Main Menu

Seine-et-Marne எண்ணைக் கிணறு தோண்டும் பணி -ஆன் இதால்கோ கடுமையான விமர்சனம்

Seine-et-Marne  மாவட்டத்தில் எண்ணைக் கிணறு தோண்டும் பணி இடம்பெற்று வருகிறமை அறிந்ததே. இந்நிலையில் அதனை விரிவுபடுத்துவதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. 

vallée du Lunain பள்ளத்தாக்கு வரை தோண்டுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. 2034 ஆம் ஆண்டு வரை இந்த பகுதியை தோண்டுவதற்கான அனுமதியை Bridge Energies எனும் நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது. Seine-et-Marne மாவட்டத்தில் ஏற்கனவே மூன்று கிணறுகள் தோண்டப்பட்ட நிலையில், தற்போது மேலும் 53 கிலோமீற்றர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை Elisabeth Borne பிரதமராக இருந்தபோது வழங்கியிருந்தார்.

தற்போது Villemer மற்றும் Villeron (77) பகுதிகளில் தோண்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இல் து பிரான்சுக்குள் குடிநீர் பிரச்சனையை இந்த ஆழ் துளைக் கிணறுகள் ஏற்படுத்தும் எனவும், தண்ணீர்ப்படுகைகளை திசைமாற்றும் அல்லது முற்றாக மாசுபடுத்தும் / நிறுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இதற்கு கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

பகிரவும்...
0Shares