SNCF தொழிலாளர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம்! – மோசமான போக்குவரத்து தடை!

SNCF தொடரூந்து தொழிலாளர்களின் தொடர் பணி பகிஷ்கரிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமையும் தொடர்கின்றது. 48 வீத சேவைகள் தடங்கலுக்குள்ளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை 20.00 மணிக்கு ஆரம்பித்த இந்த பணி பகிஷ்கரிப்பு, நாளை செவ்வாய்க்கிழமை காலை 7.55 நிறைவுக்கு வருகிறது.  SNCF இன் துணை பொதுச்செயலாளர் Mathias Vicherat நேற்று வழங்கியிருந்த பேட்டியில் ‘கடந்த ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெற்றிருந்த போக்குவரத்து தடையை விட அதிகமான தடை ஏற்பட உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.  ஐந்தில் ஒரு TGV மற்றும் Intercités சேவைகள் மாத்திரமே இயங்கும். 140,000 பயணிகளுக்கு முன்பதிவுகளை இரத்துச் செய்துள்ளதாக மின்னஞ்சல் மூலம் SNCF அறிவித்துள்ளது.
RER சேவைகளில் அனைத்து வழிகளிலும் பாதிக்கு மேற்பட்ட சேவைகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பணி பகிஷ்கரிப்பு 36 நாட்களுக்கு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


(மேலும் படிக்க) »



© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !