Saint-Lazare நிலையம் தடைப்பட்டதால் Gare du Nord இல் கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளம்!

இன்று புதன்கிழமை காலை முதல் Saint-Lazare நிலையத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால், கார்-து-நோரில் மக்கள் வெள்ளம் கட்டுக்கடங்காமல் திரண்டுள்ளது.
 கார்-து-நோர் நிலையத்தில் காலையில் இருந்தே வழக்கத்து மாறாக அதிகளவிலான பயணிகள் திரண்டுள்ளதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. முன்னதாக Paris Saint-Lazare நிலையத்தில் இருந்து La Garenne Colombes வரையான சேவைகளும்,  La Défense Grande Arche வரையான சேவைகளும் முற்றாக தடைப்படுள்ளதை தொடர்ந்து, பயணிகள் கார்-து-நோரில் குவிந்துள்ளனர்.
காலையில் இருந்து கார்-து-நோரில் இருந்து புறப்படும் அனைத்து தொடரூந்துகளும் முற்றாக பயணிகளால் நிரப்பப்பட்டே செல்வதாகவும் தெரிய வருகிறது.
தவிர, Paris Saint-Lazare போக்குவரத்து தடை குறித்த மேலதிக தகவல்கள் எமது இணையத்தில் தொடர்ந்தும் வெளியாகும்.





© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !