#MeToo விவகாரம்: சின்மயியின் கணவர் ஆதரவு!

கவிஞர் வைரமுத்து மற்றும் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிவரும் சின்மயிக்கு அவருடைய கணவர் ராகுல் ரவீந்திரன் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

பாடகி சின்மயி சில நாட்களுக்கு முன்னர் கவிஞர் வைரமுத்து மீது #MeToo மூலம் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார். 14 வருடங்களுக்கு முன் இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக வெளிநாடு சென்றிருந்த போது தன்னை தனியாக அறைக்கு வர சொன்னார் என்று சின்மயி தொரிவித் குறித்த விடயம் கோலிவுட் திலரப்பட உலகில் பல சர்ச்சைகளை எழுப்பியது.

இந்தநிலையில் பல பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீற்ல்களை சின்மயி மூலமாக#MeToo  எனும் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் சின்மயிக்கு பலத்த ஆதரவும் கடுமையான எதிர்ப்புக்களும் வருகின்ற நிலையில் #MeToo  குறித்து சின்மயியின் அம்மா தொலைக்காட்சி செவ்விகளில் என் மகள் சின்மயி கூறுவது உண்மை தான் என்று விளக்கமளித்துள்ளார். ஆனால் வைரமுத்துவுக்கு நெருக்கமான சிலர் இது ஆண்டாள் விவகாரத்துக்கான பழிவாங்கும் நடவடிக்கைகள்  என கூறி வருகின்றனர்.

#MeToo  குறித்து வைரமுத்து,  சின்மயி கூறும் குற்றச்சாட்டு பொய்யானது. வழக்கு தொடுத்தால் சந்திக்க காத்திருக்கிறேன் என்று காணொளி மூலம் மறுப்பு தெரிவித்திருக்கின்றார்.

இந்த #MeToo விவகாரம் நீண்டு கொண்டே போகின்றது.

இந்த நிலையில் #MeToo விவகாரம் குறித்து இதுவரை பேசாமல் இருந்த சின்மயியின் கணவர் நடிகர் ராகுல் இப்போது சின்மய்யிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தனது டுவிட்டரில் ‘இந்த விவகாரத்தில் வேலை இல்லாத சிலர் என்னை தொந்தரவு செய்து வருகின்றனர். என்னுடைய மனைவி உங்களை அசௌரியத்துக்கு ஆளாக்கியிருக்கிறாள். ஏனென்றால் அவள் ஒரு தைரியமான அதிசயப் பிறவி. உங்கள் போலிக் கௌரவத்தை அவள் உடைத்து விடுவாள் என நீங்கள் பயப்படலாம். அது உங்கள் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு. உங்களுக்கு விருப்பம் இருககின்றதோ இல்லையோ உலகம் சமநிலையை நோக்கி மாறிக்கொண்டு வருகின்றது. அதுவரை இதுபோன்ற குரல்கள் கேட்டுகொண்டேதான் இருக்கும்.’ என்று தனத டுவிட்டர் பக்கத்தின் ஊடாக தெரிவித்துள்ளார்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !