Main Menu

RSA வருமானம் பெறுபவர்கள் வேலை தேடுவோர் பட்டியலில் பதிவு

பிரான்சில் வருமானம் குறைந்த அல்லது வருமானமே இல்லாத 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் அரச கொடுப்பனவான ‘ Revenu de solidarité active (RSA) பெற்றுவந்தனர். இதனை பெறுபவர்களின் தரவுகள் caisse de allocation familiale (CAF) மட்டுமே இருந்து வந்தது இதனால் அவர்கள் வேலை தேடுவதற்கான முன்மொழிவுகள் இன்றி இருந்து வந்தனர்.

கடந்த ஆண்டில் இருந்து அவர்களை வேலை தேடுபவர்களுக்கான அமைப்பான, முன்பு ‘Pôle Emploi’ என அழைக்கப்பட்டு இன்று France Travail என அழைக்கப்படும் அமைப்பில் கட்டாயமாக அனைவரும் பதியப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 1ம் திகதியில் இருந்து அவை இறுக்கமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 1.2 மில்லியன் பேர் கட்டாயமாக வேலை தேடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 15 முதல் 20 மணிநேர நடவடைக்கையிலும் அவர்கள் ஈடுபட வேண்டும் அத்தோடு தொழில்சார் நேர்காணல்கள் பயிற்சி அமர்வுகள் போன்றவற்றிற்கு அவர்கள் பிரசன்னமாக வேண்டும். மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்களுக்கு கொடுப்பனவுகள் இடை நிறுத்தப்படும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் சில விட்டுக்கொடுப்புகளும் உண்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் 12 வயதுக்கு குறைந்த குழந்தைகளை கொண்ட ஒற்றை பெற்றோர்களுக்கும் இந்த விட்டுக்கொடுப்புகள் இருக்கும். எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. RSA கொடுப்பனவு தனி நபருக்கு 635€ யூரோக்களும், இரண்டு 18 வயதுக்கு குறைந்த பிள்ளைகளைக் கொண்ட பெற்றோருக்கு 1335€ யூரோக்களும் வழங்கப்படுகிறது.

 

பகிரவும்...
0Shares