Notre-Dame தேவாலயத்தை 5ஆண்டில் புனரமைக்க பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்
பிரான்ஸில் அண்மைத் தீச் சம்பவத்தில் சேதமடைந்த Notre-Dame தேவாலயத்தை 5ஆண்டில் புனரமைப்பது தொடர்பான சட்டத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துவது அதன் நோக்கம்.
பாரிஸிலுள்ள அந்தத் தேவாலயம் சென்ற மாதம் மூண்ட தீயில் பலத்த சேதமுற்றது.
கட்டி முடிக்கப்படுவதற்கு 200 ஆண்டுகள் ஆன அந்தத் தேவாலயத்தை, ஐந்தே ஆண்டில் புனரமைக்க வகைசெய்யும் சட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.
தேவாலயத்தின் புனரமைப்புக்கு, இதுவரை ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.