்தம்மன் கோவில்மேலும் படிக்க…


ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அடக்குமுறை: ஐ.நா. சபை கூட்டத்தை தவிர்க்க ஆங் சான் சூகி முடிவு!

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் அடக்குமுறை தொடர்பாக கேள்விகள் எழும் என்பதால் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தை தவிர்க்க ஆங் சான் சூகி தீர்மானித்துள்ளார். மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மியான்மர் அரசியல் சட்டப்படி வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தவரோ, அவரின் குழந்தைகளோ நாட்டின் உயரிய பதவியை வகிக்கமுடியாது. இதன் அடிப்படையில், ஜனநாயகத்துக்கான தேசிய கட்சியின் தலைவரான ஆங் சான் சூகி, இங்கிலாந்து நாட்டுக்காரரை திருமணம் செய்ததால் அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, அவர் தனது ஆதரவாளர்களும்மேலும் படிக்க…


இந்தியாவில் ராகுல்காந்தி பேசுவதை யாரும் கவனிப்பதில்லை – அமித் ஷா கடும் தாக்குதல்

இந்தியாவில் ராகுல்காந்தி பேசுவதை யாரும் கவனிக்காததால் அவர் அமெரிக்காவிற்கு சென்று தனது கருத்துகளை தெரிவிப்பதாக அமித் ஷா தாக்கி பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கலிபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழக மாணவர்களிடையே நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் மோடியின் ஆட்சிமுறை குறித்து தாக்கி பேசினார். இந்திய அரசியல் கட்சிகளில் நிலவிவரும் வாரிசு அரசியல் பற்றியும் அவர் விளக்கமாக பேசினார். ராகுலின் பேச்சுக்கு பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- நாட்டில் உள்ள பல தலைவர்கள் பேசுவதை இங்கே யாரும் கவனிப்பதில்லை. அதனால், சமீபகாலமாக அவர்கள் அமெரிக்காவிற்கு சென்று உரையாற்றுகின்றனர். பா.ஜ.க. அரசானது நாட்டில் வாரிசு அரசியல் மற்றும் இன அரசியலுக்கு முடிவு கட்டியுள்ளது. நாங்கள் புதிய அரசியல் முறையை செயல்படுத்தி வருகிறோம் என்றுமேலும் படிக்க…


ஜப்பான் பிரதமர் அபே இன்று குஜராத் வருகை: மோடியுடன் நாளை புல்லட் ரெயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே இன்று குஜராத் வருகிறார். நாளை ஆமதாபாத்தில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமரும் மும்பை- ஆமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரெயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள். ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே குஜராத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அவர் குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையம் வந்து இறங்குகிறார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டு ஜப்பான் பிரதமரை வரவேற்கிறார்கள். ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேராக மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சாலை மார்க்கத்தில் காரில் செல்கிறார். அவருடன் பிரதமர் மோடியும் செல்கிறார். காந்தி ஆசிரமத்தை ஜப்பான் பிரதமர் சுற்றிப் பார்க்கிறார். ஜப்பான் பிரதமர் வருகையையொட்டி டுவிட்டரில் அவரை வரவேற்று அந்நாட்டு மொழியில்மேலும் படிக்க…


இந்திய பாதிரியார் விடுதலை: ஒமன் மன்னருக்கு நன்றி தெரிவித்த போப் ஆண்டவர்

இந்திய பாதிரியார் தாமஸ் உலுன்நளில் விடுதலை ஆக முயற்சி மேற்கொண்ட ஒமன் நாட்டு மன்னருக்கு போப் ஆண்டவர் நன்றி தெரிவித்துள்ளார். ஏமனில் இருந்து ஒமான் நாட்டு விமான நிலையத்தில் வந்து இறங்கிய பாதிரியார் தாமஸ் உலுன்நளில் திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் தாமஸ் உலுன்நளில். இவர், ஒமன் நாட்டில் அன்னை தெரசா ஆதரவற்றோர் இல்லத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த இல்லத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை சுட்டுக் கொன்றனர். பின்னர் அந்த இல்லத்தில் இருந்த பாதிரியார் தாமஸ் உலுன்நளிலை கடத்திச் சென்றனர். அதன் பிறகு அவர், என்னவானார்? என்பது தெரியாமல் இருந்தது. சில மாதங்களுக்கு பிறகு தாமஸ் உழுநாளில் தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டனர். அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கத்தோலிக்க அமைப்புகள் மத்திய அரசிடம் கோரிக்கைமேலும் படிக்க…


எதிர்வரும் 20 வரை விடுமுறைகள் இரத்து : அரசு அதிரடி

எதிர்வரும் 20 ஆம் திகதிவரை  மின்சார சபையின் அனைத்து ஊழியர்களுக்குமாக விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. பிர­தான மூன்று கோரிக்­கை­களை முன்­வைத்து இலங்கை மின்­சா­ர­சபை ஊழி­யர்கள் இன்று நண்­பகல் 12 மணி முதல் 48 மணித்­தி­யால பணிப் பகிஷ்­க­ரிப்பு போராட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக இலங்கை மின்­சார சேவை சங்­கத்தின் செய­லாளர் ரஞ்சன் ஜயலால் தெரி­வித்திருந்தார். இதேவேளை,  பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு மேற்­கொள்­ளப்­படும் 48 மணி நேரத்­துக்குள் தமது  கோரிக்­கை­க­ளுக்கு அர­சாங்கம் முறை­யான தீர்­வொன்றை பெற்­றுத்­த­ரா­விட்டால் எதிர்­வரும் 15ஆம் திகதி நண்­பகல் 12 மணி முதல் தொடர் பணிப்பகிஷ்­க­ரிப்பு போராட்­டத்­துக்கு செல்வோம் என அவர் மேலும் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே  எதிர்வரும் 20 ஆம் திகதிவரை  மின்சார சபையின் அனைத்து ஊழியர்களுக்குமான விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


விப­சார நட­வ­டிக்­கையில் ஈடு­பட்ட அறுவர் கைது!

அநு­ரா­த­புரம் நகரில் விப­சார நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டு­வந்த ஆறு பெண்­களை கைதுசெய்­துள்­ள­தாக அநு­ரா­த­புரம் பொலிஸார் தெரி­வித்­தனர். அநு­ரா­த­புரம் நகரில் பொது­மக்­க­ளுக்கும் வியா­பா­ரி­க­ளுக்கும்  அரு­வ­ருக்­கத்­தக்க விதத்தில் நட­மா­டித்­தி­ரியும் பெண்கள் தொடர்பில் அநு­ரா­த­புரம் பொலிஸ் நிலை­யத்­திற்கு கிடைக்­கப்­பெற்ற முறைப்­பாட்டை அடுத்து இவர்கள் ஆறு பேரும் 11 ஆம் திகதி  மாலை கைது செய்­யப்­பட்­டனர். கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்கள் அநு­ரா­த­புரம், மது­கம, தம்­புள்ள, புத்­தளம் மற்றும் நொச்­சி­யா­கம ஆகிய பகு­தி­களைச் சேர்ந்தவர்கள் என ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் இருந்து தெரியவந்­துள்­ளது. சம்­பவம் தொடர்­பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்னெடுத்துள்ளார்.


பந்­து­ல­விடம் மோசடி தடுப்புப் பிரிவு விசா­ரணை!

வெற்றி இலக்கம் அற்ற, சீட்­டி­ழுப்பு தினம் ஒன்று இல்­லாத கொவி­செத லொத்தர் சீட்டு சந்­தையில் உள்­ள­தாக குற்றம் சுமத்தி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன வெளி­யிட்ட கருத்து தொடர்பில் நேற்று கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு விசேட விசா­ரணை ஒன்றினை நடத்­தி­யது. நேற்று பிற்­பகல் மூன்று மணி முதல் ஐந்து மணி வரை கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு பந்­துல குண­வர்­தன எம்.பி.யிடம் இரு மணி நேரம் விசா­ரணை செய்து வாக்குமூலம் ஒன்­றினை பதிவு செய்­து­கொண்­டது. பந்­துல குண­வர்­த­னவின் நுகே­கொடை இல்­லத்­துக்கு நேற்று சென்ற மோசடி தடுப்புப் பிரிவின் 6 ஆம் இலக்க விசா­ரணை அறை விசா­ர­ணை­யா­ளர்கள் இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வாக்குமூலத்­தினை பதிவு செய்­து­கொண்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். கடந்த ஜூலை மாதம் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு ஒன்றின் போது, மோச­டி­யான லொத்தர் சீட்டு என குறிப்­பிட்டு 10மேலும் படிக்க…


காணாமல்போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை அமைக்கும் வர்த்­த­மா­னி அறிவித்தலில் ஜனா­தி­பதி

காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்­வ­தற்கான அலு­வ­ல­கத்தை செயற்­ப­டுத்­து­வ­தற்­கான வர்த்த­மானி அறி­வித்தலில் ஜனா­தி­ப­தி­யினால் நேற்று கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக விசேட அலு­வ­ல­கத்தை அமைக்கும் நட­வ­டிக்கை இடம்­பெ­ற­வுள்­ளது. இது­கு­றித்து தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவ­ஞா­ன­சோதி விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட் டுள்­ள­தா­வது, 2016ஆம் ஆண்டு 14ஆம் இலக்­க­கா­ணாமல் போன­ ஆட் கள் பற்­றி­ய­ அ­லு­வ­லகம் ஸ்தாபித்­தலும்,நிர்­வ­கித்­தலும் தொடர்­பா­ன­ சட்­டமும் அது­ தொ­டர்­பான 2017 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்­கத்­தி­ருத்­தச்­சட்­டமும் உள்­ள­டங்­க­லா­ன­ கா­ணாமல் போன­ ஆட்கள் பற்­றி­ய­ அ­லு­வ­லகம் தேசி­ய­ஒ­ரு­மைப்­பா­டு ­மற்றும் நல்­லி­ணக்­க­ அ­மைச்சர் என்­ற ­வ­கையில் ஜனா­தி­பதி­ மைத்­தி­ரி­பா­ல ­சி­றி­சே­ன­வினால் நேற்று 12ஆம் திகதி,செப்­டெம்பர் மாதம் 15ஆம் திக­தி­ ந­டை­மு­றைக்­கு­ வ­ரும்­வ­கையில் இலங்கை ஜன­நா­ய­க­ சோ­ச­லி­ச­ கு­டி­ய­ரசின் வர்த்­த­மா­னியில் இடம் பெ­று­வ­தற்­கா­க­ கைச்­சாத்­தி­டப்­பட்­டது. இத­ன­டிப்­ப­டையில் காணாமல் போனோ­ருக்­கா­ன­ அ­லு­வ­லகம் ஸ்தாபிக்­கப்­பட்டு ­அ­த­னு­டைய­ க­ட­மைகள், அதிகாரங்கள், தொழிற்பாடுகள் நடைமுறைப்படுத்து வதற்கும்மேலும் படிக்க…


இலங்­கையில் போர்க்­குற்றம் : மீண்டும் நட­வ­டிக்கை எடுக்கும் அமெ­ரிக்கா

இலங்­கையில் இடம்­பெற்ற போர் குற்­றங்கள் தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்ள காத்­தி­ர­மான வழி­முறை அவ­சியம் என அமெ­ரிக்கா மீண்டும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. 2018 ஆம் ஆண்டு தெற்­கா­சி­யா­வுக்­காக செல­வி­டப்­படும் நிதி தொடர்பில் நடை­பெற்ற நிகழ்வில் இது குறித்து தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்கள் தொடர்பான அமெ­ரிக்க உதவி இரா­ஜாங்க செய­லாளர் எலிஸ் வெல்ஸ் இதனை தெரி­வித்­துள்ளார். போரில் பாதிக்­கப்­பட்­ட­வர்க­ளுக்கு நீதியை நிலைநாட்­டு­வது தொடா்பில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் இலங்கை அர­சாங்கம் உறு­தி­மொழி வழங்­கி­யி­ருந்­தது. அதனை நிறை­வேற்­று­வது தொடர்பில் இலங்­கை­யுடன் இணைந்து அமெ­ரிக்கா செயற்­ப­டு­வ­தாக அவர் தெரி­வித்­துள்ளார். இலங்கை தொடர்பான திட்­ட­வட்­ட­மான நட­வ­டிக்கை பட்­டியல் ஒன்­றையும் சர்­வ­தேச இராஜ­தந்­தி­ரிகள் முன்­னி­லையில் அவரால் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­க­மைய மாகாண சபை­க­ளுக்கு அதிக நிர்­வாக அதி­கா­ரங்­களை வழங்கும் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தச்­சட்டம், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்கு பதி­லாக சர்வதேச தரத்­திற்கு பொருந்தும் மற்­றொரு சட்டம்,மேலும் படிக்க…


இர­ணை­தீவு மக்­களின் காணி­களை அள­விட 15 நாட்கள் தேவை.!

இர­ணை­தீவில் மக்கள் குடி­யி­ருந்த பகு­தியை நில அள­வீடு செய்­வ­தற்­காக பூந­கரி பிர­தேச செயலர் அடங்­கிய குழு நேற்று காலை 9 மணி­ய­ளவில் இர­ணை­மா­தா ­ந­கரில் இருந்து  இர­ணைத்­தீ­வுக்கு சென்று மீண்டும் பிர­தேச செய­ல­க த்தை இன்று மாலை திரும்­பிய பின் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே  இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், இர­ணை­தீவு பூர்­வீக காணி­களை அடை­யாளம் காணும் முக­மாக பிர­தேச செய­ல­கத்தில் இருந்து பிர­தேச செய­லா­ள­ரோடு நில­அ­ளவை திணைக்­க­ளத்தை சேர்ந்த உத்­தி­யோ­கத்­தர்­க­ளோடு கள­வி­ஜயம் இடம்­பெற்­றி­ருந்­தது. இந்த அள­வீட்டு பணி­க­ளுக்­காக  2017 ஆகஸ்ட் மாதம் 31ஆம்  திகதி பாது­காப்பு இரா­ஜாங்க அ­மைச்சர் உட­னான கலந்­து­ரை­யா­ட லில் எடுக்­கப்­பட்ட  முடி­விற்கு அமை­வாக  பூர்­வீக நிலங்­களை எல்­லைப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் நில அள­வீட்டுப் பணி­களை மேற்­கொள்­வ­தற்­கான ஆரம்ப கட்ட நட­வ­டிக்­கை­யாக இக் குழு சென்­றி­ருந்­தது அப்­பி­ர­தே­சத்தில்  பல இடங்­களில் உள்ள எல்லைக்மேலும் படிக்க…


சிறுமி மீது பாலியல் வன்­பு­ணர்வு செய்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதோ.!

12 வயது சிறுமி மீது பாலியல் வன்­பு­ணர்வு புரிந்­த­வ­ருக்கு 15 வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனையை வவு­னியா மேல் நீதி­மன்றம் வழங்­கி­யுள்­ளது. சம்­ப­வத்தின் போது 12 வயது சிறுமி ஒரு­வரை பாலியல் வன்­பு­ணர்வு புரிந்த குற்­றத்­திற்­காக 53 வய­து­டைய புதுக்­கு­டி­யி­ருப்பு பகு­தியை சேர்ந்த உற­வினர் ஒரு­வ­ருக்கு 15 வருட கடூ­ழிய சிறைத்­தண்­ட­னை வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­திரன் சசி­ ம­கேந்­திரனினால் நேற்று முன்தினம் வழங்­கப்­பட்­டது. கடந்த 09.09.2012 புதுக்­கு­டி­யி­ருப்பு 02ம் வட்­டாரம் கோம்­பாவில் பகு­தியில் தனது மனை­வியின் சகோ­த­ரியின் மகளின் மக­ளான 12 வய­து­டைய சிறுமி ஒரு­வரை சந்­தி­யாப்­பிள்ளை மார்க் 57வய­து­டைய உற­வு­மு­றை­யா­னவர் பாலியல் வன்­பு­ணர்வுக் குற்றம் புரிந்­துள்ளார். இத­னை­ய­டுத்து சிறு­மியின் தாயார் மேற்­கொண்ட முறைப்­பாட்­டினை அடுத்து குறித்த நபரை கைது செய்த புதுக்­கு­டி­யி­ருப்பு பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பின்னர் முல்­லைத்­தீவு நீதிவான் நீதி­மன்­றத்தில் முற்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். வழக்குமேலும் படிக்க…


கிழக்கு மாகாண அபிவிருத்தியில் தமிழர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர் – மனோகணேசனின் குற்றச்சாட்டை நிராகரித்தார் நசீர் அகமட்!

கிழக்கு மாகாணத்தில் தமிழ் – முஸ்லிம் உறவு சீரில்லையெனவும், அங்கு தமிழ் மக்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படுகின்றனர் எனவும் இது தொடர்பாக பொறுப்பு வாய்ந்தவர்கள் கவனத்தில் எடுக்கவேண்டுமெனவும் அண்மையில் கிழக்குமாகாணத்துக்கு பயணம்மேற்கொண்டபின்னர் அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியிருந்தார். அமைச்சர் மனோகணேசனின் குற்றச்சாட்டை  கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் நிராகரித்துள்ளார். அத்துடன், அமைச்சர் மனோகணேசன் தான் சுமத்திய குற்றச்சாட்டை  நிரூபிக்கமுடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். கிழக்கு மாகாண அபிவிருத்தியில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் எனக் கூறுபவர்கள் இனவாதத்தைத் தூண்டி அரசியல் செய்யும் கலாச்சாரத்திலிருந்து இன்னும் விடுபடவில்லையெனக் குற்றஞ்சாட்டினார். கிழக்கு மாகாண முதலமைச்சரின் இக்குற்றச்சாட்டுக்கு பதில் சொல்வதற்கு தனக்கு நேரமில்லையெனவும் பொறுப்பான கிழக்கு மாகாண மக்களைப் பதில் கூறுமாறு அமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.


தினக்குரல், வலம்புரி பத்திரிகைகள் உண்மையை வெளியிடுவதில்லை – எம்.ஏ.சுமந்திரன்! (காணொளி)

தினக்குரல் மற்றும் வலம்புரி தமிழ் நாளிதழ்கள் உண்மைக்குப் புறம்பாக செய்திகளை வெளியிடுவதால் அவற்றைத் தான் வாசிப்பதில்லையெனவும், உண்மையான செய்திகளை வெளியிடும் நாளிதழ்களையே தான் வாசிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் குறித்த நாளிதழ்களில் நீதியமைச்சில் எம்.ஏ.சுமந்திரன் தலையீடு செய்வதாக முன்னாள் நீதியமைச்சர் குற்றம் சாட்டியதாக, நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரால் இக்கருத்துத் தொடர்பாக வினவப்பட்டது. இதற்குப் பதிலளிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தான் நீதி அமைச்சில் தலையிடமுடியாது எனவும், அவ்வாறான செய்தியை தான் இதுவரையும் கேள்விப்படவில்லையெனவும் தெரிவித்திருந்தார். இதன்போது இவ்வாறு பத்திரிகைகளில் செய்தி வெளியானதே எனக் கேள்வி எழுப்பியபோது தான் உண்மைக்குப்புறம்பாக செய்தி வெளியிடும் தினக்குரல், வலம்புரிப் பத்திரிகைகளை வாசிப்பதில்லையெனத் தெரிவித்தார்.


எம்.ஜி.ஆர் , எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரின் நூற்றாண்டு விழா: உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு!

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த 100 மற்றும் 5 ரூபாய் நாணயங்களை மத்திய அரசு வெளியிடுகிறது. மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களது உருவம் பொறித்த தபால்தலைகள் மற்றும் நாணயங்கள் வெளியிடப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். மற்றும் இசை உலகில் கொடிகட்டிப் பறந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் அவர்களது உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வெளியிடப்பட உள்ளன. இதுபற்றிய அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:- இந்த புதிய நாணயங்கள் 100 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 5 ரூபாய் மதிப்புகளில் வெளியாகிறது. எம்.ஜி.ஆர். உருவம் பொறித்து 100 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படுகிறது. இந்த நாணயங்களில்மேலும் படிக்க…


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு விருது!

இந்திய வம்சாளியைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்க உள்ளதாக அமெரிக்காவின் மார்கோனி சொசைட்டி அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ரேடியோவை கண்டுபிடித்த விஞ்ஞானியான மார்கோனியின் நினைவாக ஆண்டுதோறும் பல ஆராய்ச்சியாளர்களுக்கு விருது வழங்கப்படும். அதே போன்று இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த அனந்த தீர்த்த சுரேஷ் என்பவர் கூகுள் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக நியூயார்க்கில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பால் பரன் இளம் அறிஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாடர்ன் கம்யூனிகேஷன்ஸ் துறையில் இந்திய வம்சாவளியான தாமஸ் காய்லத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. மேலும் அருண் நேந்திரவல்லி என்பவருக்கு டிஜிட்டல் வீடியோ டெக்னாலஜி துறையில் மார்கோனி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


விதி எண் 19-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் என்ன?

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மிக முக்கிய தீர்மானம் அதிமுகவில் இனி பொதுச் செயலாளர் பதவியே கிடையாது. அனைத்து அதிகாரங்களும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதே. இதுகுறித்த ஓர் அரசியல் பார்வை. என்ன வகையான அதிகாரங்கள் இருவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை தீர்மானம் 12 கூறுகிறது. 46 பக்கங்கள் கொண்ட தீர்மானம் முழு விபரம்: கட்சி விதி 5 முதல் 45 வரை பொதுச் செயலாளருக்கு என வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் இனி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிக்கு மாற்றி வழங்கப்படுகிறது. சட்டப்பிரிவு விதி 5 பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்ட அதிகாரம் இனி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மாற்றப்படுகிறது. உறுப்பினர்கள் சேர்க்கும் உரிமை இறுதியாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் அதிகாரத்தில் இருக்கும். விதி -19 தலைமைக் கழகப் பொதுக்குழுமேலும் படிக்க…


6 மாவட்­டங்­களில் இன்று பணி­ப்ப­கிஷ்­க­ரிப்பு.!

மாலபே தனியார் மருத்­து­வக்­கல்­லூரி தொடர்பில் எழுந்­துள்ள சர்ச்­சை­களை தீர்ப்­ப­தற்­காக ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட குழுவின் அறிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்து இன்று இரண்டாம் நாளாக பல பகு­தி­களில்  அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் பணிப்­ப­கிஷ்­க­ரிப்­பினை முன்­னெ­டுக்­கவுள்ளது. நேற்று முன்­தினம் முதல் முன்­னெ­டுத்­து­வரும் தொடர்ச்­சி­யான பணி­ப்ப­கிஷ்­க­ரிப்பின் இரண்டாம் நாளாக இன்­றைய தினத்தில் வவு­னியா, மாத்­தறை, மாத்­தளை, அம்­பாறை, பதுளை மற்றும் மொன­ரா­கலை ஆகிய மாவட்­டங்­களில் ஒருநாள் அடை­யாள வேலை நிறுத்­தத்­தினை மேற்­கொள்­ள­வு­ள்ளதா­கவும் அச்­சங்­கத்தின் செய­லாளர் வைத்­தியர் நவீந்த டி சொய்ஷா தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், சைட்டம் மாலபே தனியார் மருத்­து­வக்­கல்­லூரி விவ­காரம் குறித்தும் அதில் காணப்­ப­டு­கின்ற குறை­பா­டுகள் தொடர்­பிலும் சகல மட்­டத்­திற்கும் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ளோம். இது­வ­ரையில் குறித்த பிரச்­சி­னைக்­கான தீர்­வினை அர­சாங்கம் முன்­வைக்­க­வில்லை. இதில் எழுந்­துள்ள நடை­முறை சிக்கல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்­கை­யொன்­றினை தயா­ரிப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால்மேலும் படிக்க…


இன்று முதல் மின்சார சபை ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தம்

பிர­தான மூன்று கோரிக்­கை­களை முன்­வைத்து இலங்கை மின்­சா­ர­சபை ஊழி­யர்கள் இன்று நண்­பகல் 12மணி முதல் 48 மணித்­தி­யால பணிப் பகிஷ்­க­ரிப்பு போராட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக இலங்கை மின்­சார சேவை சங்­கத்தின் செய­லாளர் ரஞ்சன் ஜயலால் தெரி­வித்தார். கொழும்பில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், நுகர்­வோரின் மின் கட்­டண பட்­டி­யலை சரிப்­ப­டுத்­த ­வேண்டும், கொடுப்­ப­ன­வுகள் செலுத்­தப்­ப­டாமல் இருக்கும் ஊழியர் சேம­லாப நிதி­யத்தில் 2ஆயிரம் மில்­லியன் ரூபா வைப்­பி­லி­ட­வேண்டும் மற்றும் சம்­பள முரண்­பா­டு­களை தீர்க்­க­வேண்டும் என்ற மூன்று கோரிக்­கை­களை முன்­வைத்து இலங்கை மின்­சா­ர­சபை ஊழி­யர்கள் இன்று நண்­பகல் 12மணி முதல் நாட­ளா­விய ரீதியில் 48 மணித்­தி­யாலம் பணிப் பகிஷ்­க­ரிப்பு போராட்­டத்தில் ஈடு­பட தீர்­மா­னித்­துள்­ளனர். 2014ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் சட்­ட­வி­ரோதமான முறையில் மின்­சா­ர­சபை ஊழி­யர்­க­ளுக்கு 70வீதம்மேலும் படிக்க…


இலங்கை வரு­கிறார் ஐ.நா.விசேட நிபுணர்

உண்மை, நீதி, நட்­ட­ஈடு மற்றும் மீள் நிக­ழாமை தொடர்பான ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கிரிப் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் இலங்­கைக்கு விஜயம் செய்து பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை மதிப்­பீடு செய்­ய­வுள்ளார். நேற்று ஜெனி­வாவில் நடை­பெற்ற ஐ.நா.மனித உரிமைப் பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் அமர்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஐ.நா. விசேட நிபுணர் பப்லோ டி கிரிப் ஒக்­டோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்­ள­தாக அறி­வித்தார். இலங்கை அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரிலே ஐ.நா.விசேட நிபுணர் இலங்­கைக்கு வருகை தர­வுள்ளார். அவரின் இலங்கை தொடர்­பான மதீப்­பீட்டு அறிக்கை 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்ள மனித உரிமைப் பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படும்.


உதவுவோமா – 12/09/2017

பேராசிரியர் சச்சிதானந்தம் அவர்கள் இணைந்து கொண்டார்


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !