Main Menu

TikTok செயலியைத் தடைசெய்ய வழிவகுக்கும் டிரம்ப்பின் உத்தரவை எதிர்த்து வழக்கு

TikTok செயலியைத் தடைசெய்ய வழிவகுக்கும் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் TikTok வழக்கு தொடுக்கவுள்ளது.

தேசியப் பாதுகாப்பிற்கு TikTok செயலி மிரட்டலாய் உள்ளதாக அமெரிக்கா குறைகூறி வருகிறது.

சீனாவின் TikTok செயலியின் உரிமையாளரான ByteDance நிறுவனத்துடனான வர்த்தகப் பரிமாற்றங்களைத் தடைசெய்யும் செயலாக்க உத்தரவில் அதிபர் டிரம்ப் இம்மாதம் 6ஆம் தேதி கையெழுத்திட்டார்.

45 நாள்களுக்குள் அமெரிக்கர்கள் ByteDance நிறுவனத்துடனான வர்த்தகப் பரிமாற்றங்களை முடித்துகொள்ளவேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.