Symex நிறுவனத்தின் கைகழுவும் திரவம் பாவனைக்குத் தடை
கொரோனாத் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக உபயோகிக்கப்படும் கைகழுவும் திரவமான Gel hydroalcoolique இல் குறிப்பிட்ட அளவிற்கு அல்கோலான எத்தனோல் (éthanol) கட்டாயம் கலந்திருந்தால் மட்டுமே அவை, கைகளில் உள்ள கிருமிகளை அழிக்கும் சக்தி வாய்ந்தவையாக இருக்கும்.
ஆனால் Symex எனும் நிறுவனம் தாயரித்து, 30ml, 60ml, மற்றும் 100ml போத்தல்களில் விற்பனை செய்யும் Gel hydroalcoolique இல் மிகவும் குறைந்த அளவான எத்தனோல் மட்டுமே கலக்கப்பட்டுள்ளது. இதனால் இவை கிருமிகளை அழித்துச் சுத்திகரிக்கும் ஆற்லற்றவை என பிரான்சின், வியாபாரப் போட்டி- நுகர்வோர் விவகாரங்கள் – மோசடித் தடுப்புத் தலைமை இயக்குநரகமான DGCCRF (la Direction générale de la concurrence, de la consommation et de la répression des fraudes)அறிவித்துள்ளது.
இந்தத் திரவங்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதுடன், நீங்கள் எற்கனவே கொள்வனவு செய்திருந்தால், அதை வாங்கிய கடையில் திரும்பக் கொடுத்துப் பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.