Marseille நகரில் ஆபத்து நிலையில் உள்ள 100 கட்டிட்டங்கள் கண்டுபிடிப்பு!

நவம்பர் மாத ஆரம்பத்தில் மார்செயில் இடம்பெற்ற கட்டிட இடிபாட்டில் எட்டுப்பேர் சாவடைந்திருந்த நிலையில், தற்போது மேலும் 100 கட்டிடங்கள் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை மார்செ நகர மண்டபத்தினால் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் பரவலாக 100 கட்டிடங்கள் நொருங்கும் நிலையில் மிக ஆபத்தான நிலையில் உள்ளது. நவம்பர் 5 ஆம் திகதி rue d’Aubagne இல் இடம்பெற்ற கட்டிட இடிபாட்டைத் தொடர்ந்து, மீதமுள்ள கட்டிடங்கள் பல தர நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதன் முடிவில் 200 வீடுகளில் இருந்து 1,600 பேர் இடப்பெயர்வு செய்யப்பட்டு வெவ்வேறு பகுதிகளில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். தற்போது இக்கட்டிடங்களில் 100 கட்டிடங்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், இக்கட்டத்தின் திருத்த வேலைகளை இரண்டு மாத கால தவணைக்குள் மேற்கொள்ளுமாறு ஆணையிடபப்ட்டுள்ளது.
வெளியேற்றப்பட்டவர்களில் 318 பேர் தங்களது வீடுகளுக்கு திரும்பலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 79 பேர் தங்களது வீட்டு ஒப்பந்தத்தை தற்காலிக ஒப்பந்தமாக மாற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்டவர்களில் சிலர் மார்செ நகர  மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !