Main Menu

Républicains கட்சித்தலைவர் ஆகிறார் Bruno Retailleau

Républicains கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்குரிய வாக்கெடுப்பு இடம்பெற்று, அதில் 74.31% சதவீத வாக்குகளைப் பெற்று அக்கட்சியின் தலைவர் ஆகிறார் தற்போதைய உள்துறை அமைச்சர் Bruno Retailleau.

மே 18, நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர்களது கட்சி அலுவலகத்தில் இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது. கட்சிக்குள் பெரிதும் செல்வாக்குள்ள நபராக அவர் மாறியுள்ளார். அதை அடுத்து, அக்கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராகவும் அவர் களம் காண உள்ளார்.

வலதுசாரி கட்சியான Républicains யில் அவர் கடந்த 2012 ஆம் ஆண்டு இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares