Main Menu

Paracetamol வாங்குவதில் கட்டுப்பாடு

இன்று புதன்கிழமை முதல் மருந்தகங்களில் Paracetamol விற்பனையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  

கொரோனா வைரசின் ஆரம்ப கட்ட அறிகுறிகளுக்காக பயன்படுத்தும் Paracetamol மருந்துக்கு இந்த கட்டுப்பாடு இன்று முதல் விதிக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவருக்கு ஒரு பெட்டி மாத்திரமே விற்கப்படும். காய்ச்சல் அல்லது உடல்வலி இருந்தால் அவருக்கு இரண்டு பெட்டிகள் வழங்கப்படும் தேசிய மருந்தக தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம் ANSM (Agence Nationale de Sécurité du Médicament et des Produits de Santé) இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

 இந்த கட்டுப்பாடு 500mg மற்றும் 1000mg இரண்டுக்கும் பொருந்தும். 

ஆனால் மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை என சுகாதார அமைச்சர் Olivier Véran உறுதியளித்துள்ளார்.  கொரோனா வைரசுக்கு ( COVID -19) எதிராக Paracetamol பயன்படுத்துவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் அமைச்சர் Olivier Véran அறிவித்துள்ளார்.