#MeToo விவகாரம்: வைரமுத்து பற்றி மனம் திறந்த மலேசியா வாசுதேவனின் மருமகள்! (காணொளி)

பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து #MeToo என்ற ஹேஷ்டேகின் மூலம் பதிவிட்டு வருகின்றார்கள்.
உலக அளவில் இது பிரபலமாகி வருகின்றது. இந்தியாவின் மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் இந்த சர்ச்சையினால் சிக்கி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தநிலையில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி #MeToo எனும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து கூறியிருந்தார். தற்போது சின்மயிக்கு ஆதரவாக மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகளான ஹேமமாலினி தனது பேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய ஆதரவை தொரிவித்துள்ளார்.

மேலும், அந்த பதிவில் தமிழ்த் திரையுலகம் ஏன் சின்மயிக்கு ஆதரவாக இல்லை என்பது எனக்குப் புரியவில்லை. வைரமுத்து ஒன்றும் துறவி இல்லை என்பது தமிழ் திரையுலகினருக்கு தெரியும் என்பது தெரிந்தவென்று. ஆனால் சின்மயி ஏன் இதை பத்து வருடங்களுக்கு முன் சொல்லவில்லை என்று ஏன் நீங்கள் கேட்க வேண்டும்.

இப்போது அவர் புகார் தொரிவித்துள்ளார். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும். நாம் ஏன் வைரமுத்துவை கேள்வி கேட்பதில்லை? சமூகம் ஏன் குற்றம் சாட்டப்பட்டவரை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவர்களை கேள்வி கேட்கின்றது? என்று தனது ஆதங்கத்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“நான் தெதலைக்காட்சி ஒன்றில் பணியிலிருந்தபோது வைரமுத்து அங்கு வேலை செய்த ஒரு இளம் தொகுப்பாளரைத் தொடர்பு கொள்ள முயற்சித்ததை நான் அறிந்துள்ளேன். அவரைப் பற்றி பத்து வருடங்களுக்கு மேலாக பல சமூக வலைத்தளங்களில் பேசியிருக்கின்றேன். குரலற்றவர்களின் குரலாக ஒலித்த சின்மயிக்கு தலைவணங்குகின்றேன். இந்தத் துறையை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தருணம் இது” என்று தனது பேஸ்புக் பக்கத்தில் வாசுதேவனின் மருமகளான ஹேமமாலினி தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !