Miss France 2019 ஆக Tahiti யின் அழகியான Vaimalama Chaves தெரிவு

நேற்றைய தினம் பிரான்சில் 89வது அழகிப் போட்டி நேற்றுச் சனிக்கிழமை, 2019 நடைபெற்றது.

இப் போட்டியில் முப்பது அழகிகள் பங்கு பெற்றனர். இப் போட்டியில் இம் முறை முதல் தடவையாக பெண் நடுநிலையாளர்கள் பங்கெடுத்துக் கொண்டமை குறிப்பிடத் தக்கது . இப்போட்டியில் பங்குபற்றிய 24 வயதுடைய Tahiti யின் அழகியான வைமாலம்மா சாவேஸ் (Vaimalama Chaves) நேற்றுச் சனிக்கிழமை, 2019 ஆம் ஆண்டிற்கான பிரான்சின் அழகியாக (Miss France 2019)  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

1999 ஆம் ஆண்டு தஹிட்டியின்(Tahiti) Mareva Galanter பிரான்சின் அழகியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், மீண்டும் தற்போது, வைமாலம்மா சாவேஸ் பிரான்சின் அழகியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !