Thursday, July 27th, 2017

 

நாளை பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைதிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நாட்டில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர், பழைய மாணவர் ஆகியோருடன் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தில் முப்படையினரும் ஈடுபட்வுள்ளனர். குறித்த வேலைத்திட்டமானது 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் 29 ஆம் திகதி சனிக்கிழமையும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 திங்களிலும் குறித்த போராட்டத்தை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு உத்தரவுபிறப்பித்துள்ளார். நாளை வெள்ளிக்கிழமை பாடசாலையில் வழமையான கல்விச்செயற்பாடுகளுக்குப் பதிலாக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர், பழைய மாணவர் மற்றும்  பாடசாலைகளுக்கு அருகாமையிலுள்ளோர் ஒன்றிணைந்து பாடசாலையையும் அதனை அண்டியுள்ள பகுதிகளையும் துப்புரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவர். இதுவேளை, குறித்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு முப்படையினர், காவற்துறையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையணியினர் இணைந்து கொள்ளவுள்ளவுள்ளதுடன் சுகாதார அமைச்சும்  இத்மேலும் படிக்க…


பெண் சுற்றுலாப் பயணிகளே அதிகளவில் இலங்கை வருகை

கடந்த 2016 ஆம் ஆண்டு 2.05 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இவர்களுள் 54.7 சதவீதமானோர் அல்லது 1.12 மில்லியன் பேர் பெண் சுற்றுலாப் பயணிகள் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, கடந்த வருடத்திலும் பார்க்க, கூடுதலான பெண் சுற்றுலாப்பயணிகள் இவ்வருடம் இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாக விஜயம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


‘மக்கள் குரல்’ தமிழ் பத்திரிகை ஆரம்பிக்கிறது ஐக்கியதேசியக் கட்சி!

மக்கள் குரல் என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் பத்திரிகை ஒன்றை வெளியிடவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் வாராந்தம் வெளிவரவுள்ள இப்பத்திரிகை சில தினங்களின் பின்னர் தினப் பத்திரிகையாக வெளிவரவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கி ஆளுனராக இருந்த அர்ஜூன மகேந்திரனின் குடும்பத்தினரே பத்திரிகையின் நேரடி உரிமையாளர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அலோசியஸ் மகேந்திரனை உரிமையாளராகவும், நிர்வாக இயக்குனராகவும் கொண்டிருக்கும். ஆரம்பத்தில் வாரந்தம் வெளியாகும். விரைவில் நாளாந்தம் வெளியாகும். வாரப்பத்திரிகையின் விலை 50 ரூபாவாக விற்கலாமென திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வடகிழக்கில் பணியாற்றும் ஊடகவியலாளர்களை பணிக்கமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரியவருகின்றது. தமிழ் ஊடக நிறுவனங்களில் வழங்கப்படும் ஊதியத்தை விட இதில் அதிகளவு ஊதியம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


நல்லூர் சூட்டுச் சம்பவம் – சரணடைந்தவர் தனிக் கூண்டில் அடைக்கப்பட்டார்!

கடந்த சனி இடம்பெற்ற நல்லூர் சூட்டுச் சம்பவத்துடன்தொடர்புடைய சூத்திரதாரி யாழ்ப்பாணச் சிறையில் தனி அறையில்அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை நல்லூர் பின்வீதியில் வைத்து யாழ். மேல் நீதிபதி இளஞ்செழியன் மீது தாக்குதல் மேற்கொண்ட துப்பாக்கிதாரி நேற்று முன்தினம் யாழ். காவல்துறையில் சரணடைந்தார். சரணடைந்த சந்தேக நபரை காவல்துறையினர் யாழ். நீதவான் சதீஸ்கரனின் இல்லத்தில் முன்னிலைப்படுத்தியபோது அவரை எதிர்வரும் 8ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு பணிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த நபர் யாழ். சிறைச்சாலையில் தனிக் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை அவரது இரண்டாவது மனைவி சென்று பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்: ஆர்.கே.செல்வமணி பேட்டி

பெப்சி’ தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது இல்லை, என்று தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்து இருப்பது கண்டிக்கத்தக்கது. ‘நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்’, என்று ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ் பட உலகம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. தயாரிப்பாளர்கள் லாபம் பெற ‘பெப்சி’ தொழிலாளர்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். தயாரிப்பாளர்கள் எங்கள் எதிரிகள் இல்லை. அவர்களை முதலாளிகளாகவே பார்க்கிறோம். அனைவரும் ஒரே கப்பலில் பயணிக்கிறோம். யார் தவறு செய்தாலும் கப்பல் மூழ்கி விடும் தயாரிப்பு துறையை காப்பாற்றும் பெரும் பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது என்பதை தொழிலாளர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். ‘பெப்சி’ தொழிலாளர்களை படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்த மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ‘பெப்சி’மேலும் படிக்க…


அரசு மீது ஊழல் புகார் கூறியது ஏன்? கமல்ஹாசன் புதிய விளக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலாச்சார சீரழிவு இல்லை என்றும், அரசு மீது ஊழல் புகார் கூறியது ஏன் என்பதற்கும் நடிகர் கமல்ஹாசன் புதிய விளக்கம் அளித்திருக்கிறார்.  தமிழ் திரை உலகில் உச்சநட்சத்திரங்களாக இருக்கும் ரஜினியும், கமலும் தங்களது அரசியல் பிரவேச ஆசையை அடுத்தடுத்து வெளிப்படுத்தியுள்ளனர். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஜெயலலிதா விட்டுச் சென்றிருக்கும் இடத்தை நிரப்பப்போவது யார்? என்கிற கேள்வியும் பலமாகவே எழுந்துள்ளது. அந்த இடத்தை குறிவைத்தே ரஜினி – கமல் இருவரும் காய் நகர்த்த தொடங்கி இருப்பதாகவே அரசியல் நிபுணர்கள் கூறி வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசியலில் சிஸ்டம் சரியில்லை’’ என்று கூறி ரஜினி பரபரப்பு தீயை பற்ற வைத்தார். இதனை தொடர்ந்து தற்போது கமல், தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிமேலும் படிக்க…


கலாம் நினைவுநாள்: ஏழை மாணவர்களின் கல்விக்காக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய விஷால்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவுநாளான இன்று, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியிருக்கிறார்.  இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. கலாமின் நினைவிடம் இருக்கும் பேய்க்கரும்பில் இருக்கும் அப்துல் கலாமின் நினைவிடத்தில் கலாம் அவர்களுக்கு மணிமண்டம் கட்டப்பட்டுள்ளது. அதனை பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரம் சென்று திறந்துவைத்து பார்வையிட்டார். மேலும் வைரமுத்து வரிகளில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள சலாம் சலாம்… கலாம் கலாம்… என்ற பாடலும் இன்று வெளியிடப்பட்டது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். இயக்குநர் வஸந்த் இந்தியா முக்கிய இடங்களில் இந்த பாடலை இயக்கியிருக்கிறார். பல்வேறு பகுதிகளிலும் அப்துல் கலாம் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், தென்னிந்தியாமேலும் படிக்க…


காலே டெஸ்ட்: இலங்கை 154 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்து திணறல்; இந்தியா 600

காலேயில் நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தவான் (190), புஜாரா (144 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. புஜாரா 144 ரன்களுடனும், ரகானே 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் புஜாரா 150 ரன்னைக் கடந்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 153 ரன்களில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில்மேலும் படிக்க…


சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை: ரியல் மாட்ரிட் அணியை 4-1 என வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி

சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பைக்கான கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணியை 4-1 என வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி.  கால்பந்து அணிகளுக்கு இடையிலான முன்னணி லீக் தொடர்கள் இன்னும் ஆரம்பமாகவில்லை. இந்த தொடர்கள் நடைபெறுவதற்கு முன்பாக தற்போது அணிகளுக்கு இடையிலான சர்வதேச சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. நட்பு ரீதியான இந்த தொடரில் இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான ரியல் மாட்ரிட், இங்கிலீஷ் பிரிமீயர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டி அணியை எதிர்கொண்டது. இரு அணி வீரர்களும் சிறப்பான ஆடிய போதிலும் முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளாலும் கோல்கள் அடிக்க முடியவில்லை. ஆனால் 2-வது பாதி நேரத்தில் மாஸ்செஸ்டர் சிட்டி அணி வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் மழை பொழிந்தனர். ஆட்டத்தின்மேலும் படிக்க…


திருநங்கைகளுக்கு இடமில்லை: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகளை இணைக்கும் திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா கொண்டு வந்தார். ஒபாமாவின் இந்த திட்டத்திற்கு பலரும் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தனர். ஆனால், டிரம்ப் பொறுப்பேற்ற பின் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேருவது எதிர்வரும் ஜனவரி 1ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் தனது டுடிவிட்டரில், “என்னுடைய ஜெனரல்கள் மற்றும் இராணுவ நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகு அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணி புரிய அரசு அனுமதிக்காது என்பதை பரிந்துரைக்கிறேன். நம்முடைய ராணுவம் மிகப்பெரிய வெற்றிகளில் கவனம் செலுத்த வேண்டும். திருநங்கைகளால்மேலும் படிக்க…


கண்காட்சியில் ஏற்பட்ட விபரீதம்

அமெரிக்காவில் இடம்பெற்ற கண்காட்சியின் போது ராட்டினத்தின் ஒரு பகுதி திடீரென அறுந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் Ohio மாகாணத்தில் Ohio State Fair என்ற கண்காட்சியின் போதே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. குறித்த கண்காட்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். பல அடி உயரத்தில் பார்வையாளர்களை ஏற்றி கொண்டு சுற்றும் ரங்க ராட்டினம் சவாரியும் இருந்தது. இதில் ராட்டிணத்தில் ஒரு பகுதி திடீரென தனியாக முறிந்து கீழே விழுந்ததில் ராட்டிணத்தில் இருந்த ஒரு தொகுதி மக்கள் கீழே விழுந்தனர். இதில் 18 வயதான இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கீழே விழுந்ததில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 பேரில் உடல் நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.


மாகாணசபை விடயங்களில் மூக்கை நுழைப்பது தேவைதானா?

வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் கூட்டமைப்பின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது. இந்த சந்திப்புக் குறித்தும், அதன் பின்னர் இலங்கை தமிழரசுக் கட்சி வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தி குறித்தும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது கருத்தை தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை. வடமாகாண முதலமைச்சருக்கும் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் திரு. சம்பந்தருக்கும் இடையில் கடந்த 23.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் முழு விபரங்களும் பத்திரிகைகளுக்கு வெளியிடப்படாத நிலையில், வடக்கு மாகாணசபையின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. அது மாத்திரமல்லாமல், வடக்கு மாகாண முதலமைச்சர் முன்னெடுக்க இருந்த விசாரணைகளை நிறுத்தும்படி கூறப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அமைச்சர் டெனீஸ்வரனை மாற்றும்படியான ரெலோவின் கோரிக்கைகளை நிறுத்தும்படியும் இவைமேலும் படிக்க…


அப்துல் கலாம் மணிமண்டபத்தை மோடி திறந்து வைத்தார்!

ராமேஸ்வரம் அருகே முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதில், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 91 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான இன்று ( 27- வியாழக்கிழமை) இந்த மணிமண்டத்தை திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரைக்கு இன்று காலை 10 மணி அளவில் வந்துமேலும் படிக்க…


நல்லூர் தாக்குதல், உயர் நீதிமன்றத்தில் சாட்சியளிக்கத் தயார் – நீதிபதி இளஞ்செழியன்!

கடந்த சனிக்கிழமை என்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்போது அப்பகுதியில் பலர் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்ததில் எந்தவித உண்மையுமில்லையென யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை நீதிபதி இளஞ்செழியன் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் அவரது மெய்ப்பாதுகாவலரான சார்ஜன்ட் ஹேமச்சந்திர உயிரிழந்திருந்தார். நேற்று அவரது இறுதிக் கிரியைகளின் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே நீதிபதி இளஞ்செழியன் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், “இந்த தாக்குதல் சம்பவமானது என்னை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டது. நான் முதலாவது சாட்சி, பொலிஸ் கான்ஸ்டபிள் விமலரத்ன இரண்டாவது சாட்சி. எனது சாரதி மூன்றாவது சாட்சி, தாக்குதல்தாரி தப்பிச் செல்வதற்காகப் பறித்துச் சென்ற மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவர் நான்காவது சாட்சி. என்னுடைய மெய்ப்பாதுகாவலரின் இடுப்பிலிருந்து துப்பாக்கியை தாக்குதல்தாரி எடுத்த போது அதை நான் கண்டேன். உடனடியாகக் காரில் இருந்துமேலும் படிக்க…


யாழ். நீதி மன்றத்திலிருந்து கைதியொருவர் தப்பியோட்டம்!

யாழ். நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட கைதியொருவர் தப்பியோடியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட யாழ்.பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், யாழ். நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, நீதிமன்றிலுள்ள கூண்டில் இடவசதி இல்லாத காரணத்தால் அதற்கருகில் கதிரையொன்றில் அமர்த்தப்பட்டிருந்தார். இதன்போது, நீதிமன்றிற்கு வந்திருந்த பொதுமக்களுக்குள் மறைந்து குறித்த கைதி தப்பியோடியுள்ளார். சந்தேகநபரை தேடும் நடவடிக்கையில் யாழ். காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


செவ்வியின் பாதியில் வெளியேறிய தனுஷ்

நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி -2 திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில், குறித்த படம் தொடர்பான செவ்வியின் பொழுதே பாதியில் வெளியேறியுள்ளார் தனுஷ். குறித்த VIP-2 படத்தின் விளம்பரத்திற்காக ஹைதராபாத்திற்கு சென்றிருந்தார் தனுஷ். அங்கே உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தனுஷிடம்  VIP-2 தொடர்பான செவ்வி ஒன்றினை எடுப்பதாக அழைப்பு விடுத்தனர். இந்த நிலையில் குறித்த செவ்வியின் பொழுது, படம் தொடர்பான கேள்விகளை விடுத்து பாடகி சுசித்ரா வெளியிட்ட தனுஷ் தொடர்பான வீடியோக்கள் தொடர்பில் கேள்விகள் கேட்கப்பட்டது. குறித்த கேள்விகளில் நீங்கள் மன உளைச்சலுக்கு உள்ளானது உண்மையா? உங்கள் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டதா? இவ்வாறான கேள்விகள் கேட்கப்பட்டதால் கோபமடைந்த தனுஷ் குறித்த செவ்வியில் இருந்து இடையில் வெளியேறினார். மேலும் சில மாதங்களுக்கு முன்னர் பாடகி சுசித்ரா பல நடிகர் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்களை பிரசுரித்து விமர்சித்தமையும், ருவிட்டர் பக்கங்களில் இவை வைரலாகமேலும் படிக்க…


ஜெருசலேம் புனித தலத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டது: பலஸ்தீனியர்கள் மகிழ்ச்சி

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் அமையப்பெற்றுள்ள டெம்பல் மௌன்ட் (Temple Mount) என அழைக்கப்படும் புனித தலத்தின் வாயிலில் போடப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பலஸ்தீனியர்கள் அதனை கொண்டாடியுள்ளனர். குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நேற்று (புதன்கிழமை) தளர்த்தப்பட்ட நிலையில், இன்று அதிகாலையிலேயே பலஸ்தீனிய மக்கள் அதனைக் கொண்டாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அல் அக்சா பள்ளிவாசலில் உள்ள பிரதான வாயிற் கதவுகளில் உலோகத்திலான கண்டுபிடிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, குறித்த கண்டுபிடிப்புக் கருவிகளை அகற்றுவது தொடர்பான வாக்கெடுப்பு கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவையில் நடத்தப்பட்டு கண்டுபிடிப்புக் கருவிகளை அகற்றுவதென தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. முஸ்லிம்கள் மற்றும் யூதர்களின் முக்கிய தலமாக டெம்பல் மௌன்ட் புனித தலம் விளங்குளின்றமை குறிப்பிடத்தக்கது.


நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்து அட்டனில் சட்டதரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்தும், உயிரிழந்த மெய்பாதுகாவலருக்கு அனுதாபம் தெரிவித்தும் அட்டன் நீதிமன்ற சட்டதரணிகள் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.   அட்டன் நீதிமன்ற வாளாகத்தில் இவ்வார்ப்பாட்டம் காலை 10.00 மணி முதல் 10.30 மணிவரை நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை யாழ். நல்லூர்  பின் வீதியில்  யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்தும், நீதிமன்ற நீதவான்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும் இவ்வார்ப்பட்டம் சட்டதரணிகளால் முன்னெடுக்கப்பட்டது.   நீதிதுறைக்கு எதிரான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம் என மும்மொழிகளிலும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும்  ஏந்தியிருந்தனா்.   ஆர்ப்பாட்டம் முடிந்த பின் இன்று முழுநாளும் நீதிமன்ற செயற்பாடுகளிலிருந்து விலகியிருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சட்டதரணிகள் தெரிவித்தனர். இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சுமார் 25 சட்டதரணிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.


கேப்பாப்பிலவு காணிகளை விடுவிக்க கால அவகாசம்!

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைக்கு, இன்னும் 10 நாட்களில் உரிய பதிலை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்ற அமைச்சில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, கேப்பாப்பிலவு மக்கள் சார்பில் கலந்துகொண்டிருந்த பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த காணிகளில் நிலைகொண்டுள்ள ராணுவம் அங்கிருந்து செல்ல இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்குமாறும் இச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கோரினார். எனினும், மக்கள் பிரதிநிதிகள் அதனை ஏற்றுக்கொள்ளாத நிலையில், இன்னும் 10 நாட்களில் உரிய பதிலை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். கேப்பாப்பிலவு மக்களின் பூர்வீக காணிகளை அரசாங்கம் விடுவிக்க வேண்டுமென கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு படைகளின் பிரதானி உள்ளிட்டமேலும் படிக்க…


உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரது மனைவிக்கு மீண்டும் பொலிஸ் பதவி!

யாழ். நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோகர் ஜீ.எம்.சரத் ஹேமச்சந்திரவின் மனைவிக்கு பொலிஸ் உப பரிசோதகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சரத் ஹேமச்சந்திரவின் மனைவி, கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாக பொலிஸ் சேவையிலிருந்து விலகியிருந்தார். தற்போது அவரது கணவன் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு பதவி உயர்வுடன் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சரத் ஹேமச்சந்திரவுக்கு கௌரவம் அளிக்கும் நோக்கில் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக, சரத் ஹேமச்சந்திர கடந்த 15 வருட காலமாக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பதவியேற்றார் நிதிஷ்குமார் – பா.ஜ.க.வுடன் கூட்டணி!

பீகார் மாநில முதல்வராக 6 ஆவது தடவையாக நிதிஷ்குமார் சற்றுமுன் பதவியேற்றுக்கொண்டார். மாநில ஆளுநர் கேஷரி நாத் திரிபதி முன்னிலையில், ராஜ்பவனில் இந் நிகழ்வு இடம்பெற்றது. பீகார் மாநிலத்தில் ஆட்சியிலிருந்த ஐக்கிய ஜனதா கட்சி, ராஷ்ரிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியுடன் கைகோர்த்து நிதிஷ்குமார் ஆட்சியமைக்கவுள்ளார். பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார்: பா.ஜ.க. அமோக ஆதரவு பீகார் மாநில முதல்வராக, நிதிஷ்குமார் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மீண்டும் பதவியேற்கவுள்ளார். ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அமோக ஆதரவுடன் அவர் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா கட்சி, ராஷ்ரிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆகியன ஆட்சியில் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக உட்கட்சி பூசல் வெடித்தது. இந்நிலையில்மேலும் படிக்க…


கட்சி, நட்பு, குடும்ப பேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வேன்! -கமல்

கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வேன் என்று தன் மீதான விமர்சனங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி வருகிறார். கமலின் கருத்துக்கு அமைச்சர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதேபோல் பல்வேறு கட்சி தலைவர்களும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். சிலர் விமர்சனங்களுடன் ஆதரவு தெரிவித்தனர். கமலின் பேச்சுக்கு எழுந்த குறிப்பான விமர்சனமாக அதிமுகவுக்கு எதிராக தான் குற்றம்சாட்டி வருகிறார். திமுக ஆட்சியில் ஏன் குறை கூறவில்லை என்பதாகும். திமுகவின் ஊதுகுழலாகவே கமல் பேசுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். இந்நிலையில், கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வேன் என்று தன் மீதான விமர்சனங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், ”என்மேலும் படிக்க…


குஜராத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் பலி!

குஜராத் மாநிலத்தில் மழை வெள்ளத்திற்கு பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு 111 ஆக அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. மராட்டியம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் அதனையொட்டி உள்ள மாநிலங்களில் கனமழை பெய்கிறது. மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக குஜராத் மற்றும் ராஜஸ்தானில் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். குஜராத்தில் பனாஸ்காந்தா, சாபார்காந்தா, ஆனந்த், பதான் மற்றும் வால்சாத் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்புமேலும் படிக்க…


விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிக்கும் – ஐரோப்பிய ஒன்றியம்!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை ஐரோப்பிய நீதிமன்றம் இரத்துச்செய்தாலும், அதன் மீதான தடை தொடரும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. லக்சம்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்புப் பட்டியலில் பட்டியலிட்டதற்கான முக்கிய காரணங்களை நீதிமன்றம் மதிப்பீடு செய்திருக்கவில்லையெனவும், 2011-2015ஆம் ஆண்டுக் காலப்பகுதியை உள்ளடக்கியே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதற்குப் பின்னர் விடுதலைப் புலிகளை தீவிரவாத அமைப்பாக பேரவையில் தீர்மானம் எடுக்கப்பட்ட 2015-2017காலப்பகுதியை இந்த தீர்ப்பு உள்ளடக்கவில்லை. இதன் மூலம், விடுதலைப் புலிகள் தொடர்ந்தும், ஐரோப்பிய ஒன்றியத்தினால் தீவிரவாத அமைப்பாகவே பட்டியலிடப்பட்டிருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.


ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2017 – தனுசு முதல் மீனம் வரை

தனுசு: தனுசு ராசிநண்பர்களுக்கு இது வரை 9 ல் இருந்த ராகு பகவான் ஆயுள் வாழ்நாள் சிந்தனை புதிய ஆய்வாற்றல் துக்கம் மர்மம் ஆகிய காரக ஸ்தானத்திற்கு மாறுகிறார். பாவ கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்க்கு வரும் பொழுது அந்த காரகபலனை காரகநாஸ்தி செய்து கெடுதலை கெடுத்து நன்மையை செய்வார்கள் என்ற அடிப்படையிலும் உங்கள் ராசிநாதன் குருபகவான் ஆவதாலும் தங்கள் மதிப்பு மரியாதையை யாராலும் கெடுக்க முடியாது. தங்கள் முயற்சிகள் வெற்றியைத் தரும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மாறும். தோல்விகள் காரியத் தடைகள் அகலும். தொழில் உத்தியோகத்தில் டென்சனை கொடுத்தாலும் பெரிய பாதிப்பு வராது. குடும்பத்தில் அவ்வப்பொழது பிரச்சனைகள் வந்தாலும் உடனே சரியாகி விடும்.. கடன்கள் அடைபடும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட புத்திரபாக்கியம் திருமணம் தடைகள் நீங்கி சுபகாரியம் நடக்கும். விரய சனி ஓருமேலும் படிக்க…


புற்று நோயை மஞ்சள் குணப்படுத்தும்: புதிய ஆய்வில் தகவல்

நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளது என அமெரிக்க வாழ் இந்திய நிபுணர் தம்மாரா கண்டுபிடித்துள்ளார். நியூரோ பிளாஸ்டோமா எனப்படும் நரம்புக் கட்டி நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இது படிப்படியாக வளர்ந்து சிறுநீரகங்கள் அருகே அட்ரீனல் சுரப்பிகளில் புற்று நோயாக மாறுகிறது. இதை குணப்படுத்துவது மிகவும் சிரமம் என கருதப்பட்டது. இந்த நிலையில் நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளது என அமெரிக்க வாழ் இந்திய நிபுணர் தம்மாரா கண்டு பிடித்துள்ளார். இவர் வெஸ்ட் மோர் லேண்டில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறார். மஞ்சளில் உள்ள மிக சிறிய ரசாயண பொருட்கள் மருந்தாகி நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். எனவே புற்று நோய் மருந்துகளில் மஞ்சளை சேர்க்கலாம் என பரிந்துரைத்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !