Thursday, February 2nd, 2017

 

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்: தென்னாபிரிக்கா வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியை தென்னாபிரிக்கா 121 ஓட்டங்களால் வெற்றி கொண்டது. இந்த வெற்றியின் மூலம் 05 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது. டேர்பன் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 71 ஓட்டங்களுக்கு தென்னாபிரிக்காவின் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்திய இலங்கை அணி ஆரம்பத்தில் ஆதிக்கத்துடன் விளையாடியது. எனினும், இலங்கை அணியின் அழுத்தங்களை லாவகமாக எதிர்கொண்ட தென்னாபிரிக்காவின் டேவிட் மில்லர் மற்றும் அணித்தலைவர் பெப் டு பிளசிஸ் ஆகியோர் சதம் கடந்து வலுவான நிலைக்கு அணியை இட்டுச்சென்றனர். இதற்கமைய, தென்னாபிரிக்கா 50 ஓவர்களில் 06 விக்கெட்டுக்களை இழந்து இலங்கை அணியின் வெற்றி இலக்கினை 307 ஓட்டங்களாக நிர்ணயித்தது. பதிலளித்தாடிய இலங்கை அணி ஆரம்பம்மேலும் படிக்க…


ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் கொலை வழக்கு விசாரிக்கப்படவுள்ளது

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் கொலை வழக்கை எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கம்பஹா மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தனிப்பட்ட காரணத்திற்காக இந்த வழக்கு விசாரணையில் இருந்து தாம் விலகிக்கொள்வதாக நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார். இதன் பிரகாரம், இந்த வழக்கை விசாரிப்பதற்காக கம்பஹா மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஹேமா சுவர்ணாதிபதி நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டிருந்தார். 2008 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வெலிவேரிய பகுதியிலுள்ள மைதானமொன்றிற்கு அருகில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே உள்ளிட்ட 14 பேர் கொலை செய்யப்பட்டதுடன் மேலும் சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கம்பஹா முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லக்‌ஷ்மன் குரே மற்றும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள்மேலும் படிக்க…


முகநூல் நிறுவனத்திற்கு 500 மில்லியன் டொலர்கள் அபராதம்

சட்டத்திற்குப் புறம்பாக வேறொரு நிறுவனத்தின் மெய் நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் சுமார் 500 மில்லியன் டொலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் வாங்கிய ஆக்குலஸ் என்ற நிறுவனமானது, ஸெனிமேக்ஸ் என்ற வீடியோ கேம் தயாரிக்கும் நிறுவனத்தின் சொந்த மெய் நிகர் ஹெட்செட்களை வெளியிடுவதற்கு வைத்திருந்த கணணி குறியீடுகளைப் பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் ஆக்குலஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கானது ஃபேஸ்புக் நிறுவனத்தின் சமீபத்திய வரவு செலவு முடிவுகளின் முக்கியத்துவத்தைக் குறைத்துள்ளது.


வித்தியா கொலை வழக்கு: சந்தேகநபரின் பிணை மனு நிராகரிப்பு

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரின் பிணை மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. வித்தியாவின் கொலை வழக்கின் பத்தாம் இலக்க சந்தேகநபரின் பிணை மனு மீதான விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. கொலை நடைபெற்ற ஏழு மாதங்களின் பின்னரே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், அவருக்கும் கொலைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இதன்போது நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். எனினும், வித்தியாவின் கொலை தொடர்பான விசாரணைகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்து பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இந்த பிணை மனுவை இன்று நிராகரித்துள்ளார். இதேவேளை, மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய 11 சந்தேகநபர்களும் ஊர்காவற்துறை நீதவான்மேலும் படிக்க…


திடீரென செல்வாக்கு குறைந்த François Fillon! – புதிய கருத்துக்கணிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அடுத்த ஜனாதிபதியாக வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட François Fillonஇன் செல்வாக்கு கணிசமாக குறைந்துள்ளது என புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரபல வானொலி RMC, மற்றும் Atlantico நடத்திய புதிய கருத்துக்கணிப்பில், பிரான்சில் 10இல் 7 பேர், François Fillon க்கு மாற்றாக பிறிதொரு வேட்பாளரை விரும்புகின்றனர் என தெரியவந்துள்ளது. ஜனாதிபதி போட்டியாளர்களில் 58 வீதத்துடன் அதிக வாய்ப்புகள் கொண்ட நபராக François Fillon இருக்கின்ற போதும், அவருக்கு பதிலாக மற்றுமொரு ஆளுமையான மனிதரை 69 வீதமான பிரெஞ்சு மக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் Republicans கட்சி சார்பாக François Fillon போட்டியிட்டால் 29 வீதமே வெற்றி வாய்ப்புகள் இருக்கின்றது எனவும், பிறிதொரு ஆளுமை போட்டியிடும் பட்சத்தில் 57 வீதம் வெற்றிபெற வாய்ப்புகள் உண்டு எனவும் தெரியவந்துள்ளது. François Fillon க்கு பதிலாகமேலும் படிக்க…


பரிஸ் – தரிப்பிட குற்றப்பணம் மூன்று மடங்காக அதிகரிப்பு

பரிசுக்குள் வாகன தரிப்பிடக் கட்டணங்களுக்கான குற்றப்பணம் (Parking offence) இரண்டு தொடக்கம் மூன்று மடங்குவரை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னரே இதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும், கடந்த செவ்வாய்க்கிழமை இதற்கான வாக்கெடுப்புக்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசுக்குள் ஒவ்வொரு பகுதிகளை பொறுத்து, குற்றப்பணம் இரண்டு தொடக்கம் மூன்று மடங்கு வரை அதிகரிக்கப்பட உள்ளது. 1ஆம் வட்டாரத்தில் இருந்து 11 ஆம் வட்டாரம் வரை தற்போது 17 யூரோக்களாக இருக்கும் குற்றப்பணம் 35 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது. மேலும் 12 ஆம் வட்டாரத்தில் இருந்து 20 ஆம் வட்டாரம் வரை  25 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது. வரும் ஜனவர் 1 ஆம் திகதி 2018 ஆம் ஆண்டு முதல் இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. பரிசுக்குள் மொத்தம் 150,000 வாகன தரிப்பிட பகுதிகள் ( placesமேலும் படிக்க…


10,000 அறுவை சிகிச்சைகளை செய்த 89 வயது அறுவை சிகிச்சை நிபுணர்!

ரஷ்யாவில் 89 வயது அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் இதுவரை 10,000 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதன் மூலம் உலகிலேயே பழமையான அறுவை சிகிச்சை நிபுணர் என்று பெயரெடுத்துள்ளார். மாஸ்கோவில் உள்ள Ryazan என்ற மருத்துவமனையில் பணியாற்றி வரும் Alla Ilyinichna Levushkina – யின் வயது 86 ஆகும். இவர், தனது 30 வயதில் விமான மருத்துவ சேவையின் மூலம் தனது பணியை தொடங்கினார். மருத்துவ துறை என்பது ஒரு தொழில் அல்ல, அது நமது வாழ்க்கை எனக்கூறும் இவர், தனக்கு பணி ஓய்வு என்பதே கிடையாது என கூறுகிறார். 89 வயதை கடந்துவிட்டாலும், அறுவை சிகிச்சை அறைக்குள் தெளிவான ஆற்றலுடன் செயல்பட்டு வருகிறார். அறுவை சிகிச்சை கருவிகளையும் மிகச்சரியான முறையில் கையாண்டு வருகிறார். இவர் உயரம் குறைவான நபர் என்பதால், நோயாளிகள் இவருடன் எளிதில் நெருங்கிமேலும் படிக்க…


ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தொடர்ந்த ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் சன் டைரக்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.சண்முகம் ஆகியோரை விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாறன் சகோதரர்கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு முன்வைத்த குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி நீதிபதி ஓ.பி.ஷைனி வழக்கை வியாழக்கிழமை முடித்துவைத்தார். தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் மேற்கொண்டமேலும் படிக்க…


எல்லையில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளது. இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.  ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா செக்டாரில் காட்டோ என்ற இடத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய எல்லைப்பாதுகாப்பு படையின் நிலை உள்ளது. இன்று பிற்பகலில், பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி இந்திய நிலையை குறிவைத்து துப்பாகிச் சூடு நடத்தியுள்ளனர். மேலும் கையெறி குண்டுகளை இந்திய நிலைகள் மீது வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில், இந்தியத் தரப்பில் இழப்பு எதுவும் இல்லை எனவும், இந்திய வீரர்களும் தக்க பதில் தாக்குதல்கள் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் முதன் முறையாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மீண்டும் எல்லைப் பகுதியில்மேலும் படிக்க…


ஜனாதிபதி ஒப்புதல் பெற்று ஜல்லிக்கட்டு சட்டம் அரசிதழில் வெளியீடு

தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு சட்டம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் பெற்று அரசிதழில் வெளியிடப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையால், தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. தமிழக அரசின் வற்புறுத்தலை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி மத்திய அரசு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு சுப்ரீம் கோர்ட்டு சென்றது. இதுதொடர்பான வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளிவராத நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், விலங்குகள் நல அமைப்பான பீட்டாவை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் திரண்டு போராட்டங்களை நடத்தியதால், ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், மிருகவதை தடுப்பு சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு அவசரமேலும் படிக்க…


ருமேனியா: 2.5 லட்சம் பேர் திரண்டு அரசுக்கு எதிராக போராட்டம்

ருமேனியா நாட்டில் ஊழல்வாதிகள் தப்பிக்க எளிதில் வகை செய்யும் புதிய சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து 2.5 லட்சம் பேர் ஒன்றாக திரண்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் முறைகேடு செய்பவர்கள் மீதான நடவடிக்கையை நீர்த்துப்போக செய்யும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. அநாட்டின் பிரதமர் சோரின் கிரின்டினு புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளார். புதிய சட்டத்தி்ன் மூலம் ஊழல் வழக்குகளில் தொடர்புடைய 2000 பேர் தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால், பொதுமக்கள் கடும் கோபமடைந்தனர். புதிய சட்டத்தை கண்டித்து தலைநகர் புசாரெஸ்டில் சுமார் 2.5 லட்சம் பொதுமக்கள் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை ஒடுக்க போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தலைநகர் மட்டுமின்றி முக்கிய நகரங்களிலும் அரசுக்கு எதிரானமேலும் படிக்க…


அரசியல் பட்டப்படிப்புடன் கோத்தாவின் அரசியல் பிரவேசம் : எதிர்க்கும் முன்னாள் ஜனாதிபதி

சீன பல்கலைகழக அரசியல் கற்கைநெறி சிறப்பு பட்டத்துடன்,  அடுத்த ஜனாதிபதி தேர்தலில்  கோத்தபாய ராஜபக்ஷவின், அரசியல் பிரவேசம் இருக்குமென்றால் அவரது வெற்றி நிச்சயமாகிவிடும். இருப்பினும் அவரது அரசியல் பிரவேசத்தை அவரது சகோதரர் விரும்பவில்லையென முன்னாள் வெளியுறவு தூதுவராக இருந்த கலாநிதி தயான் ஜெயதிலக கருத்து பகிர்ந்துள்ளார். மேலும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி  தேர்தலை குறிவைத்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ  சீன பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் கற்கைநெறி ஒன்றை மேற்கொள்ளவிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய, அரசியல் தேர்ச்சிக்கான பயிற்சி இல்லை என்றாலும் வெற்றி வாகை சூடுவார். அவரது ஆட்சிக்காலம், இலங்கையை வளர்ச்சி மிகு பாதைக்கு இட்டு செல்லும் என்பதில் தமக்கு நம்பிக்கை உள்ளதாகவும், 2019 ஆம் ஆண்டு பாதுகாப்பு தரப்பு கோத்தாவின் பக்கம் இருப்பர் எனும்மேலும் படிக்க…


கலிபோர்னியாவில் உள்ள ஓட்டல் அறையில் பிணமாக கிடந்த விமான பணிப்பெண்

கலிபோர்னியாவில் உள்ள ஓட்டல் அறையில் விமானப் பணிப்பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலைப் பார்த்து வந்தவர் வனேசா யாப். இவர் சிங்கப்பூரில் இருந்து கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு செல்லும் விமானத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு வந்த யாப்  தன்னுடைய ஓட்டல் அறையில் ஓய்வு எடுத்தார். பணிக்கு நேரமாகியும் அவர் ஓட்டல் அறையை விட்டு வரவே இல்லை. இதனால் விமான ஊழியர்கள் அவரைத் தேடி ஓட்டல் அறைக்கு சென்றனர். அப்போது அவர் ஓட்டல் அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவருக்கு முதலுதவிகள் அளித்த நிலையிலும் அவர் கண்விழிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவரை மருத்துவர்கள் சோதித்த போது அவர் ஏற்கனவே இறந்திருப்பது தெரியவந்தது. யாப் விமானத்தில் ஏறிய போதே அவருக்கு உடல்நிலை சரியில்லைமேலும் படிக்க…


ஜனாதிபதியின் தலைமையின் கீழ் உலக நாடுகள் மத்தியில் இலங்கையின் மதிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின்கீழ் உலக நாடுகளின் மத்தியில் இலங்கையின் மதிப்பு தற்போது தெளிவாக தெரியவந்துள்ளது என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் ஈரானிய தூதுவருக்கிடையிலான சந்திப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சர்வதேச நாடுகளிடையே எமது நாட்டுக்கு எதிரிகளும் இருந்தனர். நண்பர்களும் இருந்தனர். ஆனால் தற்போது அவ்வாறான பிரிவுகள் இல்லை. இன்று இலங்கையுடன் நண்பர்கள் மட்டுமே இருக்கின்றனர். இந்த நட்பு நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் சர்வதேச நாடுகளுடனான தொடர்பு மிகவும் வலுப்பெற்று வருகின்றதென அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த இலங்கைக்கான ஈரானிய தூதுவர் மொஹமட் செரி அமிரானி, இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்துக்கு வாழ்த்துக்களைமேலும் படிக்க…


அஜித்தின் `விவேகம்’ படம் குறித்து அறிந்திராத ஸ்வாரஸ்யமான தகவல்கள்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்தின் 57-வது படமாக உருவாகிவரும் ”விவேகம்” படத்தின் தலைப்பு, போஸ்டர் குறித்த தகவல்கள்   சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் ‘விவேகம்’ படம் மற்றும் அஜித் குறித்த ஸ்வாரஸ்யமான தகவல்களை கீழே பார்க்கலாம். 1. `வேதாளம்’ படத்தின் போது முட்டி மற்றும் தோள்பட்டை காயத்துடன் படப்பிடிப்பை தொடர்ந்த அஜித் வேதாளம் படம் ரிலீசாகும்  நேரத்தில் அறுவைசிகிச்சை செய்து கொண்டார். 2. பொதுவாக அறுவைசிகிச்சை செய்வதால் உடல் எடை அதிகரிக்கும். இந்நிலையில், ‘விவேகம்’ படத்திற்கு தயாரான அஜித் ‘விவேகம்’  பட போஸ்டரில் உள்ளபடி உடல்கட்டமைப்புக்கு வர 7 மாதங்களாக 5 முதல் 6 மணி நேரம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து 15 கிலோ  வரை உடல்எடையை குறைத்துள்ளார். 3. ஆங்கிலத்தில் V என ஆரம்பிக்கும் அஜித்தின் படத்தலைப்புகளில் ‘விவேகம்’ படமும் இணைந்துள்ளது. Vமேலும் படிக்க…


எப்போதாவது ஒரு நாள் பட்டினி கிடந்தது உண்டா? – டிரம்ப்பை கேள்வி கேட்ட 7 வயது சிறுமி

அமெரிக்காவுக்குள் நுழைய சிரிய அகதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், சிரியாவைச் சேர்ந்த 7 வயது சிறுமி அமெரிக்க அதிபர் டிரம்புக்கு காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முதல் பல நாடுகளின் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், உள்நாட்டுப் போரால் மோசமாக சிதிலமடைந்த சிரியா நாட்டில் உயிர்ப்பிழைத்து வசிக்கும் 7 வயது சிறுமி பானா அலாபத், தனது தாயாரின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சில கேள்விகளை கேட்டுள்ளார். அந்த வீடியோவில் அலாபத், “நீங்கள் என்றைக்காவது, 24 மணி நேரமும் உணவு, குடிநீர் இல்லாமல்மேலும் படிக்க…


முஸ்லிம் நாடுகளுக்கான ட்ரம்பின் தடை விரைவில் நீக்கப்பட வேண்டும்: ஐ.நா

ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் அமெரிக்காவினுள் நுழைவதற்கு ட்ரம்பினால் விதிக்கப்பட்ட தடை தாமதமின்றி, விரைவில் நீக்கப்பட வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்தோனியோ குத்ரஸ் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘தீவிரவாத ஊடுருவல்களிலிருந்து அமெரிக்காவையோ அல்லது வேறு எந்த நாட்டையோ பாதுகாப்பதற்கு இது சிறந்த வழியாக அமையாது. எனவே ட்ரம்பினால் விதிக்கப்பட்ட நுழைவு தடையானது தீவிரவாத அச்சுறுத்தல்களை சமாளிக்க சிறந்த வழியாக அமையாது. எனவே இந்த தடையை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே எனது வேண்டுகோளாக உள்ளது’ என்றார்.


தொழிநுட்பத்தை கையாளும் திறன், இளைஞர்களுக்கு ஏற்பட வேண்டும்: சம்பந்தன்

பொருளாதாரத்தை முன்னேற்றும் நாடுகளில் தொழிநுட்ப கல்வியும் பயிற்சியும் முக்கிய இடத்தை வகிக்கின்றதென தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அதனை கையாளக்கூடிய திறமை எமது இளைஞர்களுக்கும் ஏற்படவேண்டுமென தெரிவித்துள்ளார். திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் தொழில்நுட்ப கல்விப்பிரிவு கட்டடத்திற்கான அடிக்கல்லை இன்று (வியாழக்கிழமை) நாட்டிவைத்த எதிர்க்கட்சித் தலைவர், அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொழிநுட்ப முன்னேற்றத்தின் ஊடாக பல இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்;கும் என்ற ரீதியில், புதிதாக அமைக்கப்படும் தொழிநுட்ப பயிற்சி நிலையம் இப்பிரதேச மக்களுக்கு பயனுள்ளதாக அமையுமென மேலும் தெரிவித்துள்ளார். இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், வலயக்கல்விப் பணிப்பாளர் என்.விஜேந்திரன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


இலங்­கையில் புற்றுநோய் காரணமாக தினம் 4 தொடக்கம் 9 பேர் இறக்கின்றனர்.!

பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜே.எம்.டபிள்யூ. ஜயசுந்தர தகவல் “என்னால்முடியும், நம்மால் முடியும்”  என்ற தொனிப்பொருளில் இம்முறை  புற்றுநோய் தவிர்ப்பு தினம்   தொற்றா நோய் வரி­சையில் மிக முக்­கி­ய­மான  இடத்தை புற்­று­நோ­யா­னது பிடித்­துள்­ளது.  இலங்­கையில் புற்று நோய் கார­ண­மாக ஒரு நாளுக்கு நான்கு தொடக்கம் ஒன்­பது பேர் வரை இறக்­கின்­றனர் என்று பதில் சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் ஜே.எம்.டபிள்யூ. ஜய­சுந்­தர பண்­டார தெரி­வித்தார். பெப்­ர­வரி 04 ஆம் திகதி உலக  புற்­றுநோய் தினம் அனுஷ்­டிக்­கப்­படு­கி­றது. இதனை முன்­னிட்டு நேற்று சுகா­தார,போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இதனை தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில் உலகம் முழு­வதும் ஏழில் ஒரு மர­ணத்தை ஏற்­ப­டுத்­து­கின்ற கார­ணி­யாக புற்­றுநோய்  காணப்­ப­டு­கின்­றது. உலக புற்­றுநோய் அறிக்­கை­யா­னது  14.1 மில்­லியன் புதியமேலும் படிக்க…


அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ஐந்து வயது ஈரானியச் சிறுவன் தடுத்து வைப்பு!

ட்ரம்ப்பின் குடிவரவு உத்தரவையடுத்து, பாதுகாப்புக் காரணங்கள் கருதி ஐந்து வயது ஈரானியச் சிறுவனை அதிகாரிகள் தடுத்து வைத்த சம்பவம் வொஷிங்டன் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தைச் சேர்ந்தவன் இந்தச் சிறுவன். அங்கிருந்து, தனது உறவினர் ஒருவருடன் வொஷிங்டனில் உள்ள டல்லஸ் விமான நிலையத்துக்கு வந்திறங்கினான். அங்கு அவனை விசாரித்த விமான நிலைய அதிகாரிகள், அவன் அமெரிக்க குடிமகனுக்கான ஆதாரங்களை வைத்திருந்தபோதும், ஈரானிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற காரணத்தினால் தடுத்து வைக்கப்பட்டான். சிறுவனை வரவேற்கவென டல்லஸ் விமான நிலையத்துக்கு வெளியே காத்திருந்த அச்சிறுவனின் தாய் இதையறிந்து பதைபதைத்துப் போனார். ஒரு சில மணி நேரங்களின் பின் அச்சிறுவன் அவனது தாயிடம் ஒப்படைக்கப்பட்டான். இச்சம்பவம் குறித்துப் பேசிய விமான நிலைய அதிகாரிகள், அமெரிக்காவின் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஜனாதிபதி ட்ரம்ப்பின் உத்தரவைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும் என்பதன்மேலும் படிக்க…


குடியுரிமை பெற்றார் குமார் குணரட்னம்

முன்னிலை சேஷலிசக் கட்சியின் இணைப்புச் செயலாளர் குமார் குமார் குணரட்னத்திற்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குமார் குணரட்னம் இம் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளார். முன்னிலை சோஷலிச கட்சியின் குமார் குணரட்னம் உரிய முறையில் விண்ணப்பித்துருந்தால்  குடியுரிமை வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யமுடியும் என அண்மையில் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்த நிலையில் அவருக்கு தற்போது குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது, சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் குமார் குணரட்னம் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


டாக்கா உணவு விடுதி தாக்குதல் – 4 தீவிரவாதிகள் கைது

22 பேர் கொன்று குவிக்கப்பட்ட டாக்கா உணவு விடுதி தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர். வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் குல்ஷன் என்ற இடத்தில் உள்ள உணவு விடுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடித்தும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வெளிநாட்டினர் 17 பேர் உள்பட 22 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்தியப்பெண் தாரிஷி ஜெயினும் பலியானவர்களில் ஒருவர் ஆவார். இந்த தாக்குதலை தடை செய்யப்பட்ட ஜே.எம்.பி. என்று அழைக்கப்படுகிற ஜமாத்துல் முஜாகிதீன் பங்களாதேஷ் அமைப்பினர் நடத்தியதாக தெரியவந்தது. இந்த தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளை நேற்று முன்தினம் இரவு, டாக்காவில் ஜாத்ரபாரி பகுதியில் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அதிரடிப்படை போலீஸ் செய்திதொடர்பாளர் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், “டாக்கா உணவு விடுதிமேலும் படிக்க…


தென்கொரிய அதிபர் தேர்தலில் பான் கி மூன் போட்டி இல்லை – சூசக அறிவிப்பு

அரசியல் மாற்றத்துக்கு தலைமை தாங்கி வழிநடத்தும் முயற்சியை விட்டு விட முடிவு செய்து விட்டதாக பான் கி மூன் தெரிவித்துள்ளார்  தென் கொரியாவின் அதிபர் பார்க் கியுன் ஹை, தனது நெருங்கிய தோழி சோய் சூன் சில்லுடன் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இதன் காரணமாக அவர் 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டில் வழக்கு விசாரணை நடக்கிறது. அதன் முடிவில், பார்க் கியுன் ஹை பதவி இழப்பாரா அல்லது நீடிக்க அனுமதிக்கப்படுவாரா என தெரியவரும். இருப்பினும் அவர் பதவி நீக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் அதிபர் தேர்தலை அந்த நாட்டினர் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். அங்கு அதிபர் தேர்தலில் ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கி மூன் நிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில்மேலும் படிக்க…


ஆந்திர மக்களை மத்திய அரசு வஞ்சித்துவிட்டது: நடிகை ரோஜா

மத்திய பட்ஜெட் ஆந்திர மக்களுக்கு நிராசையாக இருக்கிறது. மத்திய அரசு ஆந்திர மக்களை வஞ்சித்துவிட்டது என்று நடிகை ரோஜா கூறியுள்ளார். நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநில மகளிரணி தலைவியுமான நடிகை ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த ரோஜாவிடம் நிருபர்கள் மத்திய பட்ஜெட் குறித்து கருத்து கேட்டனர். அதற்கு ரோஜா கூறியதாவது:- ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் மத்திய அரசில் அங்கம் வகிக்கிறது. அக்கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்கள் மத்திய மந்திரிகளாக உள்ளனர். ஆனால் பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை. ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்துக்கான அறிவிப்பு இல்லை. ஆனால் தெலுங்கு தேச மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், பட்ஜெட்டை பாராட்டி மேஜை தட்டுகிறார்கள். இந்த பட்ஜெட் ஆந்திர மக்களுக்கு நிராசையாக இருக்கிறது. மத்தியமேலும் படிக்க…


ஒருதலை காதலால் கொடூரம்: வகுப்பறைக்குள் நுழைந்து கல்லூரி மாணவி எரித்துக்கொலை

கேரளாவில் ஒருதலை காதலை ஏற்காததால் வகுப்பறைக்குள் நுழைந்து கல்லூரி மாணவியை எரித்துக் கொன்ற வாலிபரும் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கோட்டயம் காந்தி நகரில் தனியார் மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கோழிக்கோடு விரிபாடு பகுதியைச் சேர்ந்த லெட்சுமி(வயது21) என்பவர் 3-வது ஆண்டு பிசியோதரபி படித்து வந்தார். கொல்லம் அருகே நீண்ட கரையை சேர்ந்தவர் ஆதர்ஷ் (25). இந்த கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர் அந்த கல்லூரி அருகே பேன்சி கடை நடத்தி வந்தார். அவரது கடைக்கு மாணவி லெட்சுமி பொருட்கள் வாங்க வந்த போது அவர்கள் இருவரிடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஆதர்சுக்கு அந்த மாணவி மீது காதல் ஏற்பட்டது. அவர் தனது காதலை அவரிடம் தெரிவித்த போது அதை ஏற்க லெட்சுமி மறுத்து விட்டார். அவரிடம்மேலும் படிக்க…


என்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

திருமண விழாக்களில் என்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம் என நடிகர் வாகை சந்திரசேகரின் மகள் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். நடிகர் வாகை சந்திரசேகரின் மகள் திருமண விழா இன்று பழனியில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- இந்த திருமணத்தை சென்னையில் நடத்தாமல் பழனியில் நடத்தியதற்காக நான் வாகை சந்திரசேகருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில் சென்னையில் நடத்தி இருந்தால் தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்க வேண்டி இருக்கும். அவருடைய உடல் நலத்தை கருத்தில் கொண்டுதான் சென்னையில் நடத்தாமல் பழனியில் அவர் நடத்தி இருக்கிறார். இருந்தபோதும் தி.மு.க. தலைவர் கருணாநிதி அனுப்பி உள்ள வாழ்த்து கடிதத்தை அவரிடம் நான் வழங்கியுள்ளேன். திருமண விழாக்களில் என்னை புகழ்ந்து பேசுவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் மணமக்களை மட்டும் வாழ்த்தி பேசுமாறு தி.மு.க. நிர்வாகிகளிடம்மேலும் படிக்க…


சிறிலங்காவில் சாதகமான முன்னேற்றங்கள் – பிரான்ஸ் அதிபர்

சிறீலங்காவில் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலன்ட் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு பிரான்ஸ் அதிபர் புத்தாண்டு வரவேற்பு விருந்துபசாரம் அளித்தார். இந்நிகழ்வில் பிரான்சுக்கான சிறீலங்காத் தூதுவர் திலக் ரணவிராஜாவும் பங்கேற்றிருந்தார். இவர் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சார்பில் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டார். அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்ட மீன் ஏற்றுமதித் தடையை நீக்குவதற்கும், ஜிஎஸ்பி. வரிச்சலுகையை சிறீலங்கா மீண்டும் பெறுவதற்கு பிரான்ஸ் அளித்துவரும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதன்போது, சிறீலங்காவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை பிரெஞ்சு அதிபர் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அனைத்துலக சமூகத்துடன் சிறீலங்கா மீண்டும் தொடர்புகளை வலுப்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.


மோடி பயண செலவு ரூ.119.70 கோடி ஏர் இந்தியாவுக்கு அரசு வழங்கியது

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கு ஏர் இந்தியா விமானத்தை பயன்படுத்திய வகையில் கட்டணமாக ரூ.119.70 கோடியை பிரதமர் அலுவலகம் செலுத்தியுள்ளது. பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு இதுவரை 27 வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு விமானம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த சூழலில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடர்பான விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முன்னாள் கடற்படை வீரர் லோகேஷ் பத்ரா என்பவர் கேட்டிருந்தார். அதற்கு, பிரதமர் மோடி மேற்கொண்ட 27 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டதாக  தெரிவிக்கப்பட்டது. இதில் 8 பயணங்களுக்கு ரூ.119.70 கோடி கட்டண நிலுவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பிரதமர் அலுவலகம் செலுத்த வேண்டிய நிலுவையை தொகையை உடனடியாக கட்ட கோரி மத்திய தலைமை தகவல் ஆணையத்தில்மேலும் படிக்க…


மிருசுவில் படுகொலையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியின் மேன்முறையீட்டு விசாரணை ஏற்பு!

மிருசுவிலில் இரண்டு சிறுவர்கள் உட்பட 8 அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் மேன்முறையீட்டு மனுவை மேல் நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் நாள், மிருசுவில் தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற அப்பாவிப் பொதுமக்கள் எட்டுப்பேர் படுகொலைசெய்யப்பட்டு மலசலக் குழியில் போட்டு புதைக்கப்பட்டனர். குறித்த மக்களில் ஒருவர் தப்பிச்சென்று அடையாளம் காட்டியதில் இராணுவ அதிகாரி சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க குற்றவாளியென அடையாளம் காணப்பட்டார். இதனையடுத்து, 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் நாள் குறித்த இராணுவ அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சுனில் ரத்நாயக்க சார்பில் மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம்,மேலும் படிக்க…


சர்வதேச நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை-சீ.யோகேஸ்வரன்

சர்வதேச  நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினரின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், சிறுபான்மையின மக்களின் ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறிய அரசாங்கம், காணாமல் போனோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் அகிம்சை ரீதியான போராட்டங்களை கொச்சைப்படுத்துகின்றது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி அலைந்து. இறுதியில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடியுங்கள் என வலியுத்தி பாரிய உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டோர் வெளிநாடு சென்றிருப்பார்கள் அல்லது இறந்திருப்பார்கள் என நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்து எமது மக்களை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. இதுமேலும் படிக்க…


2017 உலகக்கிண்ணப்போட்டியில் இரண்டு கிளிநொச்சி மாணவிகள்

2017.02.17 தொடக்கம் 23 வரை பங்களாதேஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக்கக்கிண்ணப் போட்டியில் றோல் போல் விளையாட்டில் இலங்கையின் றோல் போல் தேசிய அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகனைகள் உள்வாங்கப்பட்டு அவா்கள்   போட்டியில் பங்குபற்றவுள்ளனா் கிளிநொச்சி இந்துக்கல்லூரிஉயர்தர மாணவிகளான துலக்சினி  விக்னேஸ்வரன் ,சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே குறித்த போட்டியில் பங்குபற்றுகின்றனர் அத்துடன் மிக குறுகிய காலத்திற்குள் பயிற்சிகளைப் பெற்று கடந்தவருட இறுதிப்பகுதியில்  நடைபெற்ற தேசியரீதியிலான போட்டியில் கிளிநொச்சி மாவட்ட றோல் போல் ஆண் பெண் ஆகிய இரு அணிகளும் மூன்றாம் இடத்தினைப் பெற்றதுடன் பெரியளவிலான வசதிகள் எவையும்  இன்றியே இவர்கள் குறித்த பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர் அத்துடன் குறித்த அணியினர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு கிளிநொச்சியில் இவர்களுக்கான ஒரு பிரத்தியேக உள்ளரங்கம் கூட  இல்லாதநிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது dav dav


சமரச முயற்சிகள் தோல்வி -சொந்த மண்ணை மீட்க்கும் போராட்டத்தில் தொடர்ந்தும் கேப்பாபுலவு மக்கள்!

முல்லைத்தீவில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பிலுள்ள தமது காணிகளை மீள வழங்குவதற்கு தமது நடவடிக்கைகளுக்கு  இரண்டு வாரங்களோ ஒரிரு மாத காலமோ தேவைப்படலாம். எனவே அந்த அவகாசத்தை முல்லைத்தீவு விமானப்படை தளபதி கோரிய போது மாவட்ட அரச அதிபரும் அவர்களது பதிலுக்கு கால அவகாசம் ஒன்றை வழங்குமாறும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் சமரச முயற்சிகளிலில் ஈடுபட்ட போதிலும் அது எவற்றையும் ஏற்றுக்கொள்ளாத கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முல்லைத்தீவு விமானப்படை முகாமின் இரண்டாவது பிரதான வாயில் முன்பாக முன்னெடுத்துவருகின்றனர். தமது காணிகளை தம்மிடம் மீள வழங்குமாறு வலியுறுத்தி இரண்டாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள பிலவுக்குடியிருப்பு கிராம மக்களை இன்று மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் சி.குணபாலன் மற்றும் முல்லைத்தீவு விமானப்படைத்தளபதி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்மேலும் படிக்க…


கற்பனை செய்யுங்கள்

சொர்க்கம் இல்லையென்று கற்பனை செய்யுங்கள் முயன்றால் சுலபம் தான் அந்தக் கற்பனை நமக்குக் கீழே நரகமும் இல்லை நமக்கு மேலே வெறும் வானம் தான் கற்பனை செய்யுங்கள் எல்லா மனிதரும் இன்றைப் பொழுதுக்கே வாழ்கிறார் என்று. தேசங்கள் இல்லையென்று கற்பனை செய்யுங்கள் கடினமில்லை அந்தக் கற்பனை வாழ்வதற்கு எதுவுமில்லை, கொல்வதற்கும் எதுவுமில்லை. மதமும் கூட இல்லவே இல்லை கற்பனை செய்யுங்கள் எல்லா மனிதரும் அமைதியாய் வாழ்க்கை வாழ்கிறார் என்று கனவு காண்பவன் என்றென்னைச் சொல்லலாம், ஆனால் நான் மட்டுமல்ல – நீங்களும் இணைவீர் ஒரு நாள் என்றும் உலகமே ஒன்றாய் வாழ்ந்திருக்கும் என்றும் நம்புகிறேன் நான். உடைமைகள் எதுவுமில்லையென்று கற்பனை செய்யுங்கள் முடியுமா உங்களால் என்று வியக்கிறேன். பேராசைக்கும் இடமில்லை, பசிக்கும் இடமில்லை. மனித சகோதரத்துவம் உலகு முழுமையையும் எல்லா மக்களும் பகிர்ந்து கொள்வதைக் கற்பனை செய்யுங்கள்.மேலும் படிக்க…


கை, கால் சுருக்கங்களை போக்கும் வழிமுறைகள்

முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கை, கால் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். இப்போது கை, கால் சுருக்கங்களை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.  அழகு பராமரிப்பு என்று வரும் போது, அது முகத்தில் மட்டும் இல்லை கை, கால்களும் தான் உள்ளது. ஒருவருக்கு கைகள் முதுமையை விரைவில் வெளிக்காட்டும். எனவே முகத்திற்கு எவ்வளவு பராமரிப்புக்களைக் கொடுக்கிறீர்களோ, அந்த அளவில் கை, கால்களுக்கும் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். இங்கே கையில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் சிறந்த வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு, உருளைக்கிழங்கில் உள்ள அமிலம், சரும செல்களுக்கு ஊட்டமளிப்பதுடன், சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி, சரும நிறத்தை அதிகரிப்பதோடு, சரும சுருக்கங்களையும் போக்கும். மேலும் உருளைக்கிழங்கு சருமத்தை மென்மையாக்கும். உருளைக்கிழங்கை வேக அரைத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஒயில், 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்துமேலும் படிக்க…


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !